Latest Updates
-
இன்றைய ராசிபலன் 03 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கவலை அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்...! -
ஒரே நேரத்தில் வக்ர நிலையில் 4 கிரகங்கள்: மார்ச் 04 முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமாக இருக்கணும்.. -
30 ஆண்டுக்கு பின் உருவாகும் கேந்திர திரிகோண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகிறது...! -
கருப்பான முகத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப கடலை மாவை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
கல்யாண பந்தி உருளை பட்டை மசாலா ரெசிபி... இதை செஞ்சு பாருங்க... சாம்பார், ரசம் சாதத்துக்கு பட்டாசா இருக்கும்... -
1 கப் மீல் மேக்கர் இருந்தா.. சப்பாத்திக்கு அசைவ சுவையில் சூப்பர் சைடு டிஷ் செய்யலாம்.. எப்படின்னு பாருங்க.. -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் ரொம்ப ஈகோ பிடித்தவர்களாக இருப்பார்களாம்... நீங்க பிறந்த மாதம் இதுல இருக்கா? -
ரத்னா கபே பேமஸ் சாம்பார் ரெசிபி...இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க..எல்லோரும் 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க! -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு 30 வயதிற்கு மேல் சனி பகவானின் ஆசியால் வெற்றியும், பணமும் குவியும்.. -
120 ஆண்டுக்கு பின் உருவாகும் மீனத்தில் உருவாகும் ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுதாம்!
120 ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை தீர்க்கப்படாத கொடூரமான மர்ம கொலைவழக்கு... இது சினிமாவாகவும் வந்திருக்கு...!
கொலைகள் எப்பொழுதும் மனித குலத்திற்கு எதிரானவையாகவே இருக்கிறது. ஒரு உயிரை எடுக்கும் உரிமை எப்போதும் யாருக்கும் இல்லை. வரலாற்றில் நடந்துள்ள சில கொலைகள் வெறும் கொலை என்பதை விட மோசமானவையாக இருந்தது.
இந்த கொலைகள் கொடூரமானவை, அவை செய்யப்பட்ட விதமும், அவை சமூகத்தில் ஏற்படுத்திய பாதிப்பும் கற்பனை செய்ய முடியாதவை. இந்த குற்றங்கள் சமூகங்களை திகிலடையச் செய்தன மற்றும் காவல்துறையை தடுமாறச் செய்தன.

இதில் மேலும் மோசமானது என்னவென்றால் பல தசாப்தங்கள் கடந்த பிறகும் இந்த கொலைகளை யார் செய்தார்கள் என்பதை இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த கொலைகளை யார் செய்தார்கள்? எப்படி செய்தார்கள்? எதற்காக செய்தார்கள்? என்பது இன்றுவரை விடைதெரியாத மர்மமாகவே இருந்து வருகிறது.
ஜாக் தி ரிப்பர்(Jack the ripper)
உலகில் மிகவும் பிரபலமான தொடர் கொலையாளி மர்மம் என்றால் அது இதுவாகத்தான் இருக்கும், லண்டனில் 1888 இல் நடந்த இந்த கொலைகள் அனைத்து காலகட்டத்திலும் மிகவும் பிரபலமான ஒரு தொடர் கொலையாக இருக்கும்.
இந்த தொடர் கொலைகள் விபச்சாரிகளை குறிவைத்து நடத்தப்பட்டது, அவர்களின் உடல்கள் கொடூரமாக சிதைக்கப்பட்டன மற்றும் ஊடகங்களிளுக்கு கிடைத்த ஒரு கடிதத்தில் 'ஜாக்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. செய்தித்தாள்களின் கூடுதல் கவனம் மூலம் இந்த கொலைகள் லகளவில் பிரபலமடைந்தன. இது புத்தகங்கள், நாடகங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் என பல வடிவங்களில் வெளிவந்தது, ஆனால் அந்த ஜாக் யாரென்று இன்றுவரை தெரியவில்லை.
சோடியாக் கில்லர்(zodiac killer)
1960-களின் பிற்பகுதியில், சான் பிரான்சிஸ்கோ இரண்டு இளைஞர்களின் கொலையால் அதிர்ந்தது, ஆனால் கொலையாளி யாரென்று கண்டுபிடிப்பதற்குப் பதிலாக, கொலையாளி உள்ளூர் செய்தித்தாளில் வெளியிட மறைக்கப்பட்ட செய்திகளை கொண்ட காவல் துறைக்கு அனுப்பினார்.
