Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்!
சாணக்கிய நீதி படி இந்த 4 குணங்கள் உள்ளவர்கள் நிச்சயம் கோடீஸ்வரர் ஆவர்களாம்..உங்ககிட்ட இந்த குணங்கள் இருக்கா?
Chanakya Niti: சாணக்கியர் இந்திய வரலாற்றின் ஒரு சிறந்த ஆசிரியராவும், ஞானியாகவும் விளங்கினார். அவருடைய காலகட்டத்தில் மிகவும் அறிவுமிக்க மற்றும் புலமை வாய்ந்த நபராக அவர் அங்கீகரிக்கப்பட்டார். அவர் தனது போராட்டங்களையும், அனுபவங்களையும் சாணக்கிய நீதி எனும் நூலில் தொகுத்தார். வாழ்க்கையில் ஒருவர் வெற்றியை அடைவதற்கும், சிறப்பான வாழ்க்கையை வாழவும் பின்பற்ற வேண்டிய சில விஷயங்களைப் பற்றி சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவர் வெற்றிகரமான மற்றும் செழிப்பான வாழ்க்கையை வாழ விரும்பினால், சாணக்கிய நீதியில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களைப் பின்பற்றி நடந்தால், அவர்கள் நிச்சயமாக ஒரு சிறந்த வாழ்க்கையை அடைவார்கள் என்று இன்றும் பலர் நம்புகிறார்கள். அதேபோல், செல்வந்தராக விரும்புகிறவர்களிடம் இருக்க வேண்டிய குணங்களைப் பற்றியும் ஆச்சார்ய சாணக்கியர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அவை என்னென்ன சிறந்த குணங்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சோம்பேறித்தனத்தைத் தவிர்க்க வேண்டும்
ஒருவர் வாழ்க்கையில் செல்வந்தராக விரும்பினால் அவர் நிச்சயம் சோம்பலைத் தவிர்க்க வேண்டும். நல்ல செயல்களைச் செய்து கடினமாக உழைப்பவர்கள் பணம் சம்பாதித்து செல்வந்தர்களாக ஆகிறார்கள். செல்வந்தராக ஒருவர் சோம்பலைக் கைவிட்டுத் தொடர்ச்சியாக உழைக்க வேண்டும். எந்த ஒரு செயலையும் சோம்பல் இல்லாமால் செய்தால் நீங்கள் நிச்சயம் அதில் வெற்றி பெறுவீர்கள். எந்த ஒரு செயலிலும் நம்பிக்கையை இழக்காமல் முன்னேறிச் செல்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள் என்றும் சாணக்கியர் தனது நீதி நூலில் கூறியுள்ளார். இதன் மூலம், அவர்கள் செல்வத்தையும், வெற்றியையும் ஈர்க்கலாம்.
எதிர்கால திட்டங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது
நீங்கள் வாழ்க்கையில் வெற்றியை ஈர்க்க விரும்பினால் ரகசியமாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். எதிர்காலத் திட்டங்களைத் தீட்டி, அவற்றை யாரிடமும் விவாதிக்காமல் ரகசியமாக அதை செயல்படுத்துபவர்கள் ஒரு நாள் நிச்சயம் செல்வந்தர்களாவார்கள். நாம் நமது திட்டங்களை வெளிப்படுத்தினால், அவை நமது வேலைகளில் தடைகளை உருவாக்கும். எனவே, எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. என்று சாணக்கியர் கூறுகிறார். இலக்குகளை அடைவதற்குப் பயப்படாதவர்கள், செல்வந்தர்களாக விரும்புகிறவர்கள், ஒரு கழுகைப் போல எப்போதும் தங்கள் இலக்குகளில் கவனம் செலுத்துவார்கள். அவர்கள் எப்போதும் பொறுமையாக இருப்பார்கள். அவர்கள் எப்போதும் இலக்குகளை அடைய முயற்சிப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் விரைவில் செல்வந்தர்களாவார்கள்.
கடினமான காலங்களில் பொறுமையாக இருப்பவர்கள்
செல்வந்தராவதற்கு கடினமான காலங்களில் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம் என்று சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ளார். பொறுமையுடன் இருப்பவர்கள், கடினமான காலங்களிலும் பொறுமையைக் கடைப்பிடித்து, பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் தேடுபவர்கள், ஒரு நாள் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள். அவர்கள் நிச்சயம் செல்வந்தர்களாக மாறுவார்கள். கடினமான காலங்களில் பொறுமையை இழந்து, அவசரமாக ஏதேனும் செய்யத் துடிப்பது, நாம் செய்ய வேண்டிய உண்மையான வேலையைக் கெடுத்துவிடும் என்று சாணக்கியர் கூறுகிறார். இவ்வாறு செயல்படும் போது அவர்கள் ஒருபோதும் செல்வந்தராக முடியாது.
தன்னம்பிக்கையும், கருணையும் இருக்க வேண்டும்
செல்வந்தராக விரும்புகிறவர்களிடம் தன்னம்பிக்கையும், கருணையும் அவசியம் இருக்க வேண்டும் என்று ஆச்சார்ய சாணக்கியர் கூறுகிறார். ஒருவர் இறைவனை மனமுருக வழிபட்டு, தர்ம வழியைப் பின்பற்றினால், அவர்கள் தங்கள் தன்னம்பிக்கை மற்றும் கருணையின் அடிப்படையில் செல்வந்தராக ஆகிறார்கள். இந்த வழக்கம் உள்ளவர்கள் தங்கள் வேலையை எப்போதும் தெய்வீகமானதாகக் கருதுகிறார்கள். அவர்கள் எந்த வேலையையும் முழு மனதுடன் செய்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் அந்த வேலையில் வெற்றி பெறுகிறார்கள். இந்த வெற்றியின் மூலம் அவர்களின் செல்வமும் அதிகரிக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications
