Latest Updates
-
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா?
சாணக்கிய நீதி படி இந்த 4 நபர்கள் வாழ்க்கை முழுவதும் வறுமையில்தான் வாழணுமாம்... நீங்க இதுல இருக்கீங்களா?
Chanakya Niti: சாணக்கியர் மௌரிய பேரரசில் புத்திசாலித்தனமும், தந்திரமும் கொண்ட ஒரு முக்கிய நபராக திகழ்ந்தார். வாழ்க்கையில் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது, எதில் கவனம் செலுத்த வேண்டும், எது முக்கியம் என்பதை சாணக்கியர் நன்கு அறிந்திருந்தார். சாணக்கியர் தனது அனுபவங்களையும், அறிவுரைகளையும் சாணக்கிய நீதி என்ற புத்தகத்தில் தொகுத்துள்ளார்.
சாணக்கிய நீதி எக்காலத்திற்கும் பொருந்தக் கூடியதாக இருக்கிறது. சாணக்கியர் மனிதர்களைப் பற்றியும் அவற்றின் குணாதிசயங்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். காலம் கடந்தாலும் சாணக்கிய சாஸ்திரத்தின் முக்கியத்துவம் மாறவில்லை என்பதே உண்மை. சிலர் வாழ்க்கையில் கஷ்டப்பட்டாலும் அவர்களின் செல்வம் நிலைக்காது என்கிறார் சாணக்கியர். அவர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சிந்திக்காமல் செலவு செய்பவர்கள்
தங்களிடம் இருக்கும் செல்வத்தை சிந்திக்காமல் செலவு செய்பவர்களே ஏராளம். இதில் வேடிக்கை என்னவென்றால் செல்வத்தை செலவழிக்கும் இவர்கள்தான் அதிக செல்வத்தை அடைய ஆசைப்படுகிறார்கள்.
எனவே இப்படிப்பட்டவர்கள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் செல்வம் பெறவோ, வாழ்க்கையில் முன்னேறவோ முடியாது என்பது சாணக்கியர் கருத்து. ஒருவர் பணத்தை எப்படி செலவு செய்கிறார் என்பதை பொறுத்துதான் அவர் பணக்காரரா இல்லையா என்பதை தீர்மானிக்கிறது.
பணத்தை முதலீடு செய்வது
பணத்தை முதலீடு செய்யும்போது கவனமில்லாமல் இருப்பது அதிக சவால்களுக்கு வழிவகுக்கிறது. பெரும்பாலும் ஒருவர் சிந்திக்காமல் பணத்தை முதலீடு செய்கிறார்கள், அது அவர்களுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.
மேலும், பாதுகாப்பற்ற விஷயங்களில் பணத்தைச் செலவிடுவதும், பாதுகாப்பற்ற முதலீடுகளைச் செய்வதும் வாழ்க்கையில் பல சிரமங்களை ஏற்படுத்தும். இதுபோன்ற விஷயங்கள் உங்களை ஒருபோதும் பணக்காரர்களாக மாற்றாது.
தவறான வழியில் சம்பாதிப்பது
தவறான வழியில் சம்பாதிப்பவர் சம்பாதித்த பணத்தை ஒருபோதும் சுதந்திரமாக பயன்படுத்த முடியாது. அவர்கள் நேர்மையற்ற வழிகளில் சம்பாதிப்பதால், எப்போதும் பயத்துடனேயே வாழ வேண்டியிருக்கும். அதுமட்டுமல்ல, வாழ்க்கையில் அடிக்கடி எதிர்பாராத சவால்கள் வரும்.
இதையெல்லாம் மக்கள் சீக்கிரம் பணக்காரர் ஆக வேண்டும் என்பதற்காகவே செய்கிறார்கள். ஆனால் இது அவர்களை பணக்காரர்களாக மாற்றாது என்பதை அவர்கள் மறந்து விடாதீர்கள்.
மோசமான நண்பர்கள்
கெட்ட நண்பர்களை உள்ளவர்களும் வாழ்க்கையில் எப்போதும் வறுமையில் வாட வேண்டியிருக்கும். அவர்கள் எவ்வளவு முயற்சித்தாலும் வாழ்க்கையில் பணம் சம்பாதிக்க முடியாது. அதுமட்டுமின்றி அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியும், நிம்மதியும் இருக்காது.
அவர்கள் வாழ்க்கை எப்போதும் இருளிலேயே இருக்கும். அவர்களின் வாழ்க்கையில் எப்போதும் எதிர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். அவர்களால் ஒருபோதும் பணம் சம்பாதிக்க முடியாது என்பது மட்டுமல்ல, அவர்கள் பணக்கஷ்டத்தில் படாதபாடுபடுவார்கள்.



Click it and Unblock the Notifications

