Latest Updates
-
iPhone 18 Pro and 18 Pro Max: அமெரிக்காவை விட இந்தியாவில் ஐபோனின் விலை ஏன் மிக அதிகமாக உள்ளது தெரியுமா? -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி பால் கொழுக்கட்டை செய்யுங்க.. க்ரீமியாவும், ருசியாவும் இருக்கும்.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் செட்டிநாடு உப்பு அப்பம் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - காரமா சூப்பரா இருக்கும் -
மழைக் காலத்தில் கண்களில் அரிப்பு ஏற்படுகிறதா? அதற்கான காரணங்களும், எச்சரிக்கை அறிகுறிகளும்- விளக்கும் டாக்டர்! -
தலைசுற்ற வைக்கும் இந்திய அரசர்களின் ஆடம்பரம் - எதுக்கெல்லாம் கோடிக்கணக்குல செலவு பண்ணிருக்காங்க பாருங்க -
ராகு-கேது பெயர்ச்சி 2026: மேஷம் முதல் கன்னி வரை யாருக்கு ராஜயோகம்?- விளக்கும் ஜோதிடர்! -
கேரட் தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
செப்டம்பர் 11, 2026: இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
உலகின் இந்த 5 நாடுகளில் ஒரு இந்தியர் கூட இல்லையாம்... காரணம் என்னனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க...!
உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் அங்கு ஒரு இந்தியரை பார்க்கலாம் என்று கூறுவார்கள். அந்த அளவிற்கு உலகம் முழுவதும் கிட்டதட்ட அனைத்து நாடுகளிலும் இந்தியர்கள் புலம் பெயர்ந்துள்ளனர், கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிலும் குறிப்பிட்ட அளவு இந்தியர்கள் வசிக்கிறார்கள். அமெரிக்காவின் பரபரப்பான நகரங்கள் முதல் பசிபிக் பெருங்கடலில் உள்ள தொலைதூர தீவுகள் வரை, இந்திய சமூகங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன.
உலகம் முழுக்க அனைத்து நாடுகளிலும் இந்தியர்கள் குடியேறி இருந்தாலும், மிகவும் அரிதான அல்லது இந்தியர்கள் முற்றிலும் இல்லாத சில நாடுகள் இன்னும் உள்ளன. குறைவான மக்கள் தொகை, கடுமையான குடியேற்றச் சட்டங்கள் மற்றும் புவியியல் தனிமைப்படுத்தல் உள்ளிட்ட பல காவிஷயங்கள் இதற்கு காரணமாக உள்ளது.

இந்தியர்கள் பொதுவாக இந்த நாடுகளில் குடியேறுவதில்லை, இருப்பினும் அவர்கள் வணிகத்திற்காகவோ அல்லது மகிழ்ச்சிக்காகவோ அங்கு பயணம் செய்யலாம். இந்த பதிவில் இந்தியர்கள் முற்றிலும் இல்லாத நாடுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
வாடிகன்
ரோமின் மையப்பகுதியில் அமைந்துள்ள வாடிகன் நகரம் உலகின் மிகச் சிறிய சுதந்திர நாடாகும். இது கத்தோலிக்கர்களுக்கான ஆன்மீக மையமாகவும், செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா மற்றும் வாடிகன் அருங்காட்சியகங்கள் போன்ற பிரபலமான அடையாளங்களைக் கொண்ட இடமாகவும் உள்ளது. பல இந்தியர்கள் சுற்றுலாப் பயணிகளாக வருகை தந்தாலும், இங்கு இந்திய குடியிருப்பாளர்கள் ஒருவர் கூட இல்லை.
துவாலு
இது ஆஸ்திரேலியாவின் வடகிழக்கில் பசிபிக் பெருங்கடலில் உள்ள இந்த சிறிய தீவு நாடாகும், கடந்த காலத்தில் இது எல்லிஸ் தீவுகள் என்று அழைக்கப்பட்டது. சுமார் 10,000 மக்கள்தொகை மட்டுமே கொண்ட துவாலு, உலகின் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாகும். இது 1978 இல் சுதந்திரம் பெற்றது மற்றும் அதன் அழகிய கடற்கரைகள், ஸ்கூபா டைவிங் மற்றும் ஸ்நோர்கெலிங் இடங்களுக்கு பிரபலமானது. இருப்பினும், துவாலுவில் இந்திய குடியிருப்பாளர்கள் யாருமே இல்லை.
சான் மரினோ
வாடிகன் நகரத்தைப் போலவே சான் மரினோவும் உலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றாகும். அப்பென்னைன் மலைகளில் அமைந்திருக்கும் இது, உலகின் பழமையான குடியரசுகளில் ஒன்றாகும். அதன் அற்புதமான கட்டிடக்கலை மற்றும் பழமையான வரலாற்றுக்கு பெயர் பெற்ற சான் மரினோ, இந்தியர்கள் உட்பட சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது, ஆனால் மிகச் சிலரே இங்கு நிரந்தரமாக குடியேறத் தேர்ந்தெடுத்துள்ளனர். குறிப்பாக இங்கு இந்தியர்கள் யாருமே இல்லை.
வட கொரியா
வட கொரியாவில் வெளிநாட்டினர் மீது மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன, இதனால் இந்தியர்கள் மட்டுமின்றி எந்த வெளிநாட்டினருமே அங்கு வாழ்வது கடினம். இங்கு வெளிநாட்டினருடனான தொடர்புகளை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணிக்கிறது, மேலும் இந்தியா மட்டுமின்றி, பிற நாடுகளைச் சேர்ந்த யாருமே இங்கு குடியேற விரும்புவதில்லை. ஒருவேளை விரும்பினாலும் அது முடியாது.
பல்கேரியா
கருங்கடலை ஒட்டிய அழகிய கடற்கரைகளுக்கும், வளமான கலாச்சார பாரம்பரியத்திற்கும் பெயர் பெற்ற பல்கேரியா, ஐரோப்பாவில் உள்ள ஒரு பிரபலமான இடமாகும். இருப்பினும், கணிசமான இந்திய சமூகங்களைக் கொண்ட பிற ஐரோப்பிய நாடுகளைப் போலல்லாமல், பல்கேரியாவில் மிகக் குறைவான இந்தியர்கள் மட்டுமே உள்ளனர். உலகின் கிட்டத்தட்ட ஒவ்வொரு பகுதியிலும் இந்தியர்கள் வீடுகளை அமைத்திருந்தாலும், இந்த ஐந்து நாடுகளும் அவற்றின் அளவு, இருப்பிடம் அல்லது கடுமையான விதிமுறைகள் காரணமாக விதிவிலக்கான நாடாக உள்ளன.



Click it and Unblock the Notifications