இதனைத் தொடர்ந்து மேலும் பல கொலைகள் நடந்தன, அதில் சோடியாக் கில்லர் தொடர்ந்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார், மேலும் அவர் போன் கால் மூலமும் தன்னுடைய குரலை பதிவு செய்தார், ஆனால் இறுதிவரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது உலக மீடியாக்களின் மிகவும் கவனத்தை ஈர்த்தது, இந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ஜேக் கில்லென்ஹால், மார்க் ருஃபாலோ மற்றும் ராபர்ட் டவுனி ஜூனியர் நடித்த ஹாலிவுட் திரைப்படம் உருவாக்கப்பட்டது.
மேரி ரோகெட்டின் கொலை
1841, பாரிஸில், ஹட்சன் ஆற்றில் ஒரு இளம் பெண்ணின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. நியூயார்க்கின் டவுன்டவுனில் உள்ள புகையிலை கடையில் பணிபுரிந்த 'அழகான சிகார் கேர்ள்' மேரி ரோகெட் என அவர் அடையாளம் காணப்பட்டார்.
அவரது அழகு அவருக்கு சினிமா நட்சத்திரம் போல புகழை தந்தது, மேலும் அவரது மரணத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் எழுத்தாளர் எட்கர் ஆலன் போவின் கவனத்தை ஈர்த்தது, அவர் தனது நாவலான 'தி மிஸ்டரி ஆஃப் மேரி ரோஜெட்' இல் இந்த கொலையை மேலும் பிரபலப்படுத்தினார். அவர் தனது எழுத்தின் மூலம் இந்த மர்மத்தைத் தீர்க்க முயன்றார், ஆனால் இந்த வழக்கு ஒருபோதும் தீர்க்கப்படவில்லை.
டுபக் ஷாகுர்(Tupac Shakur)
நெவாடாவின் லாஸ் வேகாஸில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 90களின் மிகவும் பிரபலமான ராப்பராக அறியப்பட்ட இசைக்கலைஞர் டுபக் ஷகுர் கொல்லப்பட்டார். அவர் துப்பாக்கிச் சூட்டில் உயிர் பிழைத்தார், ஆனால் 6 நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் மர்மமான முறையில் இறந்தார்.
ஷாகுர் இன்னும் உயிருடன் இருப்பதாகவும், தலைமறைவாக இருப்பதாகவும் பல கதைகளை வெளிவந்தன, ஆனால் அவை ஒருபோதும் நிரூபிக்கப்படவில்லை மற்றும் அவரது மரணத்தைச் சுற்றியுள்ள மர்மமும் இன்றுவரை விலகவில்லை.
வார்விக்ஷயரின் மாந்திரீகம்(Witchcraft in Warwickshire)
இந்த சம்பவம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்தாக தோன்றலாம், ஆனால் இந்தக் கொலை 1945 காதலர் தினத்தன்று நடந்தது, சார்லஸ் வால்டன் என்பவரின் தலை அவரது உடலில் இருந்து கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதியில் வசிப்பவர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் இதைப்பற்றி போலீசாரிடம் பேச தயங்கினார்கள், பின்னர் அவர்கள் மர்மமான முறையில் நோய்வாய்ப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த அதிகாரி இது சூனியக்காரர்களின் வேலையாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டி இந்த வழக்கை முடித்து விட்டார், ஆனால் இந்த கொலை மற்றும் மர்மமான நோய்க்கு பின்னால் இருக்கும் மர்மம் இன்றுவரை தீர்க்கப்படவில்லை.
தி பிளாக் டேலியா(The Black Dahlia)
பிளாக் டேலியா எப்போதும் அத்தகைய வசீகரிக்கும் தலைப்பால் அறியப்படவில்லை. அவர் எலிசபெத் ஷார்ட் என்று அறியப்பட்டார், மேலும் அவர் 1947 இல் லாஸ் ஏஞ்சல்ஸில் கொலை செய்யப்பட்ட பிறகுதான் பிளாக் டேலியா என்று அறியப்பட்டார். அவரின் தலைமுடியின் நிறத்திற்காக அவர் பிளாக் டேலியா என்று அழைக்கப்பட்டார்.
இந்த இளம் நடிகையை கொலை செய்தவர் யார் என்று இன்றுவரை கண்டறியப்படவில்லை. ஆனால் அவரது உடல் சிதைக்கப்பட்ட விதத்தை கருத்தில் கொண்டு, அது அறுவை சிகிச்சை தெரிந்த ஒருவராக இருக்கலாம் என்று போலீசார் இன்னும் கருதுகின்றனர். 150க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களை போலீசார் விசாரித்தனர், ஆனால் அந்த கொலையாளி யார் என்பது இப்போதும் மர்மமாகவே உள்ளது.



Click it and Unblock the Notifications












