Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
புதாதித்ய ராஜயோகத்தால் பண மழையில் நனையப் போகும் 5 ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
Budhaditya Rajyoga 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றும். அப்படி ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் கிரகங்களின் சேர்க்கையால் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். அப்படி உருவாகும் யோகங்கள் மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் அக்டோபர் 18 ஆம் தேதி சூரிய பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குள் நுழைந்தார். அதைத் தொடர்ந்து அக்டோபர் 19 ஆம் தேதி புதன் துலாம் ராசிக்குள் நுழைந்தார். இதனால் துலாம் ராசியில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது.

இந்த யோகமானது ஒரு சுப யோகம். இதன் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்பட்டாலும், இந்த யோகத்தால் 5 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். குறிப்பாக நல்ல பண பலன்களைப் பெறுவார்கள். இப்போது துலாம் ராசியில் உருவாகியுள்ள புதாதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
கன்னி
கன்னி ராசியின் 2 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அபரிமிதமான பண பலன்களைப் பெறுவார்கள். மேலும் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலை செய்பவர்களின் வருமானம் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் வெற்றி மேல் வெற்றி பெறுவார்கள். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவாக்கம் செய்வதோடு, நல்ல லாபத்தையும் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக இந்த யோகத்தால் பணம் உங்களைத் தேடி வரும்.
தனுசு
தனுசு ராசியின் 11 ஆவது வீட்டில் புதாத்திய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவார்கள். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல பணத்தைப் பெறக்கூடும். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 10 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் முக்கியமான வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகளை தொடங்க முடியும். நல்ல பண பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும்.
கும்பம்
கும்ப ராசியின் 9 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவால் பல வெற்றிகளும், நிதி பலன்களும் கிடைக்கும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக நிறைவேறும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
