Latest Updates
-
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும்
சாணக்கிய நீதி படி உங்க வாழ்க்கையில் இந்த 3 நபர்கள் இருந்தால் உங்களுக்கு எல்லா நல்லதும் தேடிவருமாம்...!
Chanakya Niti: சாணக்கியரின் அறிவுரைகள் எப்போதும் சமூகத்தில் மிகவும் உயர்வானதாக கருதப்படுகிறது. ஆச்சார்ய சாணக்கியர் தனது விலைமதிப்பில்லாத அறிவுரைகளை தன்னுடைய சாணக்கிய நீதியில் தெளிவாக விளக்கியுள்ளார். வாழ்க்கையின் முன்னேற்றம், நிதி ஆதாயம் மற்றும் திருமணம் என அனைத்து விஷயங்களைப் பற்றியும் இதில் துல்லியமாக குறிப்பிடப்பட்டுள்ளன.
இன்பமும், துக்கமும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நேர்மறை மற்றும் எதிர்மறை மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. ஆனால் வாழ்க்கையில் அனைத்து விதமான செழிப்புகளையும் சாதனைகளையும் நோக்கிச் செல்ல உங்களை வழிநடத்தும் சில நபர்கள் உள்ளனர். உங்கள் வாழ்க்கையில் அவர்களுடன் பழகுவதன் நீங்கள் அனைத்து விதமான நன்மைகளையும் பெறலாம். இதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான மாற்றங்கள் வருகின்றன.

சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் பாதகமான சூழ்நிலைகளை எவ்வாறு சமாளிப்பது மற்றும் முன்னேறுவது என்பதை விவரித்துள்ளார். நீங்கள் வாழ்க்கையில் தவிர்க்கக்கூடாத சிலர் உள்ளனர். அவர்கள் உங்களுடன் இருந்தால் மகிழ்ச்சியும், வெற்றியும் எப்போதும் உங்களுடன் நிலைத்திருக்கும். அவர்களை எந்த மோசமான சூழ்நிலையிலும் விட்டுவிடக்கூடாது. இல்லையெனில், நீங்கள் பின்னர் வருத்தப்படலாம். அவர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
புத்திசாலி மனைவி
உங்களுக்கு நல்ல புத்திசாலியான மனைவி கிடைத்திருந்தால் அதனால் உங்கள் வாழ்க்கையில் உண்டாகும் நல்ல மாற்றங்கள் கொஞ்சமல்ல. பெரும்பாலும் அவர்கள் தங்கள் கணவருடன் அனைத்து தருணங்களிலும் நிழல் போலவே உடனிருப்பார்கள். ஒரு நல்ல மனைவி கடினமான தருணங்களில் துணையை ஆதரிக்கவும், உறுதியுடன் எதிர்கொள்ள உதவவும் முடியும். அப்படிப்பட்ட பெண்கள் நெருக்கடியான சமயங்களில் குடும்பத்திற்கு உதவுவார்கள். இப்படிப்பட்ட மனைவி உங்களுக்கு இருந்தால், அவர்களை ஒருபோதும் வாழ்க்கையில் நழுவ விட்டுவிடாதீர்கள்.
ஒழுக்கமுள்ள மகன்
உங்கள் மகன் எப்போதும் தன் குடும்பத்திற்காக துணை நிற்கும் நல்ல மகனாக இருந்தால், அவர்களை ஒருபோதும் கைவிட்டு விடாதீர்கள். குழந்தையின் பதின்ம வயதில் இருந்து வழங்கப்படும் சரியான வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகள் வயதான காலத்தில் பெற்றோருக்கு உதவுகின்றன.
மேலும் அவர்கள் எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாத ஒழுக்கமானவர்களாக வளர்வதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். அப்படிப்பட்ட மகன் கடினமான சூழ்நிலைகளில் பெற்றோரை தனியாக விட்டுவிடக்கூடாது என்று கூட நினைபி-ப்பார்கள். உங்களுக்கு இப்படிப்பட்ட நல்ல மகன் இருந்தால் நீங்கள் பாக்கியம் செய்தவர்கள். அவர்களை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.
உண்மையான நண்பன்
அனைவரின் வாழ்க்கையிலும் நட்பு என்பது மிகவும் முக்கியமானது. அனைத்து மனிதர்களுமே தங்கள் நட்பில் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பார். வாழ்க்கையில் நல்லவர்களின் சகவாசம் இருந்தால் வெற்றியை எளிதில் பெற முடியும். அத்தகைய நல்ல நட்பு இருந்தால், அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள். எந்த வகையிலும் அவர்கள் தோல்வியை அடைய மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களின் நட்பை எந்த சூழ்நிலையிலும் விட்டுவிடக் கூடாது. சாணக்கியரின் கூற்றுப்படி, இந்த மூன்று நபர்களை வாழ்க்கையில் ஒருபோதும் விட்டுவிடக்கூடாது. இது வாழ்க்கையில் வெற்றி, மகிழ்ச்சி மற்றும் செல்வத்தைத் தருகிறது.



Click it and Unblock the Notifications
