Latest Updates
-
ஜூன் 15-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்கு நிதி, தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது! -
துவரம் பருப்பு தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 15 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நஷ்டமும், தோல்விகளும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
Aani Matha Rasipalan 2026: ஆனி மாதம் எந்த ராசிக்கு சூப்பராவும், யாருக்கு மோசமாவும் இருக்கும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. உங்களோட சூப்பர் பவர் என்னன்னு சொல்றோம்.. -
பால் இல்லாமல் ஒருவாட்டி இப்படி டீ போடுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி இந்த டீ போடுவீங்க.. -
இந்த 5 ராசிக்காரர்கள் 30 வயதிற்குள்ளேயே வாழ்வில் நல்ல உயரத்தை அடைவார்களாம்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சிக்கனையும், பூண்டையும் வெச்சு.. ஒருடைம் இந்த வறுவல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்.பிரகாஷ்! -
ஜூன் 18-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு பணம் மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.
இந்தியாவில் டாக்டர்கள் அதிகமுள்ள டாப் 10 மாநிலங்கள்..தமிழ்நாட்டில் எவ்வளவு டாக்டர்கள் இருக்கிறார்கள் தெரியுமா?
Top 10 States With Most Doctors in India: ஒவ்வொரு வருடமும் ஜூலை 1 ஆம் தேதி இந்தியாவில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இது மனிதர்களின் உயிரைக் காப்பாற்றும் ஈடில்லா பணியை திறம்பட செய்யும் மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, தியாகங்கள் மற்றும் சேவையை அங்கீகரிக்கும் விதத்தில் கொண்டாடப்படுகிறது. ஒரு மாநிலத்தின் சுகாதாரப் பராமரிப்பின் வலிமை அந்த மாநிலத்தில் உள்ள மருத்துவர்களின் எண்ணிக்கையால் குறிக்கப்படுகிறது.
28 மாநிலங்களை கொண்ட இந்தியாவில் பல மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் இருந்தாலும், சில மாநிலங்களில் அந்தந்த மருத்துவ கவுன்சில்களில் பதிவுசெய்யப்பட்ட அலோபதி மருத்துவர்கள் அதிகம் உள்ளனர். இந்த மாநிலங்கள் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு மருத்துவ உதவியை வழங்குவதுடன், அதிநவீன மருத்துவமனைகள், சுகாதாரத் திட்டங்கள் மற்றும் சிகிச்சைகளை வழங்குகின்றன.

இந்தியாவில் சில மாநிலங்கள் மக்களுக்கு போதுமான மருத்துவ உதவிகளை வழங்க முடியாமல் தவித்து வரும் சூழலில் சில மாநிலங்கள் மருத்துவத்தில் தன்னிறைவைப் பெற்றுள்ளன. இந்த தரவுகள் 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி அரசாங்க தளமான PIB.gov.in இலிருந்து எடுக்கப்பட்டது. இந்த பதிவில் மருத்துவர்கள் அதிகமுள்ள டாப் 10 மாநிலங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
மகாராஷ்டிரா
இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிகமாக பதிவுசெய்யப்பட்ட அலோபதி மருத்துவர்கள் உள்ளனர், இங்கு கிட்டதட்ட 1,88,545 மருத்துவர்கள் உள்ளனர். எய்ம்ஸ் நாக்பூர், ஜேஜே மருத்துவமனை மற்றும் KEM மருத்துவமனை போன்ற பிரபலமான மருத்துவப் கல்லூரிகளுடன் மகாராஷ்டிரா ஒரு வலுவான சுகாதார அமைப்பைக் கொண்டுள்ளது. நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் இருவரும் புனே மற்றும் மும்பை போன்ற நகரங்களில் காணப்படும் அதிநவீன மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள்.
தமிழ்நாடு
தமிழ்நாடு அதிக எண்ணிக்கையிலான உயர் தகுதி வாய்ந்த மருத்துவர்களையும், சிறந்த பொது சுகாதார அமைப்பையும் கொண்டிருப்பதால் மருத்துவத்தில் சிறந்து விளங்கும் மாநிலமாக உள்ளது. தமிழ்நாட்டில் 1,48,217 பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் உள்ளனர். அப்பல்லோ, மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு ராஜாஜி மருத்துவமனை உள்ளிட்ட ஏராளமான புகழ்பெற்ற மருத்துவமனைகள் இங்கு அமைந்துள்ளன. உலகின் பல நாடுகளிலிருந்து மக்கள் சிகிச்சைக்காக தமிழ்நாடு வருகை தருகின்றனர், மேலும் மாநில அரசின் பல பயனுள்ள சுகாதார திட்டங்கள் பொதுமக்களுக்கு சேவை செய்கிறது.
