Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
சாணக்கிய நீதி படி இந்த 4 விஷயங்களில் ஒன்னு உங்க வாழ்க்கையில் நுழைஞ்சாலும் உங்கள யாராலும் காப்பாத்த முடியாது..!
Chanakya Niti: பண்டைய இந்தியாவின் சிறந்த இராஜதந்திரகளில் ஒருவரும் சிறந்த பொருளாதார நிபுணருமான சாணக்கியர் மனிதர்களின் வாழ்வியலிலும் சிறந்த அனுபவம் கொண்டவராக இருந்தார். சாணக்கியரின் அறிவுரைகள் ஒருவரின் வாழ்க்கையில் வழிகாட்டியாக இருப்பதுடன் அவர்களை வெற்றியை நோக்கி அழைத்து செல்லவும் உதவும்.
சாணக்கியர் தன் வாழ்வில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு விதிகளை உருவாக்கி மக்களுக்குப் போதித்தார். இப்படிப் பல கொள்கைகளை உருவாக்கி, அதைக் கடைப்பிடிப்பதன் மூலம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்ற முடியும்.

சாணக்கியர் தனது கொள்கைகளில் சில பழக்கவழக்கங்களால் வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படுகின்றன என்று கூறியுள்ளார். தவறான பழக்கத்தை சரியான நேரத்தில் விட்டுவிடாவிட்டால், அது உங்கள் வாழ்க்கையையே பாழாக்கிவிடும்.
சாணக்கியர் சொல்லும் தவறான பழக்கங்கள் என்னென்ன, அது உங்கள் வாழ்க்கையை எப்படி அழிக்கக்கூடும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கர்வம்
சாணக்கியர் ஒருவருக்கு எந்தவிதமான ஈகோவும் இருக்கக்கூடாது என்று கூறியுள்ளார். ஈகோ அனைவரின் வாழ்க்கையின் மிகப்பெரிய எதிரியாகும். யாருடைய நேரமும் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மனிதனின் வாழ்வில் மகிழ்ச்சியும், துன்பமும் மாறி மாறி வரும். அது ஒருபோதும் ஒரே இடத்தில் தங்காது.
ஒருவர் எப்பொழுதும் ஈகோ போன்ற உணர்விலிருந்து விலகி இருக்க வேண்டும். அதனால்தான் எப்போதும் பணிவுடன் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஒருவர் எவ்வளவு பணிவானவராக இருக்கிறாரோ வாழ்க்கையில் அவ்வளவு வெற்றியை அடைவார்கள்.
கோபம்
சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் கோபத்தை மனிதனின் மிகப்பெரிய எதிரியாகக் கருதினார். எப்பொழுதும் கோபத்துடன் இருப்பவர் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்று சாணக்கியர் கூறுகிறார்.
கோபத்தின் காரணமாக, அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்தும் விலகிச் செல்கிறார்கள். யாரும் அவர்கள் அருகில் செல்ல விரும்பபுவதில்லை. அத்தகைய சூழ்நிலையில், கோபமான நபர் படிப்படியாக அனைத்தையும் இழக்கிறார். கோபத்தால் மனிதன் செய்யும் வேலைகளும் தோல்வியில் முடிகிறது.
மோசமான வார்த்தைகள்
இனிமையான வார்தைகளை பேசுபவர்கள் எப்போதும் அனைவராலும் விரும்பப்படுவார்கள் என்பது சாணக்கியரின் நம்பிக்கை. ஆனால் எப்போதும் மோசமான வார்த்தைகளை பேசுபவர்களை யாரும் விரும்ப மாட்டார்கள்.
துன்புறுத்தும் நாக்கு உள்ளவர்களின் ஆளுமை அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைச் சொல்கிறது. மோசமான வார்த்தைகளின் உபயோகித்தால், ஒருவரின் நல்ல விஷயங்கள் கூட கெட்டதாகத் தோன்றத் தொடங்கும். மோசமான வார்த்தைகளை உபயோகிப்பவருடன் பழக யாரும் விரும்புவதில்லை.
தவறான எண்ணங்கள்
மற்றவர்களைப் பற்றி எந்தத் தவறான கருத்தையும் எப்போதும் மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். மனிதர்கள் எப்போதும் மற்றவர்களைப் பற்றி தவறாக நினைத்தால், அவர்களுக்கு நல்லது எதுவும் நடக்காது. ஏனென்றால், மற்றவர்களைப் பற்றி தவறாக நினைப்பது, உங்களுக்கும் தீங்கு விளைவிக்கிறது.
நண்பர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் மோசமாக நடந்துகொள்வது மற்றும் அவர்களிடமிருந்து விலகி இருப்பது ஒரு நபருக்கு வாழ்க்கையை கடினமாக்குகிறது. அப்படிப்பட்டவருடன் யாரும் உறவாட விரும்ப மாட்டார்கள்.



Click it and Unblock the Notifications
