Latest Updates
-
குரு-செவ்வாயின் அரிய சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 13 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நினைத்தது பலிக்கும் நாளாக இருக்குமாம் -
ஜூன் 17-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
இனிமே டீ குடிக்கும் போது இந்த 5 உணவுகளை தெரியாம கூட சாப்பிடாதீங்க - இல்லனா உங்களுக்குத்தான் ஆபத்து -
இதுல உங்க கை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க உண்மையான குணத்தை சொல்றோம்.. -
அடுத்தமுறை தேங்காய் சட்னியை இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
1 கப் மீல் மேக்கர் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்களை காதலிக்க எல்லோரும் ஆசைப்படுவார்களாம் - நீங்க பிறந்த மாதம் இதுல இருக்கா?
இந்த கனவுகளில் ஒன்று வந்தால் உங்கள் வாழ்க்கையில் கெட்ட நேரமும், பெரிய இழப்பும் வரப்போகுதுனு அர்த்தமாம்...!
அனைத்து மதங்கள் மற்றும் கலாச்சாரத்திலுமே கனவுகளுக்கு என்று ஒரு முக்கியத்துவம் உள்ளது. குறிப்பாக இந்து மதத்தில், கனவுகள் ஒவ்வொன்றும் குறிப்பிடத்தக்க அர்த்தத்தைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது, மேலும் அவை எதிர்கால நிகழ்வுகளுக்கு முன்னறிவிப்பாக செயல்படுகிறது. இந்து மத நூல்களின்படி, சில கனவுகள் துரதிர்ஷ்டவசமான அல்லது சவாலான சூழல் வரப்போவதைக் குறிக்கலாம். இந்த கனவுகள் ஆழ் மனதில் இருந்து வரும் எச்சரிக்கைகள் என்று கருதப்படுகிறது.
இந்த கனவுகளை கவனிப்பதன் மூலமும், அவற்றின் அர்த்தத்தைத் தெரிந்து கொள்வதன் மூலமும், ஒருவர் வரப்போகும் சவால்களுக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொள்ளலாம். இந்த அச்சுறுத்தும் கனவுகளைப் பற்றி அறிந்திருப்பதன் மூலம், ஒருவர் தங்களையும் தங்கள் அன்புக்குரியவர்களையும் ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கலாம். எந்தெந்த கனவுகள் துரதிர்ஷ்டம் வரப்போவதை உணர்த்தும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பற்களை இழப்பது போன்ற கனவு
பற்களை இழப்பது போன்ற கனவு கெட்ட சகுனமாக கருதப்படுகிறது. இது ஒரு குடும்ப உறுப்பினர் அல்லது நேசிப்பவரின் இழப்பைக் குறிக்கிறது என்று நம்பப்படுகிறது. இந்த கனவு ஆரோக்கியத்தில் வீழ்ச்சி அல்லது நிதி பின்னடைவைக் குறிக்கலாம். இந்த கனவு இன்னும் எச்சரிக்கையாக இருக்கவும், வரவிருக்கும் சவால்களுக்கு தயாராக இருக்கவும் ஒரு எச்சரிக்கை என்று நம்பப்படுகிறது.
உயரத்திலிருந்து விழுவது போன்ற கனவு
உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு காண்பது வரப்போகிற பெரிய ஆபத்தின் அறிகுறியாகும். இது திடீர் பொருளாதார வீழ்ச்சி அல்லது அதிர்ஷ்டத்தின் இழப்பை குறிப்பதாக நம்பப்படுகிறது. இந்த கனவு நற்பெயர் இழப்பு அல்லது ஒரு முக்கியமான முயற்சியில் தோல்வி ஆகியவற்றைக் குறிக்கலாம். இந்த கனவை தங்கள் செயல்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதற்கான அறிகுறி என்று மக்கள் நம்புகிறார்கள்.
பாம்பு அல்லது பிற விஷ ஜந்துக்களை கனவில் பார்ப்பது
பாம்புகள் அல்லது பிற விஷ உயிரினங்களைக் கனவில் காண்பது கெட்ட சகுனமாகக் கருதப்படுகிறது. ஒருவரின் வாழ்க்கையில் எதிர்மறை ஆற்றல்கள் அல்லது எதிரிகள் இருப்பதை இது சமிக்ஞை செய்வதாக நம்பப்படுகிறது. மேலும் இந்த கனவு உடல்நலப் பிரச்சினை அல்லது நிதி நெருக்கடியைக் குறிக்கலாம். இந்த கனவு தங்களுக்கு தீங்கு விளைவிக்கும் எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்பதன் அறிகுறியாகும்.
தீப்பிடித்த வீட்டை கனவில் பார்ப்பது
தீப்பிடித்த வீட்டைக் கனவில் காண்பது இந்து மதத்தில் ஒரு அறிகுறியாகும். இது ஒருவரின் வாழ்க்கையில் ஒரு பெரிய நெருக்கடி அல்லது பேரழிவு ஏற்படவிருப்பதைக் குறிக்கிறது. இந்த கனவு குடும்ப மோதல் அல்லது நஷ்டத்தைக் குறிக்கலாம். வரவிருக்கும் பேரழிவைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க இந்த கனவு ஒரு எச்சரிக்கை என்று நம்பப்படுகிறது.
இறுதி சடங்கு அல்லது மரணம் பற்றிய கனவு
ஒரு இறுதி சடங்கு அல்லது மரணம் ஒரு கனவு மோசமான அறிகுறியாகும். உறவு, வேலை அல்லது வாழ்க்கையின் ஒரு கட்டம் போன்ற ஒருவரது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க ஒன்றின் முடிவை இது சமிக்ஞை செய்வதாக நம்பப்படுகிறது. இந்த கனவு ஒரு பெரிய மாற்றம் அல்லது மறுபிறப்பைக் குறிக்கலாம். இந்த கனவு மாற்றத்திற்கு தயாராக இருப்பதற்கும் கடந்த காலத்தை விட்டு வெளியேறுவதற்கும் அறிகுறியாக கருதப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
