Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
சாணக்கிய நீதி படி இந்த விஷயங்கள் தெரிஞ்சா போதும் வாழ்க்கையில் எல்லாரையும் உங்க கண்ட்ரோலில் வைக்கலாமாம்...!
Chanakya Niti: ஆச்சார்ய சாணக்கியர், ஒரு சிறந்த பொருளாதார நிபுணர் மற்றும் ஞானத்தில் சிறந்தவராக விளங்கினார், இப்போதும் தனது கொள்கைகளால் அவர் சமூகத்தை வழிநடத்துகிறார். அவரது புத்திக்கூர்மையின் வலிமையால், ஒரு எளிய குழந்தையான சந்திரகுப்த மௌரியரை நந்த வம்சத்தை அழித்து பேரரசராக மாற்றினார்.
சாணக்கியருக்கு பொருளாதாரம் மற்றும் அரசியல் பற்றிய நல்ல புரிதல் இருந்தது மட்டுமின்றி, ஏறக்குறைய அனைத்து விஷயத்திலும் ஆழ்ந்த அறிவும் இருந்தது. சாணக்கியர் தனது நெறிமுறைகளில் மனித சமுதாயத்தின் நலன் தொடர்பான பல முக்கியமான விஷயங்களைக் கூறியுள்ளார்.
ஆச்சார்யா சாணக்கியர் சிறந்த ராஜதந்திரி என்றும் அழைக்கப்படுகிறார், ஏனென்றால் அவர் தனது இராஜதந்திர உத்திகளால் யாரையும் கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றலுடன் இருந்தார். இன்றைய உலகத்தில் எல்லோரும் மற்றொரு நபரைக் கட்டுப்படுத்த விரும்புகிறார்கள், அதற்காக சிலர் தவறான முறைகளையும் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் சாணக்கியர் தனது நெறிமுறைகளில் சில விஷயங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார், அதன் மூலம் நீங்கள் யாரை வேண்டுமென்றாலும் கட்டுப்படுத்தலாம்.
புத்திசாலிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?
சாணக்கியர் ஒரு புத்திசாலியான நபரைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான விஷயம் என்று கூறுகிறார். அதனை செய்வதற்கு ஒரே ஒரு வழி இருக்கிறது, அது ஒரு ஞானியின் முன் எப்போதும் உண்மையைப் பேசுவதாகும்.
உண்மையைப் பேசுவதன் மூலம் யாரையும் ஈர்க்க முடியும் என்று சாணக்கியர் நம்புகிறார். இதன் மூலம், அந்த நபரை உங்கள் விருப்பம் போல செயல்பட வைக்க முடியும்.
முட்டாளை கட்டுப்படுத்துவது எப்படி?
முட்டாள் மக்களைக் கட்டுப்படுத்த அவர்களை பாராட்ட வேண்டும். ஆச்சார்யா சாணக்கியர் ஒரு முட்டாள் சரியையும் தவறையும் அடையாளம் காண மாட்டான் என்று நம்புகிறார், எனவே நீங்கள் அவரைப் புகழ்ந்தால், அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்து உங்கள் பேச்சை கேட்கத் தொடங்குவார்கள்.
பேராசை பிடித்தவர்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?
பேராசை கொண்டவர்கள் யாருடனும் நெருங்கி பழகுவதில்லை, அவர்கள் செல்வத்தின் மீது மட்டுமே ஆர்வத்துடன் இருப்பார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். எனவே பேராசைக்காரருக்கு பணத்தைக் கொடுத்தாலே எளிதில் அவர்களை அடக்கிவிடலாம்.
ஆணவக்காரர்களை கட்டுப்படுத்துவது எப்படி?
ஆணவக்காரர்களுக்கும், முட்டாளுக்கும் பெரிய வித்தியாசமில்லை. முட்டாளைப் போலவே இவர்களையும் எளிதில் கட்டுப்படுத்தி விடலாம். அவர்களிடம் அமைதியாக பேசுவதன் மூலமும், அமைதியாக இருக்குமாறு கோரிக்கை வைப்பதன் மூலமும் அவர்களைக் கட்டுப்படுத்தலாம்.
குழந்தைகளை கட்டுப்படுத்துவது எப்படி?
குழந்தைகளை கட்டுப்படுத்துவது என்பது பெற்றோருக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவாலாகும். குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து நிறைவான அன்பைக் கொடுத்தாலே போதும் அவர்கள் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருப்பார்கள். அன்பை விட அவர்களை கட்டுப்படுத்தும் பெரிய ஆயுதம் எதுவுமில்லை.



Click it and Unblock the Notifications
