Latest Updates
-
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு குழம்பு வையுங்க.. இட்லிக்கு டக்கரா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டப்போகுதாம் -
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம் -
200 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் தனித்துவமான 8 கிராமங்கள் - இந்த கிராமங்களுக்கு போறதே ரொம்ப கஷ்டமாம் -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மியாம் - ஜாக்கிரதை -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி கல்யாண வீட்டு ஸ்டைல் பால் கறி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
ஜூன் 28-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சாணக்கிய நீதி படி இந்த 6 நபர்களுக்கு உதவுவது உங்கள் வாழ்க்கையில் நிறைய அவமானங்களை ஏற்படுத்துமாம்...!
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவில் ஒரு சிறந்த ஆசிரியர், தத்துவவாதி மற்றும் பொருளாதார நிபுணர் ஆவார். வாழ்க்கையின் வெற்றிக்கான அவரது மந்திரங்கள் இன்னும் கோடிக்கணக்கான மக்களால் பின்பற்றப்படுகின்றன. இந்த நவீன யுகத்திலும் சாணக்கியரின் அர்த்தசாஸ்திரமும், சாணக்கிய நீதியும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
சாணக்கியரின் வார்த்தைகளை ஒருவர் பின்பற்றினால் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றியை அடையலாம். சாணக்கியர் வாழ்க்கைக் குறித்த பல விஷயங்களில் தனது கொள்கையை நமக்கு வழங்கியுள்ளார். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வாழ்ந்தால் தான் சமுதாயத்தில் உயர முடியும். இல்லாவிட்டால் நமது நிலை மோசமாகிவிடும். அதனால் துன்பப்படுபவர்களுக்கு உதவுவது நமது கடமை.

ஆனால் நாம் யாருக்கு உதவுகிறோம் என்பதுதான் இங்கு முக்கியம். சாணக்கியரின் கூற்றுப்படி நாம் சிலருக்கு நாம் எப்போதும் உதவக்கூடாது. அது நமது கண்ணியத்தையும், வாழ்க்கையையும் அழித்துவிடும் என்கிறார் சாணக்கியர். சாணக்கிய நீதியின் படி நாம் வாழ்க்கையில் யாருக்கெல்லாம் உதவக்கூடாது என்று தெரிந்து கொள்ளலாம்.
பொய் பேசுபவர்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, நீங்கள் ஒருபோதும் பொய் பேசுபவர்களுக்கு உதவக்கூடாது. அப்படிப்பட்டவர்கள் உங்களை நம்ப வைத்து ஏமாற்றலாம். பொய் சொல்லி உதவி வாங்குபவர்கள் பின்னாளில் உங்களுக்கே ஆபத்தை ஏற்படுத்துவார்கள்.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள்
போதைப்பொருள் மற்றும் மதுவுக்கு அடிமையானவர்களுக்கு எந்த சூழ்நிலையிலும் நீங்கள் உதவி செய்யக்கூடாது என்று சாணக்யா கூறுகிறார். முடிந்தவரை அவர்களிடமிருந்து விலகி இருப்பதே உங்கள் வாழ்க்கைக்கு நல்லது. ஏனெனில் அவர்கள் உங்கள் வாழ்க்கைக்கு மட்டுமின்றி நற்பெயருக்கு ஆபத்தை ஏற்படுத்துவார்கள்.
பொறாமைக் கொண்டவர்கள்
தீய எண்ணங்கள் அல்லது எப்போதும் பொறாமை கொண்ட ஒருவருக்கு ஒருபோதும் உதவாதீர்கள். ஏனென்றால் அவர்கள் உங்களிடமிருந்து உதவி பெற்று உங்களைப் பற்றி பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம். பொறாமை கொண்டவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால், அவர்கள் ஒருபோதும் இருப்பதை வைத்து திருப்தி அடைவதில்லை. அவர்கள் எப்போதும் மற்றவர்களிடம் இருப்பதைக் கண்டு பொறாமைப்படுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உதவாமல் இருப்பது நல்லது. ஏனெனில் அவை உங்களுடைய மன அமைதியை குலைத்துவிடும்.
திருப்தி இல்லாதவர்கள்
நீங்கள் ஒருபோதும் மகிழ்ச்சியற்றவர்களுக்கு உதவக்கூடாது என்று சாணக்கிய நீதி கூறுகிறது. ஏனென்றால் அவர்கள் எதிலும் எவரிடத்திலும் திருப்தி அடைவதில்லை. பல்வேறு காரணங்களை கண்டுபிடித்து எப்போதும் புகார் செய்கின்றனர். அத்தகையவர்களுக்கு உதவுவது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
பாவம் செய்பவர்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, பாவ செயல்களை செய்பவர்களுக்கு ஒருபோதும் உதவக்கூடாது, ஏனெனில் அவர்கள் மற்றவர்களையும் தவறான செயல்களைச் செய்ய வற்புறுத்துகிறார்கள். அப்படிப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கு உதவி செய்தால் அவமானம் ஏற்படும் என்கிறார் சாணக்கியர்.
முட்டாள்கள்
நீங்கள் எப்போதும் முட்டாள்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். ஏனென்றால், மற்றவர்களின் குறைகளைக் கண்டறிவதில் அவர்கள் மிகவும் பிஸியாக இருப்பதால், உலகில் நடக்கும் எதையும் அவர்கள் உணர மாட்டார்கள். சாணக்கியர் ஒருபோதும் அவர்களுக்கு அறிவுரை சொல்லவும், உதவவும் கூடாது என்கிறார். வாழ்க்கையில் சரியான விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியாத முட்டாள்களுக்கு அறிவுரை கூறுவதில் அல்லது உதவுவதில் அர்த்தமில்லை.



Click it and Unblock the Notifications
