Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் இருக்கும் பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் துரதிர்ஷ்டசாலிகளாம்...!
Chanakya Niti: பண்டைய இந்தியாவின் சிறந்த ராஜதந்திரி, அறிஞர் மற்றும் பொருளாதார நிபுணரான ஆச்சார்ய சாணக்கியர், தனது சாணக்கிய நீதியில் மனித வாழ்க்கை தொடர்பான பல அம்சங்களைக் குறிப்பிட்டுள்ளார். சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தின் மூலம், வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
சாணக்கிய நீதியில், ஒருவரின் குணங்கள், கணவன் மனைவி தங்கள் உறவில் இனிமையைப் பேண என்னென்ன விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும், என்னென்ன தவறுகளைத் தவிர்க்க வேண்டும் என்பது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடுதலாக, சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் பெண்களின் சில பண்புகளையும் குறிப்பிட்டுள்ளார். மனைவியின் இந்த நடத்தை கணவருக்கு தலைவலியை ஏற்படுத்தும் என்று சாணக்கியர் கூறுகிறார். அவை என்னென்ன குணங்கள் விஷயங்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பொய் சொல்வது
சாணக்கியரின் கூற்றுப்படி, பெண்கள் பொதுவாக அதிகமாக பொய் சொல்லும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். பொய் சொல்வது அல்லது ஏமாற்றுவது மட்டுமல்ல, மற்றவர்களைப் பற்றி தவறாகப் பேசுவதும் ஒரு மோசமான கெட்ட பழக்கமாகும். இந்தப் பழக்கங்கள் அவர்களின் வாழ்க்கை மட்டுமின்றி அவர்களின் கணவரின் வாழ்க்கையையும் துயரமானதாக்கும்.
சில பெண்கள் குடும்ப உறுப்பினர்களைப் பற்றி கிசுகிசுப்பதையும், சிறிய விஷயங்களைப் பெரிதுபடுத்துவதையும் பழக்கமாகக் கொண்டுள்ளனர். அத்தகைய பெண்களை யாரும் நம்ப மாட்டார்கள். இப்படிப்பட்ட பெண்கள் இருக்கும் வீட்டில் எப்போதும் பிரச்சனைகள் நிறைந்திருக்கும்.
பெரியவர்களை அவமதிக்கும் பழக்கம்
பெரியவர்களை மதிக்காத பெண்கள் தங்கள் கணவரையும் மதிக்க மாட்டார்கள் மற்றும் அனைத்திற்கும் சண்டையிடுவார்கள். அத்தகைய பெண்கள் வீட்டின் அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பார்கள். அப்படிப்பட்ட பெண்ணை மனைவியாகக் கொண்ட கணவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. பெரியவர்களை அவமதிக்கும் பெண்கள் குடும்ப மகிழ்ச்சியைக் கெடுப்பார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.
முன்கோபம்
கோபம் அனைவரிடமும் இருக்கும் பொதுவான குணமாகும். இருப்பினும் அனைத்து விஷயங்களுக்கும் கோபப்படுவது சரியல்ல. உங்கள் மனைவி சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட கோபப்படுவராக இருந்தால் உங்கள் வாழ்க்கையில் ஒருபோதும் நிம்மதி இருக்காது. கோபக்காரப் பெண்கள் வீட்டின் அமைதியைக் கெடுப்பார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.
பேராசை கொண்ட பெண்கள்
சில பெண்கள் பணத்தின் மீது பேராசை கொண்டவர்களாக இருப்பார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். அவர்கள் பேராசையால் தவறான செயல்களை செய்யவும் வாய்ப்புள்ளது. இது அவர்களுக்கு மட்டுமின்றி அவர்களின் குடும்பத்திற்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. உங்கள் மனைவியிடம் இந்த பழக்கம் இருந்தால், முதலில் அதை சரி செய்ய வேண்டும், இல்லையெனில் அதன் மோசமான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். பணத்தின் மீது பேராசை கொண்ட பெண்கள் குடும்பத்திற்குக் கேடு விளைவிப்பவர்கள் என்று சாணக்கிய நீதி கூறுகிறது.
சுயநலவாதிகள்
ஒரு குடும்பப் பெண் தன் நலனைப் பற்றி மட்டுமல்ல, முழு குடும்பத்தைப் பற்றியும் சிந்தித்து வாழ வேண்டும். ஆனால் இது அனைத்து வீடுகளிலும் நடப்பதில்லை. சில பெண்கள் குடும்பத்தின் நலனை பாதுகாப்பதை கடினமாக நினைக்கிறார்கள். பணம் மற்றும் சொத்து விஷயத்தில் சுயநலவாதிகளாக இருக்கும் பெண்கள் குடும்பத்திற்கு கேடு விளைவிப்பார்கள். பெண்களின் இந்த நடத்தை குடும்ப உறுப்பினர்களிடையே விரிசல்களை ஏற்படுத்தும் என்று சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications

