Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் மே 14 முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது... -
உங்களுக்கு திரும்ப திரும்ப ஒரே கனவு வருதா? அதுக்கு என்ன அர்த்தம்-ன்னு தெரியுமா? -
அன்னையர் தினம் 2026: அம்மாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்கணுமா? இந்த UPI ஆஃபர்களை மிஸ் பண்ணிடாதீங்க! -
மாம்பழ லட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
அன்னையர் தினத்தில் மனைவி vs அம்மா? இந்த ஒரு சின்ன மாற்றம் போதும், குடும்பத்தில் அமைதி நிலவும்! -
முகத்தில் உள்ள அழுக்கை நீக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் வாஷ்களை யூஸ் பண்ணுங்க.. -
ஒரே வாரத்தில் 3 முறை நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்.. -
அன்னையர் தினத்தில் இந்த வாஸ்து செடிகளைப் பரிசளிங்க… அம்மாவின் ஆரோக்கியமும் செல்வமும் பல மடங்கு உயரும்! -
பொள்ளாச்சி பிச்சி போட்ட கோழி புட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
சுட்டெரிக்கும் கோடை வெயிலிலும் வீடு குளிர்ச்சியாக இருக்கணுமா? இந்த வாஸ்து செடிகளை உடனே மாற்றுங்க!
உங்க வாழ்க்கையில் அதிகளவு பணம் சம்பாதிக்கணுமா? சாணக்கியர் சொல்லும் இந்த வழிகளை ஃபாலோ பண்ணுங்க...!
Chanakya Niti: ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் பணம் தவிர்க்க முடியாத ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பணம் இல்லாதவனை இழிவாகப் பார்ப்பதை இந்த சமூகம் வழக்கமாக வைத்திருக்கிறது. சாணக்கியரின் கூற்றுப்படி, நாம் பணம் சம்பாதிப்பதற்கான எளிமையான மற்றும் சரியான வழிகளை சாணக்கியர் பரிந்துரைத்துள்ளார்.
பணத்தை விரும்பாத மக்கள் யாருமே இருக்க மாட்டார்கள், எல்லோருமே அதிகளவு பணத்தைப் பெற விரும்புகிறார்கள். மேலும் ஒவ்வொரு மனிதனும் பணத்திற்காக கடுமையாக உழைக்கிறான். பணம் சம்பாதிப்பதற்கான சாணக்கியரின் கொள்கைகள் இன்றும் பிரபலமானவையாக இருக்கிறது.

ஆச்சார்ய சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் செல்வம் தொடர்பான பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். உங்களுக்கு பணம் வேண்டுமென்றால், ஆச்சார்ய சாணக்கியர் கூறும் இந்த 5 விஷயங்களை மறந்துவிடாதீர்கள்.
நேர்மையான வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும்
நீங்கள் பணம் சம்பாதிக்க அல்லது பெற விரும்பினால், உங்கள் கவனத்தை உங்களுடைய செயல்களில் செலுத்த வேண்டும். தனது இலக்குகளை நிர்ணயிக்க முடியாத ஒரு நபர் ஒருபோதும் வெற்றியாளராகவோ அல்லது பணக்காரராகவோ மாற முடியாது.
எப்போதும் சரியான வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். தவறான வழியில் சம்பாதித்த பணம் நிலையற்றதாக இருக்கும். எப்போது வேண்டுமானாலும் அது நம்மை விட்டு போகலாம்.
தானம் செய்ய வேண்டும்
சாணக்கியரின் கூற்றுப்படி, கோவிலில் அவ்வப்போது தட்சிணை வழங்குவது இறைவனின் அருளைக் அதிகரிப்பதோடு உங்கள் வீட்டில் செல்வத்தையும் அதிகரிக்கும், தொடர்ச்சியாக தானம் செய்பவர்கள் வீட்டில் வறுமை வராது.
அதேசமயம் அதிகப்படியான தானம் தீங்கு விளைவிக்கும். எப்பொழுதும் உங்கள் வரம்புக்குள் தானம் செய்யுங்கள். ஒருவர் தன்னிடம் இருக்கும் பணத்தை ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் தானம் செய்வதன் மூலம் அவரின் செல்வம் இரட்டிப்பாகத் தொடங்குகிறது.
வசிக்கும் இடம்
உங்களுக்கு அதிகளவு பணம் வேண்டுமென்றால், வளமான வியாபாரிகள், படித்த புத்திசாலிகள், வீரர்கள், ஆறுகள் மற்றும் மருத்துவர்கள் மற்றும் அனைத்து வேலை வாய்ப்புகளும் உள்ள இடத்தில் தங்குங்கள் அல்லது சாணக்கியர் தனது கொள்கையில் இப்படிப்பட்டவர்களுடன் நட்பு கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
படித்த, நல்லொழுக்கமுள்ள மக்கள் வாழும் இடத்தில் நாம் வாழ்ந்தால், அவர்களின் வாழ்வைப் போலவே நம் வாழ்வும் வளமாக இருக்கும்.
எதிர்காலம் மீது கவனம் வேண்டும்
வாழ்வில் வெற்றிகரமானவர்களும் மற்றும் செல்வந்தர்களும் எப்போதும் சேமிப்பில் கவனம் செலுத்துகிறார்கள். உங்களின் மோசமான நாட்களுக்காக எப்போதும் பணம் சேமிக்கப்பட வேண்டும், ஏனென்றால் வறுமையின் போது எல்லோரும் உங்களை விட்டு விலகும்போது இந்த சேமிப்பு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். எனவே எப்போதும் சேமிப்பில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள் என்று சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் கூறியுள்ளார்.
சுயமரியாதையுடன் இருக்க வேண்டும்
சுயமரியாதை ஒரு நபரின் சிறந்த மூலதனம் என்று கூறப்படுகிறது, அதை ஒருபோதும் யாராலும் வாங்க முடியாது. யார் வேண்டுமென்றாலும் பணம் சம்பாதிக்கலாம், ஆனால் சுயமரியாதையுடன் இருப்பது மிகவும் கடினம்.
இழந்த பணத்தை எப்போதும் வேண்டுமென்றாலும் திரும்பப் பெறலாம் என்று கூறப்படுகிறது, ஆனால் பணம் சம்பாதிப்பதை விட சுயமரியாதையைப் பெறுவது மிகவும் கடினம். பணத்திற்கு அடிமையான மனிதனை விட சுயமரியாதை நிறைந்த மனிதன் பணக்காரன் என்று சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications
