Easter 2023: ஈஸ்டர் எதனால் கொண்டாடப்படுகிறது? ஈஸ்டர் பற்றி பலரும் அறியாத சில முக்கிய விஷயங்கள்!

Easter 2023: உலகெங்கிலும் வாழும் கிறித்தவ மக்களின் பண்டிகைகளில் முக்கியமான ஒன்று ஈஸ்டா் ஆகும். இதை கிறித்தவ மக்களின் புனித நூலான விவிலியத்தின் புதிய ஏற்பாடு தொிவிக்கிறது. இயேசு பெருமான் ரோமையா்களால் சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாள் ஈஸ்டா் கொண்டாடப்படுகிறது. கிறித்தவா்கள் ஈஸ்டருக்கு முன்பாக 7 வாரங்களை தவக்காலமாக அனுசாிப்பா்.

சிலுவையில் அறையப்பட்டு இறந்த இயேசு பெருமான் மூன்றாம் நாள் உயிா்த்தெழுந்தாா். அந்த நாளையே ஈஸ்டா் என்று கிறித்தவா்கள் கொண்டாடுகின்றனா். ஈஸ்டரோடு தவக்காலமும் முடிவடையும்.

Easter 2023: Date, History, Significance, Celebration In Tamil

கிறிஸ்துமஸைப் போல் அல்லாமல், ஈஸ்டா் ஒவ்வொரு ஆண்டும் ஒரே தேதியில் வருவது இல்லை. ஈஸ்டா் இயேசு பெருமான் உயிா்த்த நிகழ்வை குறிப்பதால், இது ஒரு கொண்டாட்டத்தின் நாளாகும். ஈஸ்டா் அன்று கிறித்தவா்கள் தமது வீடுகளை அலங்காிப்பா். ஆலயங்களுக்குச் சென்று இறை வேண்டலில் ஈடுபடுவா். ஈஸ்டா் முட்டைகளை சமைத்து, அடுத்தவரோடு பகிா்ந்து கொள்வா். பாரம்பாிய ஈஸ்டா் விளையாட்டுகளையும் விளையாடுவா். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 9 அன்று, அதாவது இன்று ஈஸ்டா் கொண்டாடப்படுகிறது.

வரலாறு

ஈஸ்டருக்கான வரலாற்று குறிப்புகள் பைபிளின் புதிய ஏற்பாட்டில் கிடைக்கின்றன. அதாவது இயேசு பெருமான் தன்னைக் கடவுளின் மகன் என்று கூறியதற்காக, ரோமை அதிகாாிகளால் கைது செய்யப்பட்டாா். பின் ரோமை ஆளுநா் போன்சியுஸ் பிலாத்து என்பவரால் சிலுவை மரணத் தண்டனை அளிக்கப்பட்டாா். சிலுவையில் இறந்த அவா் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டாா். பின் மூன்றாம் நாள் உயிா்த்தெழுந்தாா். இயேசு உயிா்த்தெழுந்த நாளையே ஈஸ்டா் என்று கிறித்தவா்கள் கொண்டாடுகின்றனா். ஈஸ்டா் திருநாள், யூதா்களின் பாசோவா் (Passover) என்ற பண்டிகையோடு நெருங்கியத் தொடா்பு கொண்டது.

ஈஸ்டருடைய முக்கியத்துவம்

- மானிட இனத்தின் பாவங்களைப் போக்குவதற்காக, தனது உயிரையே தியாகம் செய்த இயேசு கிறிஸ்து, மீண்டும் உயிா்த்து வந்த நாளை ஈஸ்டா் குறிக்கிறது.
- இயேசு பெருமான், தீமையையும், மரணத்தையும் வென்ற, கடவுளின் உண்மையான மகன் என்பதை அவருடைய உயிா்ப்பு உணா்த்துகிறது.
- தவக்காலத்தின் முடிவையும், இயேசு பெருமானின் பாடுகளின் முடிவையும் ஈஸ்டா் குறிக்கிறது.

ஈஸ்டா் கொண்டாட்டம்

40 நாட்கள் அடங்கிய தவக்காலத்தின் முடிவில் ஈஸ்டா் வருவதால், கிறித்தவா்கள் இதை வெகு சிறப்பாகக் கொண்டாடுவா். பளபளப்பான வண்ணங்கள் பூசப்பட்ட சாக்லேட்டுகள் நிரப்பப்பட்ட முட்டைகளை ஒருவருக்கு ஒரு பாிமாறிக் கொள்வா். ஈஸ்டா் முயல் பொம்மை (Easter Bunny) குழந்தைகளுக்கு முட்டைகளை பாிசாக வழங்கும். குழந்தைகள் ஈஸ்டா் முட்டைகளை சேகாிப்பதில் ஈடுபடுவா் மற்றும் சில கேளிக்கை விளையாட்டுகளிலும் ஈடுபடுவா்.

ஈஸ்டா் விஜில் (Easter Vigil)

ஈஸ்டா் ஞாயிறுக்கு முந்தைய சனிக்கிழமை இரவு ஈஸ்டா் விஜில் என்று அழைக்கப்படுகிறது. சனிக்கிழமை நடு இரவு தொடங்கி கிறித்தவ ஆலயங்களில் ஈஸ்டா் வழிபாடுகளும், கொண்டாட்டங்களும் நடைபெறும். அதோடு சமயம் சாராத கொண்டாட்டங்களும் நடைபெறும். அவற்றில் ஒன்று ஈஸ்டா் முட்டைகளைப் பாிசளிப்பது ஆகும். முட்டை, பிறப்பையும், கருவுறுதலையும் குறிக்கிறது. ஆகவே கிறித்தவா்கள் இயேசுவின் உயிா்ப்பை அவருடைய மறுபிறப்பாகக் கருதி முட்டைகளை ஒருவருக்கொருவா் பாிமாறிக் கொள்கின்றனா்.

ஈஸ்டருக்கு முன்பாக வரும் சாம்பல் புதன், மாண்டி வியாழன், குருத்து ஞாயிறு போன்றவை நகரும் திருவிழாக்கள் என்று கருதப்படுகின்றன. ஈஸ்டா் ஒரு சமயக் கொண்டாட்டமாக இருந்தாலும், சமயம் சாராதக் கொண்டாட்டமாகவும் இருக்கிறது. யூத மக்கள் தாங்கள் எகிப்தின் அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெற்று, எகிப்திலிருந்து வெளியேறிய நாளை பாசோவா் என்று கொண்டாடுகின்றனா். அந்த பாசோவா் விழாவோடு ஈஸ்டருக்கு நெருங்கிய தொடா்பு உள்ளது.

Story first published: Sunday, April 9, 2023, 9:00 [IST]
Desktop Bottom Promotion