Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
சாணக்கிய நீதி படி இந்த 3 விஷயங்களில் ஆண்களை விட பெண்கள் பலமடங்கு வலிமை வாய்ந்தவர்களாக இருப்பார்களாம்...!
Chanakya Niti: சாணக்கியர் இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற அறிஞராவார். வாழ்க்கையின் அனைத்து அம்சங்கள் மீதும் சாணக்கியருக்கு புதிய மற்றும் தெளிவான கண்ணோட்டம் இருந்தது. ஆண், பெண் இருவருமே ஒவ்வொரு விதத்தில் தனித்துவமானவர்கள். சில விஷயங்களை ஆண்களால் மட்டுமே செய்ய முடியும், அதனை பெண்களால் ஒருபோதும் செய்ய முடியாது. அதேபோல பெண்களால் மட்டுமே செய்யக்கூடிய சில விஷயங்களை ஆண்களால் எவ்வளவு முயற்சித்தாலும் செய்ய முடியாது.
சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் இதுபோன்ற சில விஷயங்களைப் பற்றி கூறியுள்ளார். சாணக்கிய நீதியின் படி 3 விஷயங்களில் ஆண்களை விட பெண்கள் எப்போதும் முன்னிலையில் இருப்பதாக சாணக்கியர் கூறுகிறார். பெண்கள் எப்போதும் ஆண்களை இந்த விஷயங்களில் வென்று விடுவார்கள். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பசி
பசியைத் தாங்கும் விஷயத்தில் ஆண்களால் பெண்களை ஒருபோதும் வெல்ல முடியாது என்கிறார் சாணக்கியர். ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் என்று வரும் போது, சாணக்கியர் ஒரு பெண் பெரும்பாலும் எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் பசியையும் பொறுத்துக்கொள்ள முடியும் என்று கூறுகிறார்.
ஆண்களை விட பெண்கள் இருமடங்கு பசியை தாங்கும் திறன் கொண்டவர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். அதனால் தான் பெண்கள் மிகவும் வலிமையனவர்கள் என்கிறார் சாணக்கியர். ஆனால் உண்மையில் ஆண்களை விட பெண்களுக்கே அதிக கலோரி மற்றும் ஆற்றல் தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
புத்திசாலித்தனம்
சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் பெண்கள் பெரும்பாலும் ஆண்களை விட புத்திசாலித்தனமாக இருப்பதாக கூறுகிறார். அதனால்தான் பெண்கள் அனைத்து விஷயங்களையும் அதிக சிந்தனையோடும், அக்கறையோடும் செய்கிறார்கள். ஆண்களை விட பெண்கள் பல விஷயங்களை கவனமாக கையாளுகிறார்கள்.
அவர்களை ஒருபோதும் புத்திசாலித்தனத்தில் தோற்கடிக்க முடியாது என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெண்கள் ஒரு விஷயத்தை கையாளும் போது, அது எதிர்காலத்தில் தங்களை எப்படி பாதிக்கும், அந்த நேரத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை சிந்தித்துப் பார்த்த பிறகுதான் அதில் இறங்குவார்கள்.
தைரியம்
தைரியம் என்று வரும்போது பெண்களை ஒருபோதும் ஆண்களால் வெல்ல முடியாது. பொதுவாக ஆண்களுக்கு பெண்கள் அளவிற்கு தைரியமும், விடாமுயற்சியும் இருப்பதில்லை. ஆண்கள் சில பின்னடைவுகளுக்குப் பிறகு தங்களின் முயற்சியிலிருந்து பின்வாங்குவார்கள் ஆனால் பெண்கள் நினைத்ததை அடையும் வரை ஒருபோதும் தங்கள் முயற்சியிலிருந்து பின்வாங்க மாட்டார்கள்.
சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் பெண்கள் ஆண்களை விட வலிமையானவர்கள், எந்த ஒரு பாதகமான சூழ்நிலையிலும் தைரியமாக அனைத்தையும் எதிர்கொள்ள முடியும் என்று கூறுகிறார். சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் ஒரு பெண் எதிலும் வெற்றி பெற முடியாது என்று சமூகம் நினைக்கிறது, ஆனால் இந்த விஷயங்களில் ஆண்களை விட பெண்கள் எப்போதும் சிறந்தவர்களாக இருக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications
