Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
சாணக்கிய நீதி படி இந்த பழக்கம் இருப்பவர்கள் வாழ்க்கையில் சீக்கிரம் செல்வந்தர் ஆகிருவாங்களாம்...!
துரதிர்ஷ்டவசமாக, நமது சமூகத்தில் ஒருவரின் மரியாதையும், அந்தஸ்தும் அவர்களிடம் இருக்கும் பணத்தைக் கொண்டே அளவிடப்படுகிறது. அனைவரின் வாழ்க்கையிலும் பணம் ஈடு செய்ய முடியாத முக்கிய இடத்தை வகிக்கிறது. உலகையே ஆட்டிப்படைக்கும் பணத்தின் மீது யாருக்குத்தான் ஆசை இருக்காது?
அனைவருமே பணத்துக்காகத்தான் உழைக்கிறோம். சாணக்கிய நீதியில் சாணக்கியர் பணம் குறித்தும் விரைவில் செல்வந்தராக என்ன செய்ய வேண்டுமென்று கூறியுள்ளார். செல்வந்தராக விரும்புபவர்கள் வாழ்க்கையில் விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.

இலட்சியம்
நீங்கள் விரைவில் செல்வந்தராக விரும்பினால் உங்களின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று சாணக்கியர் கூறியுள்ளார். இலட்சியம் இல்லாதவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் வெற்றி பெறமாட்டார்கள். மேலும் உங்களின் செல்வம் எப்போதும் நேர்மையான வழியில் பெறப்பட்டதாக இருக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். நேர்மையற்ற வழியில் சம்பாதிக்கும் பணம் விரைவில் உங்களை விட்டு சென்றுவிடும்.
தானம்
சாணக்கிய நீதியின் படி ஏழைகளுக்கு நீங்கள் செய்யும் தானம் உங்களுக்கு கடவுளின் கருணையை அளிப்பதோடு உங்களின் செல்வம் அதிகரிக்கவும் உதவும் மற்றும் உங்கள் வீட்டிற்கு வறுமை வராது. அதேசமயம் அதிகளவு தானமும் நல்லதல்ல. உங்களின் வருமானத்திற்குள் தானம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். தானம் செய்பவர்களுக்கு அவர்கள் செய்ததை விட இருமடங்கு செல்வம் கிடைக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
நண்பர்கள்
செல்வந்தராக விரும்புபவர்கள் வளமான வியாபாரிகள், படித்தவர்கள், போர்வீரர்கள் மற்றும் மருத்துவர்களுடன் நட்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். தூய்மையானவர்கள் மற்றும் படித்தவர்கள் அருகில் இருக்கும் போது விரைவில் நம் வாழ்க்கையில் செல்வம் பெருகும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
எதிர்காலத்தில் கவனம்
செல்வந்தர்கள் மற்றும் வெற்றியாளர்கள் எப்போதும் எதிர்காலத்திற்கான சேமிப்பில் கவனம் செலுத்துவார்கள். எதிர்காலத்திற்காக சேமிக்கும் பழக்கம் எப்போதும் உங்களிடம் இருக்க வேண்டும், ஏனெனில் அதுதான் உங்களை மோசமான தருணங்களில் வறுமையிலிருந்து பாதுகாக்கும். எனவேதான் சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் எப்போதும் சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
சுயமரியாதை
ஒருவர் எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய சுயமரியாதையை இழக்கக் கூடாதென சாணக்கியர் கூறுகிறார். ஏனெனில் பணம் சம்பாதிப்பதை விட சுயமரியாதையை சம்பாதிப்பது கடினம் என சாணக்கியர் கூறுகிறார். இழந்த பணத்தை மீண்டும் பெற்றுவிடலாம் ஆனால் எவ்வளவு முயன்றாலும் இழந்த சுயமரியாதையை திரும்பப்பெற முடியாது. மேலும் சுயமரியாதை மிக்கவர்கள் ஒருபோதும் பணத்திற்கு அடிமையாக இருக்கமாட்டார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications


