Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
சாணக்கிய நீதி படி இந்த 3 வகை மனிதர்கள் விஷத்தை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள எப்பவும் நம்பிராதீங்க...!
Chanakya Niti: சாணக்கியர் இந்தியாவை சேர்ந்த சிறந்த பொருளாதார நிபுணர் மற்றும் இராஜதந்திரியாவார். சாணக்கியரின் தந்திரம் மற்றும் புத்திக்கூர்மையால் மௌரியப் பேரரசு மிகவும் செல்வச் செழிப்புடன் இருந்தது. சாணக்கியரின் யுக்திகளும், தந்திரமுமே சந்திர குப்த மௌரியரை மகதத்தின் ஆட்சியாளராக மாற்றியது.
அரசியல் மட்டுமின்றி சமூகத்தின் அனைத்து அம்சங்களைப் பற்றியும் சாணக்கியருக்கு மிகத் தெளிவான புரிதல் இருந்தது. சாணக்கியர் பொருளாதாரம், அரசியல் மற்றும் இராஜதந்திரம் ஆகிய அனைத்து துறைகளைப் பற்றியும் சாணக்கியருக்கு தெளிவான புரிதல் இருந்தது. மனிதகுலம் பல நெருக்கடிகளையும், பிரச்சனைகளையும் சந்தித்து வரும் இந்த நேரத்தில், சாணக்கியரின் அறிவுரைகளும், சிந்தனைகளும் அவர்களுக்கு வாழ்க்கைப் பிரச்சனைகளில் இருந்து வெளிவர பயனுள்ளதாக இருக்கும்.

எதிரிகளை விட ஆபத்தானவர்கள்
நம் எதிரிகளை விடவும், விஷத்தை விடவும் ஆபத்தானதுமான சிலர் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள் என்கிறார் சாணக்கியர். நம் வாழ்வில் அவர்களின் இருப்பு அல்லது செல்வாக்கு இருந்தால், நம் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி அல்லது வெற்றி இருக்காது. எனவே நம்மைச் சுற்றியுள்ளவர்கள் யார் அவர்களின் உண்மையான குணம் என்னவென்பதை அடையாளம் கண்டு அவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். அவர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சுயநலம் மற்றும் பேராசைக் கொண்டவர்கள்
சாணக்கிய நீதி படி சுயநலம் மற்றும் பேராசை உள்ளவர்களிடமிருந்து விலகி இருப்பது ஒருவரின் மகிழ்ச்சி மற்றும் அமைதிக்கு நல்லது. நீங்கள் எவ்வளவு பெரிய நெருக்கடிகளைச் சந்தித்தாலும், உங்கள் வாழ்க்கையில் எத்தனை சவால்கள் வந்தாலும், அப்படிப்பட்டவர்களிடம் ஆலோசனையோ ஆதரவையோ கேட்கக் கூடாது என்கிறார் சாணக்கியர்.
பேராசை மற்றும் பொறாமை காரணமாக அவர்கள் நேராக அறிவுரை கூற மாட்டார்கள். உண்மையில், பொறாமை கொண்டவர்களுக்கு சரி, தவறு ஆகியவற்றை வேறுபடுத்திப் பார்க்கும் திறன் இல்லை. மற்றவர்களின் வெற்றியில் அல்லது முன்னேற்றத்தில் அவர்களால் மகிழ்ச்சி அடைய முடியாது. எனவே அதனை அழிக்க முயலுவார்கள்.
முரடர்கள் மற்றும் அற்பத்தனமானவர்கள்
திமிர்பிடித்த, முரட்டுத்தனமான மற்றும் பாராட்டாத நபர்களுடன் பழகுவதும், அவர்களிடம் ஆலோசனை கேட்பதும் ஒருபோதும் நமக்கு பயனளிக்காது. அவர்களை ஒருபோதும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். அவர்கள் உங்களுக்கு நல்லது நடப்பதை விரும்புவதில்லை, அதுமட்டுமின்றி அவர்கள் உங்களுக்கு கெடுதலை ஏற்படுத்தத் தொடங்குவார்கள்.
எதிரிகள் முன்னால் இருந்து தாக்கினால், இப்படிப்பட்டவர்கள் சுயநலவாதிகள் பின்னால் இருந்து தாக்குகிறார்கள். எதிரிகளின் நடவடிக்கைகளை கணித்து விடலாம், இவர்களின் தாக்குதல் எதிர்பாராததாக இருக்கும். இவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்ல. அ
முன்கோபக்காரர்கள்
கோபமும், வெறுப்பும் உள்ளவர்கள் ஒருபோதும் உங்களுக்கு எந்த நண்மைகளையும் தர முடியாது. கோபம் ஒரு மனிதனின் மிகப்பெரிய எதிரி என்று கூறப்படுகிறது. ஏனெனில் கோபமும், தவறான எண்ணமும் மற்றவர்களை உங்களை வெறுக்க வைக்கும்.
முன்கோபம் விஷயங்களை மேலோட்டமாகப் பார்க்கவும் பகுத்தறிவு முடிவுகளை எடுக்கவும் அனுமதிக்காது. கோபத்தின் காரணமாக, மக்கள் சரி மற்றும் தவறுகளை வேறுபடுத்திப் பார்க்க முடியாது, மேலும் இப்படிப்பட்டவர்கள் அவர்களின் சொந்த நலனில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள்.



Click it and Unblock the Notifications

