Latest Updates
-
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால் போதும்… வாஸ்து தோஷம் நீங்கி பணவரவு கொட்டும்! -
உங்களை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்யாதீர்கள்! உறவில் விரிசல் ஏற்படுத்தும் அந்த ஒரு விஷயம் இதுதான்! -
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள் -
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சூரியன்-சுக்கிரன் இணைப்பால் ஜூன் 08-க்கு பின் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 06 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது!
தந்தேராஸ் நாளில் இந்த 5 பொருட்களை வாங்குங்க.. லட்சுமி தேவியின் ஆசியால் செல்வத்தின் கதவு திறக்கும்..
Dhanteras 2025: ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு முன் கொண்டாடப்படுவது தான் தந்தேராஸ் என்னும் தனதிரயோதசி. வடஇந்தியாவில் 5 நாட்கள் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையின் தொடக்க நாளில் தந்தேராஸ் கொண்டாடப்படுகிறது. இந்த தந்தேராஸ் தென்னிந்தியாவில் மிகவும் புனிதமான நாளாக கருதப்படும் அட்சய திருதியைப் போன்றே மங்களகரமான நாளாகும்.
இந்நாளில் எந்த பொருளை வாங்கினாலும் அது இருமடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. வேத நாட்காட்டியின் படி, இந்த ஆண்டு தந்தேராஸ் அக்டோபர் 18 ஆம் தேதி வருகிறது. இந்நாளில் லட்சுமி, குபேரர் மற்றும் ஆயுர்வேதத்தின் கடவுளான தன்வந்திரியை மக்கள் வழிபடுவார்கள். இந்த சுப தினத்தில் தங்கம், வெள்ளி, வாகனம் அல்லது புதிய ஆடைகளை வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது.

முக்கியமாக இந்த நாளில் மக்கள் லட்சுமி தேவி மற்றும் குபேரரின் ஆசியைப் பெற சிறப்பு பூஜைகளை செய்து வழிபாடு செய்வார்கள். இப்படி செய்வதன் மூலம், அது வீட்டிற்கு செல்வத்தையும், செழிப்பையும் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. தற்போது தங்கம், வெள்ளியின் நிலை நிலவரங்களைப் பார்க்கும் போது, சாமானிய மக்களால் அவற்றை வாங்குவது என்பது ஒரு கனவாகிவிட்டது.
இருப்பினும் கவலைப்பட தேவையில்லை, தங்கம் வெள்ளி வாங்க முடியாவிட்டாலும், அதற்கு இணையாக மங்களகரமான பொருட்களாக கருதப்படும் பொருட்களை வாங்கினால், லட்சுமி தேவியின் ஆசி கிடைப்பதோடு, வீட்டிலும் செல்வம் பெருகும். இப்போது தந்தேராஸ் நாளில் எந்த பொருட்களை எல்லாம் வாங்குவது நல்லது என்பதைக் காண்போம்.
1. மஞ்சள் தூள் அல்லது மஞ்சள் கிழங்கு
தந்தேராஸ் நாளில் மஞ்சள் தூள் அல்லது மஞ்சள் கிழங்கு வாங்குவது நல்லதாக கூறப்படுகிறது. பொதுவாக மஞ்சள் லட்சுமி தேவி குடியிருக்கும் மங்களகரமான பொருள். இந்த மஞ்சளை வாங்கும் போது, லட்சுமி தேவியின் ஆசி கிடைக்கும். அதுவும் தந்தேராஸ் நாளில் மஞ்சள் கிழங்கை வாங்கி வந்து, லட்சுமி தேவிக்கு படைத்து, அந்த மஞ்சள் கிழங்கை சிவப்பு அல்லது மஞ்சள் துணியில் கட்டி, பணம் வைக்கும் இடத்தில் வைத்தால், வீட்டில் பணம் பெருகும் என்று கூறப்படுகிறது.
2. கோமதி சக்கரம்
தந்தேராஸ் நாளில் கோமதி சக்கரத்தை வாங்குவதும் புனிதமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் கோமதி சக்கரம் லட்சுமி தேவியின் அம்சமாகும். இந்த கோமதி சக்கரத்தை வீட்டில் வாங்கி வைக்கும் போது, வீட்டில் மகிழ்ச்சி, செல்வம், செழிப்பு, ஆரோக்கியம் போன்றவற்றை தருவதாக நம்பப்படுகிறது. அதுவும் தந்தேராஸ் நாளில் கோமதி சக்கரத்தை வாங்கி லட்சுமி பூஜையின் போது வைத்து வழிபாடு செய்து, பின் அதை எடுத்து பணம் வைக்கும் இடத்தில் வைத்தால், லட்சுமி தேவியின் அருளால் செல்வம் பெருகுவது உறுதி.
3. துடைப்பம்
தந்தேராஸ் நாளில் வாங்க வேண்டிய மற்றொரு பொருள் தான் துடைப்பம். என்ன தான் துடைப்பம் வீட்டை சுத்தம் செய்யும் பொருளாக இருந்தாலும், அதில் லட்சுமி தேவி வாசம் செய்வதாக கூறப்படுகிறது. எனவே தான் வீட்டில் எப்போதும் சரியான இடத்தில், கால் படாத இடத்தில் வைத்து எடுத்து பயன்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட துடைப்பத்தை தந்தேராஸ் நாளில் வாங்கி வந்தால், அது வீட்டிற்கு லட்சுமி தேவியை அழைத்து வருவதாக நம்பப்படுகிறது.
4. ஷமி செடி
தந்தேராஸ் நாளில் ஷமி செடியை வாங்கி வீட்டில் நடுவது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. இந்த ஷமி செடி சனி பகவானுக்கும், சிவபெருமானுக்கும் மிகவும் பிடித்தமான செடியாகும். இந்த ஷமி செடியை வீட்டில் வைத்திருந்தால், நேர்மறை ஆற்றல் நிரம்பி, எதிர்மறை ஆற்றல் வெளியேற்றப்படுவதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட ஷமி செடியை வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைப்பது, லட்சுமி தேவியின் பரிபூர்ண ஆசியை அளிப்பதோடு, வீட்டில் செல்வ செழிப்பையும் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது.
5. கொத்தமல்லி விதை
தந்தேராஸ் நாளில் கொத்தமல்லி விதைகளை வீட்டிற்கு வாங்கி வருவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதுவும் இந்த விதைகளை வாங்கி வருவது லட்சுமி தேவியை மகிழ்விப்பதோடு, வீட்டில் செல்வத்தை பெருக்குவதாகவும் நம்பப்படுகிறது. அதுவும் தீபாவளி நாளில் லட்சுமி தேவிக்கு கொத்தமல்லி விதைகளை படைப்பது, நிதி நிலையை வலுப்படுத்தி, பண பிரச்சனைகளைக் குறைப்பதாக கூறப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications