Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
கல்லால் அடிப்பது முதல் தலையில் சுடுவது வரை பாலியல் குற்றத்துக்கு கடுமையான தண்டனை கொடுக்கும் 10 நாடுகள்...!
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டையே உலுக்கி வரும் சம்பவம் என்றால் அது கோவை கல்லூரி மாணவியின் பாலியல் வன்கொடுமை சம்பவம்தான். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டுமென்று பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் மீடியா என அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதற்கு நீண்ட காலமாகிவிடுகிறது. தாமதமாக வழங்கப்படும் நீதியும் அநீதிதான் என்பதை மறந்து விடக்கூடாது.
இந்தியா போல அல்லாமல் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகள் பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரமான குற்றங்களைச் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கி வருகின்றன. இஸ்லாமிய நாடுகளில், மரண தண்டனை மற்றும் பொது இடத்தில் கல்லெறிந்து கொல்லுதல் போன்ற தண்டனைகள் விதிக்கப்படும் அதே வேளையில், சில நாடுகளில், குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து விரைவான விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பல கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. இந்த பதிவில் பாலியல் வன்கொடுமைக்கு கடுமையான தண்டனைகளைக் கொடுக்கும் சில நாடுகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சீனா
சீனாவில் பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை வழங்கபடுகிறது, சிலர் இந்த விரைவான செயல்பாட்டிற்காகப் பாராட்டலாம். இருப்பினும், முறையான விசாரணை இல்லாமல் மரணதண்டனை நிறைவேற்றுவது காட்டுமிராண்டித்தனமானது என்ற கருத்தும் நிலவுகிறது. துரதிர்ஷ்டவசமாக தூக்கிலிடப்பட்ட சில பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் பின்னர் நிரபராதிகள் எனக் கண்டறியப்பட்டனர். மரண தண்டனை மட்டுமின்றி சில சமயங்களில் ஆண்மை நீக்கமும் தண்டனையாக வழங்கப்படுகிறது.
சவுதி அரேபியா
சவுதி அரேபியா அதன் கடுமையான சட்டங்கள் மற்றும் தண்டனைகளுக்கு பெயர் பெற்றது. சவுதி அரேபியாவில் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பின்னர் பொது இடத்தில் தலை துண்டிக்கப்படும் தண்டனை வழங்கப்படுகிறது. போதைப்பொருள் கடத்தலுக்கும் சவுதி அரேபியாவில் அதே தண்டனைதான் வழங்கப்படுகிறது.
வட கொரியா
வட கொரியா பூமியின் நகரம் என்று அழைக்கப்படும் நாடாகும். இந்த சர்வாதிகார நாடு பாலியல் வன்கொடுமைக்கு துப்பாக்கிச் சூடு நடத்தி மரண தண்டனை அளிக்கிறது. ஆனால் அவர்கள் கிளர்ச்சியாளர்கள் மீதும் பழி சுமத்தி இந்த தண்டனையை வழங்குவதாக கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தானில் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. குற்றவாளிகள் நீதிமன்றத்தால் வழங்கப்படும் தீர்ப்பைப் பொறுத்து தீர்ப்பளிக்கப்பட்ட 4 நாட்களுக்குள் தலையில் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள் அல்லது தூக்கிலிடப்படுகிறார்கள்.
எகிப்து
எகிப்து இப்போதும் தூக்கு தண்டனை மூலம் மரண தண்டனை பழமையான தண்டனை முறையைப் பின்பற்றும் நாடுகளில் ஒன்றாகும். பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு இந்த தண்டனை சரியானதுதான்.
ஈரான்
ஈரானில் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படுகிறது, சில சமயங்களில் தூக்கிலிடப்பட்டும், சில சமயங்களில் கல்லெறிந்தும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது, இது ஒரு கொடூரமான தண்டனை முறையாகும்.
இஸ்ரேல்
இஸ்ரேலில் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒருவர் குற்றம் சாட்டப்பட்டால், அவருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். பாலியல் வன்கொடுமைக்கான அவர்களின் வரையறையானது பாலியல் வன்கொடுமையின் பிற வடிவங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறது.
அமெரிக்கா
அமெரிக்காவில் பாலியல் குற்றவாளியாகக் கருதப்படும் ஒருவருக்கு விதிக்கப்படும் வழக்கமான தண்டனை, விசாரணை மாநில சட்டத்தின் கீழ் வருகிறதா அல்லது மத்திய சட்டத்தின் கீழ் வருகிறதா என்பதைப் பொறுத்தது. மத்திய சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகளில், வழங்கப்படும் சிறைத்தண்டனை சில ஆண்டுகள் முதல் அவரின் வாழ்நாள் முழுவதும் வரை கூட இருக்கலாம்.
பிரான்ஸ்
பிரெஞ்சுக்காரர்கள் கடுமையான பாலியல் வன்கொடுமை சட்டங்களைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கிறார்கள், இது சேதம் மற்றும் குற்றத்தின் தீவிரத்தன்மையைப் பொறுத்து 30 ஆண்டுகள் அல்லது ஆயுட்காலம் முழுவதும் நீட்டிக்கப்படலாம்.
ஜப்பான்
ஜப்பானில் பாலியல் குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. ஒருவேளை கொள்ளையின் போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்குகளில், மரண தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.



Click it and Unblock the Notifications
