Latest Updates
-
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்
தனது கர்ப்பத்தை இன்ஸ்டா போஸ்ட் மூலம் தெரிவித்த தீபிகா படுகோனே.. எப்ப குழந்தை பிறக்க போகுதுன்னு பாருங்க..
Deepika Padukone Pregnancy: பாலிவுட், ஹாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு பிரபல நடிகை தான் தீபிகா படுகோனே. இவர் தனது சிக்கென்ற உடலமைப்பினாலும், திறமையான நடிப்பாலும் உலகளவில் ரசிகர்களைக் கொண்டவர். இவரும் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான ரன்வீர் சிங்கும் 6 வருட டேட்டிங்கிற்கு பின் 2018 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் தீபிகா படுகோனே மற்றும் ரன்வீங் சிங் தம்பதிகள் 2024 பிப்ரவரி 29 ஆம் தேதி, அதாவது இன்று காலை 10 மணியளவில் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெற்றோராகப் போகும் செய்தியை தெரிவித்துள்ளனர்.

அதுவும் தீபிகா படுகோனே தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்பதை வெளிப்படையாக கூறாமல், பிரசவத்தின் மாதத்தை மட்டும் கூறி தனது கர்ப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் இன்ஸ்டாவில் அவர்களது ரசிகர்கள், உறவினர்கள், நண்பர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே தீபிகா படுகோனே தனது இரண்டாவது மூன்று மாத காலத்தில் இருப்பதாகவும், விரைவில் தனது கர்ப்பத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என்றும் ஒரு செய்தி வெளிவந்தது. இந்நிலையில் இன்று இந்த தம்பதிகள் அந்த செய்தியை உறுதிபடுத்தியுள்ளனர்.
சமீபத்தில் லண்டனில் நடந்த 77வது BAFTA நிகழ்ச்சியில் தீபிகா படுகோனே கலந்து கொண்டார். பொதுவாக சிவப்பு கம்பளத்தில் தீபிகா படுகோனே கவர்ச்சிகரமான மற்றும் வித்தியாசமான ஆடைகளை அணிந்து வந்து அசத்துவார். ஆனால் இந்த நிகழ்ச்சியில் இவர் தனது வயிற்றை மறைப்பதற்காகவே புடவையில் வந்ததாக ஒரு செய்தி பரவியது.
அதுவும் இந்த நிகழ்ச்சிக்கு இவர் பிரபல டிசைனர் சப்யசாச்சி வடிவமைத்த அற்புதமான மற்றும் மின்னக்கூடிய புடவையையும், ஸ்வீவ்லெஸ் ஜாக்கெட்டையும் அணிந்து, ஆபரணங்கள் அதிகம் அணியாமல் சிம்பிளாகவும், க்யூட்டாகவும் வந்திருந்தார். அதுவும் இந்த புடவைக்கு இவர் மேற்கொண்ட ஹேர் ஸ்டைல் இவரது தோற்றத்தை மேம்படுத்தி காட்டியது.
தாய்மை பற்றிய தீபிகாவின் கூற்று
2024 ஆம் ஆண்டின் ஜனவரி மாத வோக் சிங்கப்பூருக்கு அளித்த அறிக்கையில், தீபிகா படுகோனே தாய்மை பற்றி வெளிப்படுத்தினார். மேலும் "ரன்வீருக்கும், எனக்கும் குழந்தைகள் என்றால் பிடிக்கும். நாங்கள் எங்கள் சொந்த குடும்பத்தை தொடங்கப் போகும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்." என்றும் தெரிவித்தார்.



Click it and Unblock the Notifications