Latest Updates
-
ரக்ஷா பந்தன் நாளில் உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
Dengue: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
கொங்கணி ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குடிமகன் ஒவ்வொருவரும் 9 கோடி சம்பாதிக்கும் உலகின் பணக்கார நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்லை -
செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது! -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கை இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழப்போகுதாம் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும்
சீனாவில் ஒரு பெண்ணின் கண்ணில் இருந்து 60 உயிருள்ள புழுக்களை அகற்றிய மருத்துவர்கள்!
சீனாவின் குன்மிங்கில் இருந்து ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அது என்னவென்றால், சீனாவில் உள்ள மருத்துவர்கள் ஒரு பெண்ணின் கண்களில் இருந்து சுமார் 60-க்கும் அதிகமான உயிருள்ள புழுக்களை அகற்றியுள்ளனர்.
அறிக்கைகளின் படி, சீன பெண் ஒருவர் நீண்ட காலமாக கண் அரிப்பு பிரச்சனையை சந்தித்து வந்துள்ளார். ஒருமுறை கண்களில் ஏற்பட்டுள்ள அரிப்பில் இருந்து நிவாரணம் பெற, அப்பெண் கண்களை தேய்த்துள்ளார். அப்போது அப்பெண்ணின் கண்ணில் இருந்து புழுக்கள் விழுந்துள்ளது.

இதனால் அப்பெண்மணி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்று, நடந்ததைக் கூறினார். மருத்துவர்கள் அப்பெண்ணிண் இரண்டு கண்களையும் பரிசோதனை செய்து, அவரது இரண்டு கண்களும் புழுக்களால் பாதிக்கப்பட்டுள்ளதை தெரிவித்துள்ளனர்.
உயிருள்ள புழுக்கள்
இச்சம்பவம் குறித்து அம்மருத்துவமனை அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு கூறியதாவது, அந்த பெண்மணியின் கண்களை பரிசோதனை செய்த போது, அப்பெண்ணின் கண் இமைகளுக்கு இடையில் உயிருள்ள புழுக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தோம்.
இந்த புழுக்களை அகற்ற அறுவை சிகிச்சை செய்த போது, அவரது வலது கண்ணில் இருந்து 40-க்கும் அதிகமான உயிருள்ள புழுக்களும், இடது கண்ணில் இருந்து 10-க்கும் மேற்பட்ட புழுக்களும் அகற்றப்பட்டன. மொத்தம் 60-க்கும் மேற்பட்ட புழுக்களை அகற்றியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இப்பெண்ணிற்கு புழுக்களை அகற்றும் செயல்முறையை மேற்கொண்டவர் டாக்டர் குவான். இப்படி இந்த பெண்ணிற்கு வட்டபுழுக்கள் தாக்கப்பட்டிருப்பதற்கு காரணம் செல்லப் பிராணிகளாக இருக்கலாம் என்று கூறினார். ஏனெனில் இந்த பெண் வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்த்து வருகிறார்.
எனவே இனிமேல் செல்லப்பிராணிகளிடம் பழகும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும், நல்ல சுகாதாரத்தைப் பராமரிக்கவும் அப்பெண்ணிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக டாக்டர் குவான் தெரிவித்துள்ளார்.
இவ்வளவு புழுக்கள் கண்களில் இருந்து எடுக்கப்பட்டதால், அப்பெண்ணின் கண்ணில் லார்வாக்கள் இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. எனவே அடிக்கடி பரிசோதனைக்கு வரும்படி மருத்துவர்கள் அப்பெண்ணிடம் வலியுறுத்தியுள்ளனர். முக்கியமாக செல்லப் பிராணிகளை தொட்ட பின் கைகளை சோப்பு பயன்படுத்தி கழுவுமாறும் கேட்டுக் கொண்டனர்.
செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் கவனத்திற்கு...
செல்லப்பிராணிகளின் மேல் உள்ள சிறுசிறு உரோமங்களால் மனிதர்களுக்கு புழு தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளன. சில சமயங்களில் அவற்றால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் அபாயமும் உள்ளன. நிபுணர்களின் கூற்றுப்படி, விலங்குகளின் மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் தொற்றுக்கள் ஜூனோடிக் என்று அழைக்கப்படுகின்றன. இவை மிதமானது முதல் தீவிரமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே செல்லப் பிராணிகளைக் கொண்டவர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.



Click it and Unblock the Notifications