Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
சாணக்கிய நீதி படி இந்த 5 குணமுள்ள பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டமே இருக்காதாம்...!
Chanakya Niti: "வெற்றி பெற்ற ஒவ்வொரு ஆணுக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பார்" என்பது பல நூற்றாண்டுகளாக கூறப்படும் ஒரு பழமொழியாகும். அதேசமயம் மற்றொரு பிரபலமான பழமொழியும் உள்ளது, அது "ஆவதும் பெண்ணாலே, ஆவதும் பெண்ணாலே" என்பதுதான். ஒரு பெண் நினைத்தால் எவ்வளவு வலிமையான ஆணையும் வீழ்த்திவிட முடியும். இதைத்தான் சாணக்கியரும் தனது சாணக்கிய நீதியில் கூறியுள்ளார்.
ஒருவர் தனது வாழ்க்கையில் வெற்றியை அடையும்போது, அவருக்குப் பின்னால் அவரின் மனைவி இருப்பார் என்று சாணக்கிய நீதியில் கூறப்பட்டுள்ளது. அதேசமயம் மனைவியிடம் சில கெட்ட குணங்கள் இருந்தால் அவரின் வீடு நரகமாக மாறுவதுடன், அவருடைய கணவரின் முன்னேற்றமும் தடைபடும் என்று சாணக்கியர் கூறுகிறார். சாணக்கிய நீதியின்படி ஒரு மோசமான மனைவியை எப்படி அடையாளம் காண்பது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஆடம்பரத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் பெண்
தனது சொந்த வாழ்க்கைக்கும், ஆடம்பர வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு பெண் தனது கணவருக்கும், குடும்பத்திற்கும் எந்த முக்கியத்துவத்தையும் கொடுக்க மாட்டார் என்று சாணக்கியர் கூறுகிறார். அத்தகைய பெண்களை மணப்பது ஒருபோதும் மகிழ்ச்சியான வாழ்க்கையைக் கொடுக்காது என்று சாணக்கியர் கூறுகிறார். ஏனென்றால் அவர்கள் எப்போதும் தங்கள் சொந்த உலகில் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். அத்தகைய மனைவிகள் கணவரின் நலனை கருத்தில் கொள்ளாமல், தங்கள் நலன் சார்ந்தே முடிவெடுப்பார்கள்.
பிறரை அவமதிக்கும் பெண்
சாணக்கிய நீதியின் கூற்றுப்படி ஒரு பெண் முரட்டுத்தனமாக நடந்து கொண்டு மற்றவர்களை அவமதிப்பதை வழக்கமாக வைத்திருந்தால், அத்தகைய பெண் ஒருபோதும் தன குடும்பத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியாது. அத்தகைய பெண்கள் தங்கள் கணவர்களையும் குடும்ப உறுப்பினர்களையும் ஒருபோதும் மதிக்க மாட்டார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.
விருந்தினர்களை வரவேற்காத, பெரியவர்களை மதிக்காத ஒரு பெண்ணுடன் வாழ்வது உங்கள் குடும்பத்தினரிடமிருந்தும் உறவினர்களிடமிருந்தும் உங்களை அந்நியப்படுத்தும். அத்தகைய மனைவி உங்களுக்கு அவமானத்தை தேடித்தருவார் என்று சாணக்கியர் கூறுகிறார்.
பொய் சொல்லும் பெண்
தேவையே இல்லாமல் அடிக்கடி பொய் சொல்லும் பெண்கள் தங்கள் கணவர்களுக்கு துன்பத்தைத் தருவார்கள் என்கிறார் சாணக்கியர். அப்படிப்பட்ட மனைவி எப்போதும் தன் கணவனை எரிச்சலூட்ட முயற்சிப்பதாகவும், குடும்பத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும் சாணக்கியர் கூறுகிறார்.
ஏமாற்றும் குணமுள்ள பெண்
சாணக்கியரின் கூற்றுப்படி, மற்றவர்களை ஏமாற்றும் அல்லது தங்கள் சொந்த லாபத்திற்காக மற்றவர்களை பயன்படுத்திக் கொள்ளும் பெண்கள் குடும்பத்தை ஒருபோதும் முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்ல மாட்டார்கள், மாறாக அவர்கள் குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். அத்தகைய பெண்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது.
படிப்பறிவில்லாத பெண்
படிப்பறிவில்லாத, தேவையில்லாமல் பணத்தைச் செலவழிக்கும், தன் குழந்தைகளுக்கு நல்ல குணத்தை சொல்லிக் கொடுக்காத ஒரு பெண் நல்ல மனைவியாக இருக்கமாட்டார் என்று சாணக்கியர் கூறுகிறார். அவர்கள் குடும்பத்தின் நிதிநிலையை நிலையற்றதாக மாற்றுகிறார்கள். மேலும் இந்த பெண்கள் தங்கள் குழந்தைகளை நன்றாக வளர்க்காமல் பெரும் தவறை செய்கிறார்கள். குடும்ப சூழ்நிலை எப்படி இருந்தாலும், பெண்கள் தேவையில்லாமல் பணத்தைச் செலவழித்து, தங்கள் குழந்தைகளைப் புறக்கணிக்கிறார்கள், இது குடும்பச் சிதைவுக்கு வழிவகுக்கும்.



Click it and Unblock the Notifications
