Latest Updates
-
அக்டோபர் 09 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
அக்டோபர் 16-ல் நவபஞ்சம ராஜயோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது! -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் கஷ்டங்களையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேரட் சாதமும், கோவக்காய் வறுவலும் - மதியம் ஸ்கூலுக்கு இந்த காம்போ செய்யுங்க.. பாக்ஸ் காலியா தான் வரும்.. -
1/4 கிலோ வெண்டைக்காய் இருந்தா இந்த மாதிரி மசாலா செஞ்சு பாருங்க - இதுவரை நீங்க சாப்பிடாத சுவையில் இருக்கும் -
வாஸ்துப்படி துளசி செடிகிட்ட இந்த செடிகளை வளர்க்காதீங்க.. இல்ல பண இழப்பு தான் அதிகரிக்கும்.. -
இறந்தவர்களின் மூக்கு மற்றும் காதில் ஏன் பஞ்சு வைக்கப்படுகிறது? கருட புராணம் சொல்லும் ரகசியம் என்ன தெரியுமா? -
இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
மகாளய அமாவாசைக்கு கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவலை எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பாருங்க.. -
செட்டிநாடு சைவ மீன் குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - ஒரிஜினல் மீன் குழம்பே தோத்துரும்
சாணக்கிய நீதி இந்த 4 வகை பெண்கள் ஆண்களின் வாழ்க்கையை நரகமாக மாற்றுவார்களாம் - ஜாக்கிரதை
Chanakya Niti: சாணக்கியரைப் பற்றியோ, அவருடைய கொள்கைகளைப் பற்றியோ யாரும் இந்தியாவில் அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவர் தனது புகழ்பெற்ற நூலான சாணக்கிய நீதியில் மனிதர்களின் நன்மை தீமைகள் பற்றிய விரிவான தகவல்களைத் தந்துள்ளார். ஒரு நபர் தனது நற்பண்புகளால் வாழ்க்கையில் வெற்றியை அடையும் அதே நேரத்தில், வெற்றிகரமான வேலை கூட மோசமான செயல்களால் தோல்வியடைகிறது என்று சாணக்கியர் கூறியுள்ளார்.

சாணக்கியர் வகுத்த கொள்கைகள் இன்றும் உலகிற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன. தனது சாணக்கிய நீதி எனும் நூலில், வாழ்க்கை நிர்வாகம் தொடர்பான பல விஷயங்களை அவர் எடுத்துரைத்துள்ளார். இந்த விஷயங்களைப் புரிந்துகொள்வதன் மூலம், பலவிதமான துன்பங்களைத் தவிர்க்க முடியும். சாணக்கிய நீதியில் ஆண்கள் எப்போதும் நான்கு வகையான பெண்களிடமிருந்து விலகியே இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஏனெனில், அத்தகைய பெண்கள் ஆண்களை நிம்மதியாக வாழவும் விடமாட்டார்கள், சாகவும் விடமாட்டார்கள். அந்த நான்கு வகையான பெண்கள் யார் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பேராசை கொண்ட பெண்களுடன் பழகக்கூடாது
ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, ஆண்கள் பேராசை கொண்ட பெண்களுடன் பழகுவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அவர்களின் முக்கிய நோக்கம் பணமாக மட்டுமே இருக்கும், அவர்கள் மனிதர்களை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். ஒருவரிடம் அவர்கள் எதிர்பார்க்கும் பணம் கிடைத்தவுடன், அவர்கள் மீதான அவர்களின் அன்பும், அக்கறையும் உடனடியாக மாறிவிடும். அத்தகைய பெண்கள் செல்வத்தின் மீதான பேராசையால் யாரையும் கெட்டவராக மாற்றிவிடுவார்கள்.
முன்கோபமுள்ள பெண்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும்
ஒரு பெண் முன்கோபம் உள்ளவராக இருந்தால், ஆண்களும் அந்த பெண்ணிடமிருந்து முற்றிலும் விலகி இருக்க வேண்டும். அத்தகைய பெண்ணுடன் வாழ்வது நரகத்தில் வாழ்வதைப் போன்றது என்று சாணக்கியர் கூறுகிறார். அவர்களுக்குக் கோபம் வரும்போது, யார் முன்னிலையிலும் எதை வேண்டுமென்றாலும் செய்வார்கள். இத்தகைய சூழ்நிலையில், ஒரு ஆணின் சுயமரியாதை பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், சமூகத்தில் அவர் ஒரு கேலிப்பொருளாக மாறிவிடுவார்.
சந்தேகப்புத்தி உள்ள பெண்களுடன் பழக்கூடாது
ஏதாவது ஒரு விஷயத்தில் உங்களை எப்போதும் சந்தேகிக்கக்கூடிய ஒரு பெண்ணுடன் நீங்கள் உறவில் இருந்தால், உடனடியாக அந்த உறவை முறித்துக்கொள்வது நல்லது. அதுதான் உங்கள் வாழ்க்கைக்கு முற்றிலும் நல்லது. உங்களை நிம்மதியாக மூச்சுவிடக்கூட அனுமதிக்காத ஒரு பெண்ணுடன் வாழ்வது, சிறையில் அடைபட்டிருப்பதைப் போன்றது என்று சாணக்கியர் கூறுகிறார். இத்தகைய பெண்கள் உங்கள் மீது முழுமையான ஆதிக்கத்தை செலுத்த விரும்புவார்கள். அவர்களுடன் வாழ்வது என்பது நரகத்தைப் போன்றது.
ஊதாரித்தனமாக செலவழிக்கும் பெண்
தேவைக்கு அதிகமாகச் செலவு செய்யும் பெண்களிடமிருந்தும் எப்போதும் விலகியே இருக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். இத்தகைய பெண்களுடன் நீங்கள் எவ்வளவு அதிக நேரம் செலவிடுகிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களுக்கு அதிக இழப்புகளே ஏற்படும். இத்தகைய பெண்கள் எதிர்காலத்தைப் பற்றி ஒருபோதும் சிந்திக்க மாட்டார்கள். மாறாக, இன்று கையில் இருப்பதை முழுவதுமாக இன்றே செலவழித்துவிடவே விரும்புகிறார்கள். எனவே, இத்தகைய பெண்களிடமிருந்து நீங்கள் எவ்வளவு தொலைவில் விலகி இருக்கிறீர்களோ, அதுவே உங்களுக்கும், உங்களிடமுள்ள செல்வத்திற்கும் நல்லது.



Click it and Unblock the Notifications