கர்நாடகா
செயிண்ட் ஜான்ஸ் மற்றும் நிம்ஹான்ஸ் போன்ற புகழ்பெற்ற மருத்துவ நிறுவனங்கள் கர்நாடக சுகாதாரத் துறையின் முதுகெலும்பாக உள்ளன. இங்கு 1,34,426 பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் உள்ளனர். பெங்களூரு ஒரு மருத்துவ மையமாக இருப்பதால், மாநிலம் உயர்தர பராமரிப்பு மற்றும் தொழில்நுட்பரீதியாக மேம்பட்ட சுகாதாரப் பராமரிப்பை வழங்குகிறது. அண்டை மாநிலங்களிலிருந்தும் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் சிகிச்சைக்காக இங்கு ஏராளமான மக்கள் வருகை தருகின்றனர்.
ஆந்திரப் பிரதேசம்
தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவமனைகள் இரண்டின் உதவியால், ஆந்திரப் பிரதேசத்தின் சுகாதாரத் துறையில் சிறந்து விளங்குகிறது. ஆந்திராவில் 1,05,799 பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் உள்ளனர். ஆந்திர மருத்துவக் கல்லூரி மற்றும் SVIMS போன்ற நிறுவனங்கள் மூலம், கிராமப்புறங்களில் தொழில்முறை பயிற்சியை அதிகரிக்கவும் சுகாதாரப் பராமரிப்புக்கான அணுகலை மேம்படுத்தவும் அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேசத்தில் 24 கோடிக்கும் அதிகமான மக்கள் மக்கள் தொகை இருந்தபோதிலும், அங்கு போதுமான அளவு மருத்துவர்கள் இல்லை. இங்கு 89,287 பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் உள்ளனர், இருப்பினும், மருத்துவர்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது. ஒட்டுமொத்த சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக, லக்னோவில் உள்ள KGMU மற்றும் SGPGI போன்ற குறிப்பிடத்தக்க நிறுவனங்களின் உதவியுடன் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் அதன் மருத்துவ சேவைகளை விரிவுபடுத்துகிறது.
மேற்கு வங்கம்
CNCI மற்றும் SSKM மருத்துவமனை போன்ற முன்னணி மருத்துவ நிறுவனங்கள் மேற்கு வங்கத்தில் அமைந்துள்ளன. இங்கு 78,740 பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் உள்ளனர். கொல்கத்தா மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள மருத்துவப் பள்ளிகள் மாநிலத்தின் வலுவான பொது சுகாதார அமைப்பின் ஒரு பகுதியாக உள்ளது. வங்காளதேசம் மற்றும் அருகிலுள்ள பிற மாநிலங்களிலிருந்து பல நோயாளிகள் இங்கு சிகிச்சைகாக வருகை தருகின்றனர்.
கேரளா மருத்துவர்கள்
கேரளா அதன் மக்கள் தொகைக்கு ஏற்ற அதிக மருத்துவர்-நோயாளி விகிதம் மற்றும் சிறந்த சுகாதார அளவீடைக் கொண்டிருப்பதற்குப் பெயர் பெற்றது. கேரளாவில் 72,999 பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் உள்ளனர். கேரளாவில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அமிர்தா நிறுவனம் போன்ற வசதிகளுடன், சமகால மற்றும் பாரம்பரிய சுகாதார அமைப்புகள் இரண்டும் உள்ளன. கேரளாவின் சுகாதார உள்கட்டமைப்பு உலகப்புகழ் பெற்றது.
குஜராத்
பிஜே மருத்துவக் கல்லூரி மற்றும் சிவில் மருத்துவமனை போன்ற மதிப்புமிக்க நிறுவனங்களின் உதவியால் குஜராத்தின் மருத்துவத் துறை வேகமாக விரிவடைந்து வருகிறது. குஜராத்தில் 72,406 பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் உள்ளனர். அகமதாபாத் மற்றும் சூரத் போன்ற நகரங்களில் குஜராத்தை சிறந்த உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது.
பஞ்சாப்
பஞ்சாப் அரசு மற்றும் தனியார் சுகாதார மருத்துவ சேவைகளை சீரான முறையில் வழங்குகிறது. சண்டிகரில் உள்ள ஜிஎம்சி பாட்டியாலா மற்றும் PGIMER போன்ற மருத்துவ நிறுவனங்கள் மூலம் மாநிலம் உயர்தர மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ சேவையை வழங்குகிறது. கிராமப்புறங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்தவும் பஞ்சாப் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இங்கு 51,689 பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் உள்ளனர்.
ராஜஸ்தான்
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முதலீடுகள் மூலம், ராஜஸ்தானின் சுகாதார அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக மேம்பட்டு வருகிறது. ஜோத்பூர் எய்ம்ஸ் மற்றும் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் மருத்துவமனை மாநிலத்தின் இரண்டு முக்கியமான நிறுவனங்களாகும். சுகாதார பணிகள் மற்றும் நடமாடும் கிளினிக்குகள் மூலம், பாலைவனம் மற்றும் பழங்குடிப் பகுதிகளில் சுகாதாரப் பராமரிப்புக்கான அணுகலை மேம்படுத்த மாநிலம் முயற்சிக்கிறது. ராஜஸ்தானில் 48,232 மருத்துவர்கள் உள்ளனர்.



Click it and Unblock the Notifications

