Latest Updates
-
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம் -
மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.! -
ஜூலை 20-ல் சூரியன் நட்சத்திரத்தை மாற்றுவதால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இந்த 5 காலை பழக்கங்கள் இதய நோயின் அபாயத்தை அதிகரிக்குமாம்.. உஷார்.. -
400 ஆண்டுக்கு முன் தோன்றி இப்போதும் செயல்பாட்டில் உள்ள உலகின் முதல் வங்கி எது? அதன் முதலாளி யார் தெரியுமா? -
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 02 முதல் இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
மசாலா மினி இட்லி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க..
சாணக்கிய நீதி படி இந்த 6 வகை பெண்களை திருமணம் செய்தால் ஆண்கள் வாழ்க்கை நரகம்தானாம்... ஜாக்கிரதை...!
Chanakya Niti: சாணக்கியர் இந்திய வரலாற்றின் மிகச்சிறந்த பொருளாதார நிபுணராகவும், தலைசிறந்த ஞானிகளில் ஒருவராகவும் விளங்கினார். சாணக்கியர் தனது ஞானத்தையும், அனுபவங்களையும் தன்னுடைய சாணக்கிய நீதி நூலில் தொகுத்தார். சாணக்கிய நீதியில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுரைகள் இந்த நவீன காலத்திலும் கூட ஒரு ஒழுக்கமான மற்றும் பயனுள்ள வாழ்க்கையை வாழ்வது எப்படி என்பது குறித்த நுண்ணறிவுள்ள ஆலோசனைகளை வழங்குகின்றன.
பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் துறைகளில் சாணக்கியர் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தார். மேலும், அவர் அரச நிர்வாகம், இராணுவ உத்தி மற்றும் பொருளாதாரக் கொள்கை குறித்து 'அர்த்தசாஸ்திரம்' என்ற நூலையும் எழுதினார். சாணக்கியரின் கோட்பாடுகளும், அறிவுரைகளும் சக்திவாய்ந்தவை, பயனுள்ளவை, மற்றும் மனித உணர்வுகளைப் பற்றிய ஆழமான புரிதலை வழங்குகின்றன.

ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, ஆண்கள் தங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழ விரும்பினால், சில குறிப்பிட்ட குணமுள்ள பெண்களைத் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார். அவை என்னென்ன குணங்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அறிவில்லாத அழகான பெண்
பொதுவாக பெரும்பாலான ஆண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும்போது, அந்த பெண்ணின் அறிவை விட அவர்களின் தோற்றத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இது அவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறாகும். இருப்பினும், பார்க்க அழகாக இருந்தாலும், அறிவு இல்லாத பெண்களைத் திருமணம் செய்துகொள்வது 'சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொள்வது' என்று சாணக்கியர் எச்சரித்துள்ளார்.
முரட்டுத்தனமான பெண்
ஒரு பெண் முரட்டுத்தனமான குணம் கொண்டவராக இருந்தால், ஒரு ஆண் அந்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்வது பற்றி நினைத்துக் கூட பார்க்கக்கூடாது. ஒருவேளை அவர்கள் பார்ப்பதற்கு தேவதைப் போல தோற்றம் கொண்டவராக இருந்தாலும் அவர்களை திருமணம் செய்து கொள்ளக்கூடாது. இத்தகைய பெண் தன் கணவனை வாழ்நாள் முழுவதும் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தக்கூடும் என்று சாணக்கியர் கூறியுள்ளார்.
பொய் பேசும் பெண்கள்
பொய் என்பது ஒரு மோசமான எதிர்மறையான குணமாகும். எப்போதும் பொய் சொல்லும் ஒரு பெண் குடும்பத்தையே அழித்துவிடுவார்கள், ஏனெனில் அவர்கள் அந்தப் பொய்யைத் தன் கணவனுக்கு எதிராகவே பயன்படுத்துவார் என்று சாணக்கியர் எச்சரித்துள்ளார். இந்த காரணத்திற்காகவே ஆண்கள் அத்தகைய பெண்களைத் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என சாணக்கியர் வலியுறுத்துகிறார்.
வீட்டு வேலை செய்யத் தெரியாத பெண்
பெண்களே ஒரு வீட்டின் ஆணி வேராவார், அவர்களின் திறமையின் அடிப்படையிலேயே குடும்பம் வழிநடத்தப்படுகிறது. வீட்டு வேலைகளை செய்யத் தெரியாத ஒரு பெண் திருமணத்திற்குத் தகுதியற்றவள் என்று சாணக்கியர் கூறுகிறார். இது நவீன உலகில் ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்தாலும், பலரும் இன்றும் இந்த நம்பிக்கையைக் கொண்டுள்ளனர்.
மோசமான குடும்பப் பின்னணி கொண்ட பெண்கள்
ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு, அவரது கடந்த காலத்தைப் பற்றியும், அவர்களின் குடும்பப் பின்னணியும் பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டும் என்று சாணக்கியர் அறிவுறுத்தியுள்ளார். ஒரு பெண்ணின் குடும்பப் பின்னணி மோசமானதாக இருந்தால், அவர் கணவரின் குடும்ப வாழ்க்கையைக் கெடுப்பவராக மாறுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று சாணக்கியர் கூறுகிறார்.
தீய குணம் கொண்ட பெண்
எதிர்மறையான ஆளுமையும், தீய குணமும் கொண்ட பெண்களை திருமணம் செய்வது பற்றி கனவில் கூட நினைக்கக்கூடாது என்று சாணக்கிய நீதி கூறுகிறது. ஒரு தீய குணம் கொண்ட பெண்ணின் இயல்பு, அவரது கணவருடனான உறவை முறித்துக்கொள்வதை எளிதாக்குகிறது. எனவே, ஒரு ஆண் அத்தகைய பெண்ணை திருமணம் செய்து கொள்ளக்கூடாது.



Click it and Unblock the Notifications
