Latest Updates
-
வார ராசிபலன் (19 July 2026-25 July 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது..! -
பரோட்டா கடை சிக்கன் சால்னா டேஸ்ட்டா இருப்பதன் ரகசியம் இதாங்க! -
ராகு-கேதுவின் பிடியில் இருந்து விடுபடும் 6 கிரகங்கள்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்! -
தினமும் சிறிது முருங்கை இலையை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
பட்டாணி சாதமும், கத்திரிக்காய் கிரேவியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்று ஒரே நாளில் உருவாகும் ஹன்ஸ், கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும்! -
சர்க்கரை நோயாளிகளுக்கான அவல் இட்லியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க! -
இன்றைய ராசிபலன் 18 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
குரு-சூரிய சேர்க்கையால் உருவான மகாலட்சுமி ராஜயோகம்: ஆடியில் இந்த 3 ராசிக்கு கையில் பணம் குவியும்! -
புதன்-செவ்வாய் உருவாக்கும் தசாங்க யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் கள்ள காதலில் ஈடுபட இந்த 5 விஷயத்தில் ஒன்றுதான் காரணமாக இருக்குமாம்...!
Chanakya Niti: இந்தியாவின் சிறந்த அறிஞர்களில் ஒருவரான சாணக்கியரின் வாழ்க்கைப் பற்றிய அறிவுரைகள் மிகவும் பிரபலமானவை. ஒருவர் தங்கள் வாழ்க்கையில் இந்த அறிவுரைகளை பின்பற்றினால், அவர்கள் சிறந்த வாழ்க்கையை வாழ முடியும். சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் ஆன்மீகம், பணம், வேலை, மரணத்திற்கு பிறகான வாழ்க்கை, குடும்ப உறவுகள், சமூகம் மற்றும் உலகம் உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றி விளக்கியுள்ளார். ஒரு மனிதனின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விஷயங்களும் சாணக்கிய நீதியில் விவரிக்கப்பட்டுள்ளது.
கணவன் மனைவிக்கு இடையிலான உறவு குறித்தும் சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் சில விஷயங்களை விவாதித்துள்ளார். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, மற்றொரு நபர் மீது ஈர்ப்பு ஏற்படுவது இயல்பான ஒன்று என்று கூறப்படுகிறது. இது தவறல்ல, ஆனால் இந்த ஈர்ப்பு வரம்பு மீறினால், அது நிச்சயம் பெரிய சிக்கல் என்று சாணக்கியர் கூறுகிறார்.

அப்படி நடந்தால், அது அவர்களின் திருமண வாழ்க்கையை முற்றிலும் சிதைத்து விடும் என்று சாணக்கியர் கூறுகிறார். அனைத்து மதங்களிலும் திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் ஒரு கொடிய பாவமாகக் கருதப்படுகின்றன. ஒரு ஆண் தன் மனைவியைத் தவிர வேறு பெண்களிடம் ஈர்க்கப்படுவதற்கான சில காரணங்களை சாணக்கிய நீதி விளக்குகிறது. அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எதிர்பாலினம் மீதான ஈர்ப்பு
அனைவருக்குமே தங்கள் எதிர்பாலினத்தாரிடம் அவர்களுக்கு பிடித்த சில குணங்கள் இருக்கும் போது ஈர்ப்பு ஏற்படுவது இயல்பானதாகும். இது வாழ்நாள் முழுவதுமே தொடரும். ஆனால் இது உங்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். திருமணமான ஆண்களிடையே திருமணம் மீறிய உறவுகள் பல காரணங்களால் ஏற்படுகின்றன, அவற்றில் ஒன்று மற்றொரு பெண்ணின் மீதான ஈர்ப்பு.
நீங்கள் அதை சரியான நேரத்தில் சரிசெய்தால் அல்லது குறிப்பிட்ட எல்லைக்குள் வைத்துக் கொண்டால் உங்கள் திருமண உறவை காப்பாற்றிக் கொள்ள முடியும். இல்லையெனில் உங்கள் திருமணம் முறிந்து, உங்கள் மனைவி உங்களை விட்டு நிரந்தரமாக பிரிந்து செல்லலாம்.
சிறுவயது திருமணம்
திருமணம் மீறிய உறவுகளுக்கு வழிவகுக்கும் முக்கிய காரணங்களில் ஒன்று இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்வது என்று சாணக்கியர் கூறுகிறார். முதலாவதாக, திருமணம் என்றால் என்னவென்று புரியாத வயதில் திருமணம் நடக்கும்.
இரண்டாவதாக, நீங்கள் புதிய நபர்களை சந்திக்கும் போது, உங்கள் மனைவி உங்களுக்கு சரியான பொருத்தம் இல்லை என்றும், நீங்கள் இன்னும் சிறந்த ஒருவரை பெறலாம் என்று நினைக்கிறார்கள். இதுபோன்ற சூழலில், பலர் தங்கள் மனைவி தவிர்த்து பிற பெண்களை நோக்கி நகர்கின்றனர்.
உடலுறவில் அதிருப்தி
கள்ள உறவிற்கு வழிவகுக்கும் மற்றொரு முக்கிய காரணம் உடல் தோற்றத்திலும், உடலுறவிலும் திருப்தி இல்லாதது என்று சாணக்கியர் கூறுகிறார். இந்த சூழ்நிலையில், கணவன் மனைவி இடையே ஈர்ப்பு குறைவது மற்றும் இடைவெளி ஏற்படுவது தெளிவாக தெரியத் தொடங்கும். இத்தகைய சூழ்நிலையில், ஆண்கள் திருமணம் தாண்டிய உறவுகளை நோக்கி செல்கிறார்கள். உடல் திருப்தி என்பது படுக்கையில் ஒருவரையொருவர் திருப்திப்படுத்துவது மட்டுமல்ல, உங்கள் மனம் மற்றும் வார்த்தைகளால் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருப்பதும் அடங்கும்.
நம்பிக்கைக் குறைவது
திருமண உறவு வெற்றிகரமாக இருக்க பரஸ்பர புரிதலும், வெற்றிகரமான பாலியல் வாழ்க்கையும் மிக முக்கியம். இல்லையெனில் உங்கள் உறவு கொஞ்சம் கொஞ்சமாக சிதையத் தொடங்கும். பெரும்பாலான திருமணங்கள் ஒருவருக்கொருவர் நம்பிக்கை இல்லாததால் முறிந்து போகின்றன. தங்கள் துணையிடம் திருப்தியான உறவை அனுபவித்தாலும், நம்பிக்கை குறையும் போது ஆண்கள் திருமணம் தாண்டி வேறு உறவை நோக்கி செல்வார்கள். இது திருமணத்தை அழிக்கும் செயல் என்று சாணக்கியர் கூறுகிறார்.
ஏமாற்றம்
உடல்ரீதியான அல்லது உணர்ச்சிரீதியான ஏமாற்றம் கள்ள உறவிற்கு மிக முக்கிய காரணமாக மாறலாம் என்று சாணக்கியர் கூறுகிறார். ஒவ்வொருவரும் தங்கள் திருமண உறவில் சில விஷயங்களை எதிர்பார்த்தே நுழைகிறார்கள். அவை அவர்களுக்கு கிடைக்காத போது அவர்கள் வேறு துணையை நோக்கி செல்கிறார்கள். ஆனால் இது நிச்சயம் உங்கள் திருமண உறவை அழித்து விடும் என்று சாணக்கியர் எச்சரிக்கிறார்.



Click it and Unblock the Notifications
