Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சாணக்கிய நீதி படி இந்த 3 இடங்களில் வசிப்பது உங்களின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்... உடனே கிளம்பிருங்க...!
Chanakya Niti: சில சூழ்நிலைகள் நம் வாழ்க்கையில் நம்மை ஆபத்தில் சிக்க வைக்கும். நமக்குச் சாதகமாக இல்லாத சூழ்நிலையைத் தவிர்ப்பது புத்திசாலித்தனத்தின் அடையாளம். சில சமயம் தேவையில்லாத விஷயங்களை தலையில் போட்டுக் கொள்வது அறிவுக்குறைபாட்டின் அறிகுறியாகும். வார்த்தைகள், செயல்கள் மற்றும் உணர்ச்சிகளின் மூலம் ஒரு சூழ்நிலையைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு நம்பிக்கையான நபர் எங்கு பேச வேண்டும், எங்கு பேசக்கூடாது, எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்பதை நன்கு அறிவார்.
சாணக்கியர் பண்டைய இந்தியாவின் ஒரு சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் பொருளாதார நிபுணராவார். சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் நாம் தவிர்க்க வேண்டிய சில சூழ்நிலைகளைப் பற்றி விளக்கியுள்ளார். ஏனெனில் இந்த சூழ்நிலைகள் நம்மை ஆபத்தில் சிக்க வைக்கும். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வன்முறை நிறைந்த இடம்
வன்முறை அல்லது கலவரம் ஏற்படும் சூழ்நிலைகளிலிருந்து புத்திசாலிகள் எதையும் சிந்திக்காமல் உடனடியாக வெளியேற வேண்டும் என்று சாணக்கிய நீதி கூறுகிறது. அந்த இடத்தில் தொடர்ந்து இருப்பது ஆபத்தை ஏற்படுத்தும். சாணக்கியர் அவர்கள் துளியும் தாமதிக்காமல் அங்கிருந்து தப்பிக்க அறிவுறுத்துகிறார்.
அதேபோல் எதிரி தாக்க வரும்போது, தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியாது என்பதை உணர்ந்தால், உடனடியாக அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்ய வேண்டும். நிராயுதபாணியாக இருக்கும் போது யாரையும் எதிர்கொள்ளத் துணியக்கூடாது. அந்த சூழலில் வீரத்திற்கும், சுயமரியாதைக்கும் முக்கியத்துவம் கொடுப்பது முட்டாள்தனம் என்கிறார் சாணக்கியர்.
உணவுப்பற்றாக்குறை உள்ள இடம்
தற்போதைய காலகட்டத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுத்துவது அரிது. ஆனால் உணவு கிடைக்காத இடத்திலோ, உணவு பற்றாக்குறை உள்ள இடத்திலோ நீண்ட காலம் வசிக்க வேண்டாம். சீக்கிரம் அங்கிருந்து கிளம்விபி விட வேண்டும்.
குற்றவாளி அருகில் இருக்கக்கூடாது
ஒரு குற்றவாளி அருகில் எப்போதும் இருக்கக்கூடாது. ஏனெனில் அவர்கள் உங்களுக்கு எப்போது வேண்டுமென்றாலும் ஆபத்தை ஏற்படுத்தலாம். அவர்களுடன் பேசுவதோ, பழகுவததோ அல்லது அவர்களின் அருகில் இருப்பது கூட ஆபத்தை ஏற்படுத்தலாம்.
தவிர்க்க வேண்டியவர்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, நம்மைச் சுற்றியுள்ள சிலர் எதிரிகள் மற்றும் பாம்புகளை விட அதிக விஷம் கொண்டவர்கள், எனவே அவற்றை அடையாளம் கண்டுகொள்வது அவசியம். இல்லையெனில் அதுவும் நமக்கு ஆபத்தாக மாறும்.
அவர்களில் முக்கியமானவர்கள் பேராசை கொண்டவர்கள். தங்கள் நலனில் மட்டுமே அக்கறை கொண்டு தங்களுக்கு மட்டுமே நல்லதைச் செய்யும் நபர்களை உங்கள் வாழ்க்கையிலிருந்து விலக்கி வைக்கவும். உங்களின் ஆபத்தான சூழ்நிலையில் கூட அவர்களை நம்ப வேண்டாம். அதேபோல், நல்ல முறையில் நடந்துகொள்ளத் தெரியாதவர்களிடமும், அவமரியாதை செய்பவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். அத்தகையவர்களை எப்போதும் நம்பாதீர்கள். அவர்கள் உங்களுக்கு எந்த நன்மையும் செய்ய மாட்டார்கள். எதிரிகள் முன்னால் இருந்து தாக்கினால், அவர்கள் பின்னால் இருந்து குத்துவார்கள்.
முன்கோபம் மற்றும் குறுகிய மனப்பான்மை கொண்டவர்களுடன் பழகுவதைத் தவிர்க்கவும். கோபம் என்பது ஒருவரின் மிகப்பெரிய எதிரி. கோபம் மற்றவர்களைப் புரிந்துகொள்ளும் திறனையும் பகுத்தறிவுடன் சிந்திக்கும் திறனையும் அழிக்கிறது. அவர்களை கையாள்வது என்பது மிகவும் ஆபத்தானது.



Click it and Unblock the Notifications
