Latest Updates
-
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
சாணக்கிய நீதி படி இந்த 4 நபர்களின் வேலையில் தலையிடுவது அவமானத்தையும், மரணத்தையும் ஏற்படுத்துமாம்...!
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவின் சிறந்த அரசியல்வாதி, பொருளாதார நிபுணர் மற்றும் அறிஞர். வாழ்க்கையின் பல அம்சங்களைப் பற்றி சாணக்கியர் பல விஷயங்களை தன்னுடைய சாணக்கிய நீதியில் கூறியிருக்கிறார்.
மனித வாழ்க்கையை எளிமையாகவும், வெற்றிகரமானதாகவும் ஆக்குவது தொடர்பான பல விஷயங்கள் சாணக்கிய நீதியில் கூறப்பட்டுள்ளது. வாழ்க்கையில் பிரச்சனைகள் இல்லாமல் இருப்பதே மகிழ்ச்சிக்கான ரகசியமாகும்.

ஆனால் வாழ்க்கையில் எந்த ஒரு பிரச்சனையையும் எப்படி சமாளிப்பது என்பதை கற்றுக் கொள்வதே வெற்றியின் ரகசியம். மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்த தேவையான ரகசியங்களைப் பற்றி சாணக்கியர் தனது நூலில் கூறியிருக்கிறார். மற்றவர்களின் இந்த விஷயங்களில் தலையிடக் கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். அவ்வாறு தலையிடுவது உங்களின் நிம்மதியைக் கெடுக்கும்.
புத்திசாலிகள் உரையாடலில் தலையிடக்கூடாது
இரண்டு புத்திசாலிகள் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர்களின் உரையாடலை யாரும் குறுக்கிடக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். அவ்வாறு செய்வது அவர்களின் பணிக்கு இடையூறாக இருக்கும். இதைத்தான் முட்டாள்தனம் என்பார்கள்.
ஒரு புத்திசாலி மனிதன் இதை ஒருபோதும் செய்ய மாட்டான். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களுக்கிடையே சென்றால், அவர்கள் உங்களை முட்டாள் என்று நினைப்பார்கள். இது உங்கள் நற்பெயரையும் மரியாதையையும் கெடுக்கும்.
கணவன்-மனைவி உரையாடல்
கணவனும் மனைவியும் வாழ்க்கைத் தேரின் இரு சக்கரங்கள் என்று சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் கூறுகிறார். கணவனும் மனைவியும் சேர்ந்து சில வேலைகளைச் செய்யும்போது, மூன்றாவது நபர் அவர்களின் வேலையில் தலையிடக் கூடாது என்கிறார் சாணக்கியர்.
மேலும், அவர்களின் உரையாடலில் யாரும் குறுக்கிடக்கூடாது. இது அவர்களின் தனியுரிமையின் மீதான அத்துமீறல் என்கிறார் சாணக்கியர்.
கலப்பைக்கும்-மாட்டிற்கும் இடையில்
கலப்பையும் எருதும் ஒன்றாகச் செல்லும்போது அவற்றுக்கிடையே செல்ல வேண்டாம். அது உங்களை காயப்படுத்தலாம். இந்த தவறை செய்வது மரணத்திற்கு வழிவகுக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
பூஜைக்கும்-பூசாரிக்கு இடையில்
ஒரு பூசாரி யாக குண்டத்திற்கு அருகில் அமர்ந்து பூஜை செய்யும் போது, யாரும் அதைக் கடந்து செல்லக்கூடாது. இவ்வாறு செய்வதால் அவர்களின் வழிபாடு தடைபடுவதுடன் பூஜையும் தடைபடும். இது ஒரு நபரை பாவத்திற்கு உடந்தையாக ஆக்குகிறது என்று சாணக்கியர் கூறுகிறார்.
சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, ஒரு நபர் மேற்கூறிய விஷயங்களில் அல்லது அவர்களின் வாழ்க்கையில் ஒருபோதும் தலையிடக்கூடாது. இது ஒரு நபருக்கு மரணம் அல்லது சேதத்தை ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் வெற்றிபெற சாணக்கியர் கூறும் வழிகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
ஒற்றுமையை கடைபிடிப்பவர்
வேலையில் அனைவரையும் ஒன்றிணைப்பவர்கள் வெற்றியை அடைவார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். அவர்கள் யார் மீதும் பொறாமை கொள்ள மாட்டார்கள், எல்லா துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். சாணக்கியரின் கூற்றுப்படி, ஒற்றுமையே ஒருவரின் பெரிய பலம். அனைவரின் ஆதரவும் இருந்தால் கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிக்கலாம்.
மரியாதை
சாணக்கிய நீதியின் படி, சக ஊழியர்களின் ஆதரவு இல்லாமல் எந்த இலக்கையும் அடைய முடியாது. அனைவரின் ஆதரவையும் பெற, முதலில் அவர்களை மதிக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் பணிகளை சுமூகமாக முடிக்க முடியும். அனைவரையும் மதித்து நடப்பதன் மூலம் தான் முன்னேற்றத்திற்கான பாதையை திறக்க முடியும்.
ஈகோவை தவிர்க்க வேண்டும்
ஒரு மனிதன் உயர் பதவியை அடையும்போதோ அல்லது ஏதேனும் பெரிய வெற்றியை அடையும்போதோ அவருக்குள் ஒரு ஈகோ எழுகிறது என்கிறார் சாணக்கியர். திறமையானவர்களை அடக்க முயல்பவர்களின் எதிர்காலம் அழியத் தொடங்குகிறது என்கிறார் சாணக்கியர்.
கங்காரத்தில் ஒருவர் அழிந்துவிடக்கூடும் என்பதால், அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எனவே ஈகோவை விட்டுவிட்டு வாழ்க்கையில் முன்னேற முயற்சி செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications
