Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் இருக்கும் ஆண்களை பெண்கள் எளிதில் காதலிக்கத் தொடங்கி விடுவார்களாம்...!
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவின் தலைசிறந்த இராஜதந்திரியாக மதிக்கப்படுகிறார். சாணக்கியரின் நீதி சாஸ்திரம் மனித வாழ்க்கையில் நடக்கக்கூடிய அனைத்து விஷயங்களைப் பற்றியும் விளக்குகிறது. ஆனால் சாணக்கிய நீதியில், ஒவ்வொரு விஷயத்திற்கும் சாணக்கியர் என்ன விளக்கம் கொடுத்துள்ளார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
வாழ்க்கையின் அனைத்து விஷயங்களையும் பற்றி விவரிக்கும் போது சாணக்கியர் அதில் காதலைப் பற்றியும் விளக்கியுள்ளார். பெண்கள் பெரும்பாலும் ஆண்களிடம் எதிர்பார்க்கும் குணங்கள் இதில் அடங்கும். அவை என்னவென்பதை நீங்கள் சரியாக தெரிந்து கொண்டால், ஆண்கள் எளிதில் பெண்களின் காதலைப் பெறலாம். பெண்கள் ஆண்களிடம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் விஷயங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

புத்திக்கூர்மை
பெண்கள் பெரும்பாலும் புத்திசாலி ஆண்களை எளிதில் விரும்பத் தொடங்குகிறார்கள். சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் சொல்வதும் இதைத்தான். அத்தகைய ஆண்கள் எந்த ஒரு சூழ்நிலையையும் மிகவும் சாதுர்யமாக எதிர்கொள்வார்கள். அவர்கள் எடுக்கும் முடிவு அப்படித்தான் விரைவாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும். அதனால்தான் பெண்கள் எப்போதும் இந்த குணம் உள்ள ஆண்களை விரும்புகிறார்கள். இது அவர்களின் வாழ்க்கையையே மாற்றிவிடும் என்கிறார் சாணக்கியர்.
கவனம்
சாணக்கிய நீதி படி, பெண்கள் தங்களைக் கவனமாகப் பாதுகாக்கும் ஆண்களை விரும்புகிறார்கள். அதுமட்டுமல்லாமல், அனைத்து விஷயங்களையும் பாதுகாக்கத் தயாராகும் ஆண்களிடம் பெண்களுக்கு தனி அன்பும் பாசமும் இருக்கும். இத்தகைய கவனத்துடன் தங்களைப் பாதுகாக்கும் ஆண்களிடம் பெண்கள் பெரும்பாலும் ஈர்க்கப்படுகிறார்கள்.
பெற்றோருடன் பழகும் விதம்
பெண்கள் நீங்கள் பெற்றோருடன் பழகும் விதத்தையும் அவர்கள் கவனிப்பார்கள். தங்கள் காதலன் அவர்களது பெற்றோருக்கு கொடுக்கும் அக்கறையையும், அன்பையும் தங்கள் பெற்றோருக்கு கொடுத்தால், பெண்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இதைத்தான் அனைத்து பெண்களும் விரும்புகிறார்கள். இதன் மூலம் வாழ்க்கை சொர்க்கம் போல மாறும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
சம உரிமை
சமத்துவம் என்பது பெண்கள் தங்கள் துணையிடம் எதிர்பார்க்கும் முக்கிய குணங்களில் ஒன்றாகும். சாணக்கியரும் இதைத்தான் சொல்கிறார். எந்தவொரு பெண்ணும் தனக்கு சம உரிமையையும், மரியாதையையும் கொடுக்கும் ஆண்களை விரும்புகிறார்கள், அப்படிப்பட்ட ஆண்களுடன் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருக்க விரும்புகிறார்கள் என்று சாணக்கிய நீதி கூறுகிறது.
உழைப்பாளிகள்
பெண்கள் கடின உழைப்பாளிகளை விரும்புகிறார்கள். பெண்கள் எப்போதும் பொறுப்பேற்றுக்கொள்ள தயாராக இருக்கும் ஆண்களை எளிதில் ஏற்றுக்கொள்கிறார்கள், ஏனெனில் அப்படிப்பட்ட ஆண்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் கடின உழைப்பின் மூலம் வாழ்க்கையில் வெற்றியை அடைகிறார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். அவர்கள் வாழ்க்கையில் வெற்றியை எளிதில் அடைந்து விடுவார்கள். அப்படிப்பட்ட ஆண்கள் தங்கள் வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலை நிரப்புவார்கள் என்று பெண்கள் நம்புவதாக சாணக்கிய கூறுகிறார்.



Click it and Unblock the Notifications
