Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
சாணக்கிய நீதி படி இந்த 4 குணங்கள் இருக்கும் மகன் அவரின் பெற்றோரை பெருமைப்படுத்துபவர்களாக இருப்பார்களாம்...!
Chanakya Niti: சாணக்கியர் உலகம் பார்த்த இந்தியாவைச் சேர்ந்த சிறந்த தத்துவஞானியாகக் கருதப்படுகிறார். சாணக்கியர் வரலாற்றில் விஷ்ணுகுப்தர், கௌடில்யன் போன்ற பல பெயர்களால் குறிப்பிடப்படுகிறார். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்படக்கூடிய மாற்றங்களைப் பற்றி சாணக்கிய நீதி தெளிவாக விளக்குகிறது. வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதையும் இது விளக்குகிறது.
சாணக்கிய நீதியின் படி, பெற்றோரின் மகிழ்ச்சி என்றென்றும் நிலைத்திருக்கவும், செல்வம் இரட்டிப்பாகவும் அவர்களுக்கு பிறக்கும் மகனுக்கு சில குணங்கள் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஒரு மகனிடம் வாழ்க்கையை மாற்றும் இந்த குணங்கள் இருந்தால், அது பெற்றோரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் மற்றும் அவர்களின் வாழ்க்கையில் செழிப்பையும் உண்டாக்கும் என்று சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ளார். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஞானியாக இருக்க வேண்டும்
சாணக்கிய நீதி படி ஒரு மகனுக்கு இருக்க வேண்டிய அடிப்படையான குணம் ஞானமாகும். ஏனெனில் அது இருந்தால் ஒருவர் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய உயரத்தையும் அடைய முடியும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் ஞானமுடைய ஒரு மகன் நூறு ஞானிகளுக்கு சமம் என்று கூறுகிறார். இந்த குணங்களைக் கொண்ட ஒரு மகன் வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் பெற்றோருக்கு மகிழ்ச்சியையும், ஆறுதலையும் தருவார்கள் என்று சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
புத்திசாலியாக இருக்க வேண்டும்
ஞானத்தைப் போலவே புத்திசாலித்தனமும் முக்கியம். பெரும்பாலும் உங்களுக்கு புத்திசாலித்தனம் இல்லாத மகன் இருந்தால் அவர்களால் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் மகிழ்ச்சியும் இருக்காது. அதுமட்டுமின்றி, அவர்கள் தங்கள் பெற்றோருக்கு வாழ்நாள் முழுவதும் துன்பத்தை மட்டுமே கொடுப்பார்கள். புத்திசாலித்தனம் ஒருவரின் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது. புத்திசாலித்தனமான மகன்களைப் பெற்ற பெற்றோர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியையும், அமைதியையும் பெறுவார்கள்.
தவறான பழக்கங்கள் இல்லாதவராக இருக்க வேண்டும்
எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஒரு மகன் பொக்கிஷம் போன்றவர், அப்படிப்பட்ட மகனைப் பெற்ற பெற்றோர்கள் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள். சாணக்கியரும் தனது நீதி சாஸ்திரத்தில் மகனுக்கு கெட்ட பழக்கம் இருந்தால், அவர்கள் வாழ்வதை விட இறப்பதே நல்லது என்று கூறுகிறார். அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தங்கள் பெற்றோருக்கு துக்கத்தையும், துன்பத்தையும் தருகிறார்கள். எனவே, இப்படிப்பட்ட ஒரு மகனைப் பெற்றெடுப்பது அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் துண்பத்தைக் கொடுக்கும்.
பெரியவர்களை மதிப்பவர்கள்
உங்கள் மகன் தன் பெற்றோர் மற்றும் பெரியவர்களை மதிக்கும் நபராக இருந்தால், அவர்கள் உங்களை மிகவும் நேசிக்கிறார்கள் என்று அர்த்தம். உங்கள் மகனுக்கு உங்கள் மீது மரியாதை இல்லாவிட்டால், அது உங்கள் வாழ்க்கையில் பிரச்சினைகளை உருவாக்கி நிம்மதியைக் கெடுக்கும் என்று சாணக்கிய நீதி கூறுகிறது.



Click it and Unblock the Notifications
