Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
சாணக்கிய நீதி படி கோடிகளில் புரள நீங்கள் காலையில் செய்ய வேண்டிய விஷயங்கள் இதுதான்... பாலோ பண்ணுங்க...!
Chanakya Niti: இந்தியா வரலாற்றின் தலைசிறந்த அறிஞர்களில் ஒருவராக சாணக்கியர் கருதப்படுகிறார். அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி, இராஜதந்திரி மற்றும் பொருளாதார நிபுணராக விளங்கினார். தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்க, மக்கள் பெரும்பாலும் சாணக்கியரின் அறிவுரைகளை பின்பற்றுகிறார்கள்.
சாணக்கியரின் நீதி சாஸ்திரம் வாழ்க்கையின் பல அம்சங்களின் பிரச்சனைகளைக் கையாளும் அறிவுரைகளைக் கொண்டுள்ளது. சாணக்கிய நீதி என்பது ஒரு வகையில் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு மருந்தாகும்.

சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் தனிப்பட்ட வாழ்க்கை முதல் வேலை, வணிகம் மற்றும் உறவுகள் என அனைத்து அம்சங்களைப் பற்றியும் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். சாணக்கியரின் இந்த வார்த்தைகளை வாழ்க்கையில் பின்பற்றுவது ஒருவரின் பல பிரச்சினைகளை தீர்க்கும். சாணக்கிய நீதியில் காலையில் எழுந்தவுடன் இவற்றைச் செய்தால் வாழ்க்கையில் பல விஷயங்களில் வெற்றி கிடைக்கும். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அதிகாலையில் எழ வேண்டும்
ஒருவர் வாழ்க்கையில் வெற்றிபெற எப்போதும் பிரம்ம முகூர்த்தத்தில் எழ வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். ஆன்மீகக் கண்ணோட்டம் மட்டுமின்றி, ஆரோக்கியக் கண்ணோட்டத்திலும் இது மிகவும் நல்லதாகக் கருதப்படுகிறது. அதிகாலையில் எழுந்திருப்பது வெற்றிக்கான முதல் படி என்கிறார் சாணக்கியர். இதற்குப் பிறகு குளித்து விட்டு கடவுளை வழிபட வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் ஒரு நபர் வாழ்க்கையில் பல நேர்மறையான முடிவுகளைக் காணலாம்.
சூரிய வழிபாடு
குளித்தலுக்குப் பிறகு, சூரியபகவானுக்கு நீரை சமர்ப்பித்து வழிபட வேண்டும் . இதை செய்வதன் மூலம் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த வாய்ப்பு உள்ளது. சூரிய பகவானை வழிபட்ட பிறகு செய்த கடவுளின் பெயரை சொல்லி தியானம் செய்ய வேண்டும். அதன் பிறகு விஷ்ணுவுக்கு சந்தனத்தை அர்ப்பணிக்கவும். அதன் பிறகு இந்த சந்தனத்தை உங்கள் நெற்றியிலும் கழுத்திலும் தடவவும். இவ்வாறு செய்வதன் மூலம் இறைவனின் அருளும், மனஅமைதியும் கிடைக்கும்.
நல்ல ஆரோக்கியம் அவசியம்
சாணக்கிய நீதியின் படி, ஆரோக்கியமே ஒருவரின் முக்கியமான செல்வமாகும், ஆரோக்கியமாக இருப்பது ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அதற்காக, காலையில் எழுந்ததும், உங்கள் ஆரோக்கியத்தைப் பராமரிக்க சிறிது நேரம் செலவிட வேண்டும். யோகா மற்றும் உடற்பயிற்சியை செய்வது நல்லது. ஏனெனில் உடல் நலம் சீராக இருந்தால் மட்டுமே அந்த நபர் தனது இலக்கில் சரியாக கவனம் செலுத்த முடியும்.
பணத்தைப் பயன்படுத்தும் விதம்
பணத்தைப் பாதுகாப்பான மற்றும் சிறந்த முதலீடாகப் பயன்படுத்துபவர் நெருக்கடியான காலத்திலும் மகிழ்ச்சியாக வாழ்வார் என்று சாணக்கியர் கூறுகிறார். பணத்தை சரியான இடத்திலும், நேரத்திலும் பயன்படுத்த வேண்டும். தேவையில்லாமல் பணத்தைச் செலவு செய்பவர்கள் கஷ்ட காலங்களில் துன்பத்தையும், வறுமையையும் அனுபவிப்பார்கள்.
பணத்தை சேமிக்க வேண்டும்
சாணக்கியரின் கூற்றுப்படி, பணத்தை சேமிப்பதற்கான சிறந்த வழி தேவையற்ற செலவுகளை நிறுத்துவதாகும். பணத்தை எப்போது, எவ்வளவு, எங்கு செலவழிக்க வேண்டும் என்பதை அறிந்து வாழ்பவர்கள் சில சமயங்களில் மற்றவர்களின் பார்வையில் கஞ்சத்தனமானவர்களாக தோன்றலாம். ஆனால் அத்தகையவர்கள் மிக மோசமான சூழ்நிலையிலும் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications
