Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
சாணக்கிய நீதி படி இந்த 4 விஷயங்களில் தலையிடுபவர்கள் வாழ்க்கையில் மரணம் சீக்கிரம் வந்துருமாம்...!
Chanakya Niti: மகிழ்ச்சியின் ரகசியம் வாழ்க்கையில் பிரச்சினைகளைத் தவிர்ப்பது அல்ல, பிரச்சினைகளைத் தீர்க்கும் கலையைக் கற்றுக்கொள்வதுதான். மகிழ்ச்சியான வாழ்க்கையின் பல ரகசியங்கள் சாணக்கிய நீதியில் கூறப்பட்டுள்ளன. ஆச்சார்யா சாணக்கியர் பண்டைய இந்தியாவின் ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும் இராஜதந்திரி ஆவார்.
அவர் தனது சாணக்கிய நீதியில் வாழ்க்கையை வெற்றிகரமாக்க பல்வேறு வகையான கொள்கைகளை குறிப்பிட்டுள்ளார். ஒருவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் சிலரின் வேலையில் தலையிடக் கூடாது என்கிறார் சாணக்கியர். சாணக்கிய நீதியில் மகிழ்ச்சி மற்றும் வெற்றிக்கான ரகசியங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளவற்றை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

புத்திசாலிகளின் விவகாரங்களில் தலையிடக்கூடாது
இரண்டு புத்திசாலிகள் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர்களின் உரையாடலில் யாரும் குறுக்கிடக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். அவ்வாறு செய்வது அவர்களின் பணிக்கு இடையூறாக இருக்கும். இதைத்தான் முட்டாள்தனம் என்பார்கள்.
ஒரு புத்திசாலி மனிதன் இதை ஒருபோதும் செய்ய மாட்டான். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களுக்கிடையே சென்றால், அவர்கள் உங்களை முட்டாள் என்று நினைப்பார்கள். இது உங்கள் நற்பெயரையும் மரியாதையையும் கெடுக்கும்.
கணவன்-மனைவி உரையாடல்கள்
கணவனும் மனைவியும் வாழ்க்கைத் தேரின் இரு சக்கரங்கள் என்று சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் கூறுகிறார். கணவனும் மனைவியும் சேர்ந்து சில வேலைகளைச் செய்யும்போது, மூன்றாவது நபர் அவர்களின் வேலையில் தலையிடக் கூடாது என்கிறார் சாணக்கியர். மேலும், அவர்களின் உரையாடலில் யாரும் குறுக்கிடக்கூடாது. இது அவர்களின் பிரைவசியின் மீதான படையெடுப்பு என்கிறார் சாணக்கியர்.
கலப்பைக்கும் எருதுக்கும் இடையில்
கலப்பையும் எருதும் ஒன்றாகச் செல்லும்போது அவற்றுக்கிடையே செல்ல வேண்டாம். அது உங்களை காயப்படுத்தலாம், சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம். இந்த தவறை செய்தால் மரணம் ஏற்படும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
பூஜைக்கும்-பூசாரிக்கு இடையில்
ஒரு பூசாரி ஓமகுண்டத்திற்கு அருகில் அமர்ந்து பூஜை செய்யும் போது, யாரும் அதைக் கடந்து செல்லக்கூடாது. இவ்வாறு செய்வதால் அவர்களின் வழிபாடு தடைபடுவதுடன் பூஜை தடைபடும். இது ஒரு நபரை பாவத்திற்கு உடந்தையாக ஆக்குகிறது என்று சாணக்கியர் கூறுகிறார்.
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நபர் மேற்கூறிய விஷயங்களில் ஒருபோதும் தலையிடக்கூடாது. இது ஒரு நபருக்கு மரணம் அல்லது அவமானத்தை ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
