சாணக்கிய நீதி படி நல்ல கணவரிடம் இருக்க வேண்டிய 5 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட இதுல எத்தனை இருக்கு?

Chanakya Niti: பண்டைய இந்தியாவின் மிகசிறந்த அறிஞர்களில் ஒருவர்தான் புகழ்பெற்ற சாணக்கியர். அவருக்கு வாழ்க்கையின் பல்வேறு துறைகளைப் பற்றிய ஆழமான புரிதலும், ஞானமும் இருந்தது. குறிப்பாக கணவன்-மனைவி உறவு பற்றிய அவரது அறிவுரைகள் மற்றும் கருத்துக்கள் இன்றும் புகழ்பெற்றவையாக உள்ளது. சாணக்கியரின் சாணக்கிய நீதியில் ஒரு சிறந்த மனைவியின் நற்பண்புகளுக்குப் பெரிதும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தாலும், ஒரு அமைதியான இல்லத்தை அமைத்துக்கொள்ள ஒவ்வொரு கணவனும் கொண்டிருக்க வேண்டிய நற்பண்புகளையும் சாணக்கியர் குறிப்பிட்டுள்ளார்.

Chanakya Niti Essential Qualities of a Good Husband

கடந்த காலம் மட்டுமல்ல எக்காலத்திலும் மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கைக்கு ஆண்களிடம் இந்த குணங்கள் அவசியம் இருக்க வேண்டும். இந்த பதிவில் ஒரு நல்ல கணவரிடம் இருக்க வேண்டுமென்று சாணக்கியர் பரிந்துரைக்கும் குணங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

ஞானம்

ஒரு குடும்பத்தின் வெற்றிகரமான தலைமைத்துவத்திற்கு ஞானமே முதுகெலும்பாக இருக்கும் என்று சாணக்கிய கூறுகிறார். ஒருவரிடம் அறிவு செல்வம் இருந்தாலும், அதனை விவேகத்துடன் செயல்படுத்தும் ஞானம் கொண்ட ஒரு கணவனால் மட்டுமே, வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் குடும்பத்தை வெற்றிகரமாக வழிநடத்திச் செல்ல முடியும். ஞானம் மிக்க ஒரு கணவன், சிந்தித்து செயல்படுவார்கள், தான் எடுக்கும் முடிவுகளின் நீண்டகால விளைவுகளைப் பற்றி முன்கூட்டியே சிந்திப்பார்கள், மேலும், வாழ்க்கையின் சவால்களை சமநிலையுடனும், தெளிவுடனும் எதிர்கொள்வார்கள். ஞானம் என்பது வெறும் கல்வி சார்ந்ததல்ல என்றும், அது நடைமுறை நுண்ணறிவையும் தொலைநோக்குப் பார்வையையும் உள்ளடக்கியது என்று சாணக்கியர் கூறுகிறார்.

தைரியம்

தைரியம் என்பது சவால்களைச் சந்திக்கும் போது பின்வாங்காமல் அவற்றை உறுதியுடன் எதிர்கொள்ளும் வலிமையாகும். தைரியமான ஒரு கணவன் குடும்பத்திற்குப் பலத்தின் ஆதாரமாக விளங்குவார், அச்சத்தால் சற்றும் நிலைகுலையாமல் அவர் சவால்களை எதிர்கொள்வார். அவர்களின் தைரியம் குடும்பத்தினரிடைய நம்பிக்கையை உருவாக்கும்.

ஒழுக்கம்

ஒழுக்கம் இல்லாதவரிடம் எவ்வளவு திறமை இருந்தாலும் அவர்களால் வாழ்க்கையில் வெற்றியை அடைய முடியாது என்று சாணக்கியர் கூறுகிறார். ஒழுக்கமான கணவர் தங்களின் குழந்தைகளுக்கு ரோல் மாடலாக விளங்குவார். அவர் சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவராக இருப்பார், நேரந்தவராதவராக இருப்பார், வேலையையும், குடும்பத்தையும் சமநிலையுடன் கையாள்பவராக இருப்பார். ஒழுக்கம் என்பது ஒருவர் பொறுப்புள்ளவர் என்பதையும், கட்டளைகளைப் பின்பற்றத் தயாராக இருக்கிறார் என்பதையும் காட்டுகிறது. ஒழுக்கமான கணவன், அன்றாடப் பணிகளைக் கடைப்பிடிப்பதிலும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் ஒரு நல்ல முன்மாதிரியாகத் திகழ்வார். இந்த நிலைத்தன்மை, குடும்பத்தையும் ஒழுங்காக பராமரித்து, நம்பிக்கையையும், நிம்மதியையும் நிலைநிறுத்துகிறது.

பொறுப்புடைமை

சாணக்கிய நீதியில், ஒரு மனிதனின் பொறுப்புடைமை மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. பொறுப்பேற்பது என்பது, ஒரு கணவன் தன் குடும்பத்தின் நலனுக்காகக் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. இதில், குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்தல், அவர்களைப் பாதுகாத்தல் மற்றும் குடும்பத்திற்கு நன்மை பயக்கும் முடிவுகளை எடுத்தல் ஆகியவை அடங்கும். பொறுப்புள்ள ஒரு மனிதன் தன் கடமைகளை ஏற்றுக்கொண்டு, அவற்றை நம்பிக்கையுடன் நிறைவேற்றுவதன் மூலம், ஒரு நம்பகமான வாழ்க்கைத்துணையாகவும், ஒரு நல்ல குடும்பத்தலைவராகவும் தன் நிலையை உறுதிப்படுத்திக்கொள்வார்.

கருணை

கருணை என்பது ஒருவரின் குழந்தைகள் மற்றும் வாழ்க்கைத் துணை மீது காட்டும் பரிவு மற்றும் அன்பான மனப்பான்மையாகும். ஒரு அன்பான கணவன் தன் குடும்பத்தின் உணர்வுப்பூர்வமான தேவைகளை அறிந்து, அவர்களுக்கு உதவுவதன் மூலம், அன்பும் புரிதலும் நிறைந்த ஒரு சூழலை உருவாக்குவார். கருணை குடும்பத்தில் உறவுகளை வளர்க்கிறது மற்றும் அன்பான இல்லறச் சூழலைப் பேணுகிறது என்று சாணக்கியர் வலியுறுத்துகிறார்.

Story first published: Sunday, May 17, 2026, 17:14 [IST]
Desktop Bottom Promotion