Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
சாணக்கிய நீதி படி இந்த 5 நபர்கள் வாழ்க்கை முழுக்க நிம்மதியே இல்லாமல் அவதிப்படுவார்களாம்...!
Chanakya Niti: ஆச்சார்ய சாணக்கியர் பண்டைய இந்தியாவின் ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும் ராஜதந்திரி. மௌரியப் பேரரசின் வளர்ச்சியில் ஆச்சார்ய சாணக்கியர் முக்கிய பங்கு வகித்தார். அவரது கொள்கைகளும், பாடங்களும் எக்காலத்திற்கும் பொருத்தமானவை. சாணக்கியரின் கொள்கைகள் ஒருவரின் வாழ்க்கையில் வெற்றிபெற மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. நீங்கள் வாழ்க்கையில் முன்னேற விரும்பினால், சாணக்கியர் பரிந்துரைத்த அறிவுரைகளைப் பின்பற்றலாம்.
அவரின் அறிவுரைகள் ஒருவர் தனது இலக்குகளை அடைய ஊக்கமளிக்கிறது. அதனால்தான் இன்றும் மக்கள் சாணக்கிய நீதியைப் பின்பற்றுகிறார்கள். ஆச்சார்ய சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் எப்போதும் மகிழ்ச்சியற்றவர்களாகவே இருக்கும் சிலரைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்கள்.

சாணக்கிய நீதியின்படி, இவர்கள் எப்போதும் கவலையுடனும், சோகத்துடனுமே இருப்பார்கள். அவர்களால் வாழ்க்கையில் ஒருபோதும் முன்னேற முடியாது. அவர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஒழுக்கமில்லா குழந்தையை பெற்றவர்கள்
ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, தகுதி மற்றும் ஒழுக்கமில்லாத மகன் அல்லது மகளைக் கொண்ட பெற்றோர் எப்போதும் சோகமாகவும், கலக்கமாகவும் இருப்பார்கள். அவர்கள் எப்போதும்சமூகத்தில் தலை குனிந்து நடக்க வேண்டியிருக்கும். மேலும், அவர்கள் வாழ்நாள் முழுவதும் தங்கள் குழந்தைகளைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் முன்னேற முடியாது.
கடன் பிரச்சினை உள்ளவர்கள்
சாணக்கிய நீதியின்படி, கடன் பிரச்சினை உள்ளவர்கள் எப்போதும் அமைதியற்றவர்களாக இருப்பார்கள். அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் எப்போதும் மகிழ்ச்சியற்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் கடனைத் திருப்பிச் செலுத்துவதிலேயே செலவிடுகிறார்கள். கடன் பிரச்சினையில் சிக்கியவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் வெற்றிபெற முடியாது.
குடும்பத்தில் மோசமான பெண்கள் உள்ளவர்கள்
சாணக்கிய நீதியின்படி, பெண்களின் நடத்தை நன்றாக இல்லாத வீடுகளில் உள்ளவர்கள் எப்போதும் சோகமாகவும், மனநிம்மதி இல்லாதவர்களாகவும் இருப்பார்கள். அந்த வீட்டில் உள்ளவர்கள் சமூகத்தில் எப்போதும் தலை குனிந்து நடக்க வேண்டியிருக்கும். மேலும் அவர்கள் வாழ்நாள் முழுவதும் அவமானத்தை சந்திப்பார்கள். அத்தகைய வீடுகளில் உள்ளவர்கள் எப்போதும் மகிழ்ச்சியற்றவர்களாகவே இருப்பார்கள்.
பொய் பேசும் மனைவியை பெற்றவர்கள்
பொய் சொல்லும் அல்லது ஏமாற்றும் பெண்களை ஒருவர் திருமணம் செய்யக்கூடாது என்று சாணக்கி ய நீதி கூறுகிறது. தொடர்ந்து பொய் சொல்லும் ஒரு பெண் இதை தன் கணவருக்கு எதிராகவும் பயன்படுத்துவார்கள். அத்தகைய பெண்கள் குடும்பத்தையே அழிக்கத் துணிவார்கள் என்றும் சாணக்கியன் கூறுகிறார். அத்தகைய பெண்ணை திருமணம் செய்த ஆண் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள்.
துரோகம் செய்யும் மனைவியை பெற்றவர்கள்
தன் குடும்பத்திற்கு துரோகம் செய்யும் பெண்ணை ஒருபோதும் நம்பக்கூடாது. அவர் தன் கணவருக்கு மிகப்பெரிய சாபமாக இருக்கலாம். நீங்கள் அத்தகைய பெண்களை மணந்தால், அவர்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கையில் கணவரை ஏமாற்றி திருமணத்தை அழித்துவிடுவார்கள். அப்படிப்பட்ட பெண்ணை மணந்த ஆண்கள் எப்போதும் பதட்டத்துடனேயே வாழ வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் நிம்மதியே இருக்காது.



Click it and Unblock the Notifications
