Latest Updates
-
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க.. -
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது! -
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்
சாணக்கிய நீதி படி உங்களின் இந்த 6 விஷயங்களை யாரிடமாவது சொன்னா உங்க எதிர்காலம் கேள்விக்குறிதான்...!
Chanakya Niti: சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் வாழ்க்கை தொடர்பான பல அம்சங்களை விவரித்துள்ளார். அதில் மகிழ்ச்சி, துக்கம், தொழில், வியாபாரம், பணம், நண்பர்கள், எதிரிகள், குடும்பத்தினர் என பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
சாணக்கியரின் கொள்கைகளைப் பின்பற்றுவது கடினம் என்று கூறப்படுகிறது. ஆனால் அவற்றை ஏற்றுக்கொள்பவர் வாழ்க்கையில் தோல்வி என்பதே கிடையாது. ஒருவர் தனது சில ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று சாணக்கியர் கூறியுள்ளார்.

சில விஷயங்களை எப்போதும் உங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நீங்கள் கடுமையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்கிறார் சாணக்கியர். சாணக்கிய நீதியின்படி பிறரிடம் கூறக்கூடாத விஷயங்கள் என்னென்னெ என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பண விஷயங்கள்
பணம் தொடர்பான எந்த ஒரு தகவலையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்று சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் கூறியுள்ளார். செல்வந்தர் சமூகத்தில் செல்வாக்கு மிக்கவராகக் கருதப்படுகிறார். அத்தகைய சூழ்நிலையில் மக்கள் தங்களின் பணப் பற்றாக்குறையால் அந்த நபரை மதிக்காமல் விடுகிறார்கள்.
அப்படிப்பட்டவருக்கு யாரும் உதவ மாட்டார்கள். வாழ்க்கையில் பல நேரங்களில் ஒருவர் நிதி இழப்பை சந்திக்க நேரிடும் மற்றும் கடன் வாங்க வேண்டியிருக்கும். அப்படி பிரச்சனை வந்தால் யாரிடமும் சொல்லக்கூடாது. உங்கள் பணம் குறைவதைக் கண்டு மக்கள் உங்களை விட்டு விலகுவார்கள்.
சோகம் மற்றும் தனிப்பட்ட ரகசியங்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, உங்களுக்கு ஏதேனும் சோகம் ஏற்பட்டால், அதை உங்கள் மனதில் வைத்திருக்க வேண்டும். நம் துக்கத்தின் ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டால், நாம் கேலி செய்யப்படுவோம்.
நாம் ஒருவருடன் நமது துக்கங்களைப் பகிர்ந்து கொண்டால், எதிர்காலத்தில் அவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால், அவர்கள் நமது துக்கங்களையும் ரகசியங்களையும் மற்றவர்களிடம் பகிரங்கப்படுத்த வாய்ப்புள்ளது.
இல்லறம் தொடர்பான விஷயங்கள்
கணவன்-மனைவி இடையே உள்ள விவகாரங்களை யாரிடமும் சொல்ல வேண்டாம். இந்த விஷயங்களை உங்கள் நெருங்கிய நண்பரிடம் கூட சொல்லாதீர்கள். இல்லையெனில் நீங்கள் சிக்கலில் மாட்டி கொள்ளக்கூடும்.
இது உங்களுக்கு அவமானத்தைத் தரும் மற்றும் உங்கள் திருமண வாழ்க்கையில் விரிசலை ஏற்படுத்தும். எந்தவொரு நபரும் தனது வாழ்க்கைத் துணையின் இயல்பு மற்றும் குணத்தைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லக்கூடாது. தன் துணையை மதிக்காதவனுக்கு சமுதாயத்தில் மரியாதைக் கிடைக்காது. அப்படிப்பட்டவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது.
அவமானங்கள்
மரியாதை கிடைக்கும் போது தற்பெருமை கொள்ளக்கூடாது என்று சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் கூறியுள்ளார். அதேபோல், பிறர் முன்னிலையில் தனக்கு நேர்ந்த அவமானத்தைப் பற்றியும் பேசக் கூடாது என்றும் கூறுகிறது. இதன் காரணமாக, நீங்கள் உங்கள் சுயமரியாதையை இழக்கிறீர்கள், மற்றவர்கள் உங்களை மதிப்பதை நிறுத்துகிறார்கள்.
ஏமாற்றம்
சாணக்கியரின் கொள்கைகளின்படி, நீங்கள் யாரிடமாவது எந்த விதத்திலாவது ஏமாற்றப்பட்டிருந்தால், தற்செயலாக கூட மற்றவர்களிடம் சொல்லாதீர்கள். இப்படிச் செய்வதால் மற்றவர்கள் உங்களை முட்டாள் என்று நினைத்து கேலி செய்வார்கள். அத்தகைய சூழ்நிலையில் யாராவது உங்களை மீண்டும் ஏமாற்ற முயற்சிக்கலாம்.
திட்டங்கள்
சாணக்கிய நீதியில், ஒரு நபர் தனது எண்ணங்களையும் திட்டங்களையும் யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. சாணக்கியர் தனது திட்டங்களை எப்போதும் ரகசியமாக வைத்திருக்க வேண்டுமென்று கூறியுள்ளார். ஏனென்றால் மற்றவர்கள் உங்கள் திட்டங்களை அறிந்து அவற்றை உங்களுக்கு எதிராக பயன்படுத்த முயற்சி செய்யலாம்.



Click it and Unblock the Notifications
