Latest Updates
-
ஆண்டின் கடைசி 3 மாதம் இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த நாட்டில் மக்கள் டிவி பாத்தா சிறை தண்டனை முதல் மரண தண்டனை கூட கொடுப்பார்களாம் - எந்த நாடு தெரியுமா -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம்
சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவின் ஒரு சிறந்த அறிஞர். சந்திரகுப்த மௌரியர் அவருடைய அறிவுசார் திறன்களின் அடிப்படையிலேயே பேரரசர் ஆக்கப்பட்டார். வாழ்க்கை தொடர்பான அனைத்து விஷயங்களைப் பற்றியும் தனது சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ளார். சாணக்கியரின் கொள்கைகள் இன்றும் மிகவும் பயனுள்ளதாக உள்ளன. ஆச்சார்ய சாணக்கியரின் வார்த்தைகளை ஒருவர் ஏற்றுக்கொண்டால், ஒரு நபர் தனது வாழ்க்கையில் இருந்து பல பிரச்சினைகளை அகற்ற முடியும்.

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை என்பது ஒருவரின் வாழ்க்கையில் கிடைக்கும் பெரிய பரிசு போன்றது. எல்லோருக்கும் வாழ்க்கையில் இந்த பரிசு கிடைப்பதில்லை. கணவன்-மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் சமமான அன்பையும் மரியாதையையும், கொடுத்தால்தான் தாம்பத்தியம் மகிழ்ச்சியாக இருக்கும்.
சாணக்கியரின் சில கொள்கைகளைப் பின்பற்றினால், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைப் பெறலாம். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைப் பெற கணவனும் மனைவியும் சில தவறுகளைத் தவிர்க்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். அவை என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அவசியமற்ற கேலி
வாழ்க்கையில் மகிழ்ச்சியும் துக்கமும் சூரிய ஒளி மற்றும் நிழல் போன்றவை. ஒரு மனிதனின் வாழ்க்கையில் பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கும். எனவே கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் புண்படுத்தும் படி பரிகாசம் செய்யக்கூடாது.
வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அவர்கள்தான் காரணம் என்று சாணக்கியர் நம்புகிறார். உங்கள் வாழ்க்கையில் சிறிய விஷயங்களை புறக்கணிக்க கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் இதைச் செய்யாவிட்டால், உங்கள் திருமண வாழ்க்கை விரைவில் முறிந்துவிடும்.
ஒருவருக்கொருவர் பேசாமல் இருப்பது
உங்கள் திருமண வாழ்க்கையில் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும், நீங்கள் இருவரும் ஒருவருகொருவர் பேசாமல் மட்டும் இருந்து விடக்கூடாது. கணவன்-மனைவி இடையே சிறு சிறு சண்டைகள் தவிர்க்க முடியாதவை. அதற்காக நீங்கள் இருவரும் ஒருபோதும் பேசுவதை நிறுத்தக்கூடாது. அப்படிச் செய்தால் சிறு சண்டையே பெரிய சண்டையாக மாறும்.
ஒத்துழைப்பு இல்லாமை
கணவன்-மனைவி இருவரும் சிறிய மற்றும் பெரிய பணிகளில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பாக இருக்க வேண்டும். பெரும்பாலானோர் வீட்டு வேலைகளை பெண்களிடம் மட்டுமே விட்டு விடுகின்றனர். இது முதலில் நன்றாகத் தோன்றினாலும் பின்னர் அது மோதலுக்கு வழிவகுக்கும். திருமண வாழ்வு வெற்றிபெற கணவன்-மனைவியின் ஒத்துழைப்பு அவசியம்.
கோபம்
கோபம் என்பது கணவன்-மனைவி இடையேயான அனைத்து இணைப்புகளையும் முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு உணர்ச்சியாகும். கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத ஒருவர் வாழ்க்கையில் ஏமாற்றத்தை சந்திக்கிறார். சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, ஆண்களும் பெண்களும் தங்கள் கோபத்தைக் குறைத்து, பிரச்சினையை அமைதியாக தீர்க்க வேண்டும்.
செலவுகள்
வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ பணம் மிகவும் அவசியம். கணவன்-மனைவி இடையே பணத்தைப் பயன்படுத்துவது குறித்து தெளிவான புரிதல் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு இடையேயான உறவு மகிழ்ச்சியாக இருக்கும். இருவரில் ஒருவர்பண விஷயத்தில் ஏமாற்ற ஆரம்பித்தாலும், விரைவில் திருமண உறவு முறிந்துவிடும். உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தின் வசதிக்காக செலவு செய்வது நல்லது. ஆனால் தேவையற்ற செலவுகள் நிதி சிக்கல்களை ஏற்படுத்தும். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்படுகிறது.
அந்தரங்க விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வது
கணவன் மனைவி இடையேயான விஷயங்களில் ரகசியம் காக்கப்பட வேண்டும். அவர்கள் தங்களுக்குள் விஷயங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும், ஒருபோதும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது. இது துணைக்கு அவமானத்தை ஏற்படுத்துகிறது மற்றும் திருமண வாழ்க்கையில் சிரமங்களை உருவாக்குகிறது. எனவே எந்த மூன்றாம் நபருக்கு உங்களின் அந்தரங்க ரகசியங்கள் தெரியாமல் பார்த்துக் கொள்ளவும்.
ஒழுக்கமின்மை
தம்பதிகள் இருவருமே கண்ணியத்துடன் வாழ வேண்டும், அதை மீறுவது உறவை சீர்குலைக்கும். ஆணோ, பெண்ணோ தங்கள் கண்ணியத்தை மறந்துவிட்டால், உறவு முறிவதற்கு அதிக நேரம் எடுக்காது. சாணக்கிய நீதியின் கூற்றுப்படி கணவனும் மனைவியும் தங்கள் துணைக்கு துரோகம் செய்யாமல் ஒழுக்கத்துடன் வாழ் வேண்டும்.



Click it and Unblock the Notifications

