Latest Updates
-
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ? -
விரிசல் இல்லாம பூர்ண கொழுக்கட்டை செய்யணுமா? இதோ சில டிப்ஸ்.. -
பெண்களுக்கு ஆண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் பெண்களால் ஆளப்படும் இந்தியச் சமூகம் எது தெரியுமா?
சாணக்கிய நீதி படி இந்த 5 நபர்களிடம் நண்பராவது சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்வது போன்றதாம்...!
Chanakya Niti: சாணக்கியர் பல நூற்றாண்டுகளுக்கு முன் கூறிய கொள்கைகள் இன்றும் பொருத்தமானதாக இருக்கிறது. அவர் தனது சாணக்கிய நீதியில், மனித வாழ்க்கையை எளிமையாகவும் வெற்றிகரமாகவும் மாற்றுவது தொடர்பான பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் சமுதாயத்தின் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் அறிவுரைகளை வழங்கியுள்ளார். செல்வம், சொத்து, மனைவி, நட்பு மற்றும் திருமணம் போன்ற அனைத்து தலைப்புகளிலும் சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் ஆழமாகப் பேசியுள்ளார்.
இன்றும் மக்கள் சாணக்கியரின் கொள்கைகளைப் பின்பற்றி வாழ்க்கையில் வெற்றிபெற முயற்சிக்கின்றனர். சாணக்கியரின் கூற்றுப்படி, தன் நண்பன் யார், எதிரி யார் என்பதை அறிந்தவர் வாழ்க்கையில் ஒருபோதும் தோல்வியடைய மாட்டார். வாழ்க்கையின் முன்னேற்றம் அல்லது வீழ்ச்சி உங்கள் நிலைத்தன்மையைப் மட்டுமே பொறுத்தது.

நீங்கள் வாழ்க்கையில் முன்னேற விரும்பினால், சாணக்கியரின் சில அறிவுரைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். சாணக்கிய நீதியில் கூறியுள்ள படி, வாழ்க்கையில் வெற்றியை அடைய குறிப்பிட்ட குணம் உள்ளவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். அவர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சிறிய விஷயங்களுக்குக் கூட கோபப்படுபவர்கள்
சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கோபப்படுபபவர்கள் எப்போதும் தனக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பிரச்சனைகளை உண்டாக்குகிறார்கள். அத்தகைய மனப்பான்மை கொண்டவர்கள் ஒருபோதும் தங்கள் தவறை உணர மாட்டார்கள் மற்றும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
எது சரி எது தவறு என்று அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. அவர்களுக்கு சரி, தவறு குறித்த புரிதல் இருக்காது. எதற்கெடுத்தாலும் கோபப்படுபவர்கள் எப்போது வேண்டுமென்றாலும் வெடிக்கும் வெடிகுண்டு போன்றவர்கள். அவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது.
சுயநலவாதிகள்
ஒரு சுயநலவாதி அனைத்து தருணங்களிலும் தனது சுயநலத்தைப் பற்றி மட்டுமே சிந்திப்பார். அப்படிப்பட்டவர்கள் தங்கள் நன்மைக்காக யாருக்கும் தீங்கு செய்வார்கள். தங்கள் சொந்த நலன்களுக்கு முன்னுரிமை கொடுப்பவர்களிடமிருந்து விலகி இருக்குமாறு சாணக்கியர் கூறுகிறார். நீங்கள் பிரச்சினைகளில் இருக்கும் போது, அப்படிப்பட்டவர்கள் சில சமயங்களில் உங்கள் பிரச்சனையை மோசமாக்க முயற்சிப்பார்கள். அத்தகையவர்கள் யாருக்கும் உதவ மாட்டார்கள்.
பொய் சொல்பவர்கள்
நல்ல நோக்கத்திற்காக பொய் சொல்ல தயங்கக்கூடாது என்று திருவள்ளுவரே கூறியுள்ளார், அதைதான் சாணக்கியரும் வழிமொழிகிறார். ஆனால் சிலர் தேவையே இல்லாமல் வேண்டுமென்றே பொய் சொல்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் எப்போது வேண்டுமானாலும் உங்களை ஏமாற்றலாம். அத்தகையவர்களை ஒருபோதும் நம்பாதீர்கள். சாணக்கியர் அவர்களிடமிருந்து தூரமாக இருக்க வேண்டுமென்று அறிவுறுத்துகிறார்.
முகஸ்துதி செய்பவர்கள்
தேவையில்லாமல் பிறரைப் புகழ்பவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர் உங்கள் குறைகளைச் சொல்லாமல் அதனை மறைத்து விடுகிறார்கள். அவர்கள் தங்கள் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள உங்களை பொய்யான புகழ்ச்சியால் ஏமாற்றுவார்கள். உங்கள் அதிகாரத்தையும் பணத்தையும் பார்ப்பவர்கள் உங்களுக்கு எப்போது வேண்டுமென்றாலும் ஆபத்தானவர்களாக மாறுவார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.
ரகசியங்களை காப்பாற்ற முடியாதவர்கள்
சாணக்கியர் கூறுகையில், மற்றவர்களின் ரகசியங்களை எப்படி பாதுகாப்பது என்று தெரியாத ஒரு நபர் உண்மையில் அனைவரையும் விட ஆபத்தானவர். அப்படிப்பட்டவர்களிடம் ஏதேனும் ரகசியத்தை சொன்னால், அதை பயன்படுத்தி உங்களை சிக்கலில் மாட்டிவிடுவார்கள். ரகசியங்களை காக்க முடியாத ஒரு நபர் உங்கள் வாழ்க்கையில் நிறைய தீங்கு விளைவிக்கலாம். அப்படிப்பட்டவர்களிடம் இருந்து எப்பொழுதும் விலகி இருக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications

