Latest Updates
-
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம் -
மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.! -
ஜூலை 20-ல் சூரியன் நட்சத்திரத்தை மாற்றுவதால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இந்த 5 காலை பழக்கங்கள் இதய நோயின் அபாயத்தை அதிகரிக்குமாம்.. உஷார்.. -
400 ஆண்டுக்கு முன் தோன்றி இப்போதும் செயல்பாட்டில் உள்ள உலகின் முதல் வங்கி எது? அதன் முதலாளி யார் தெரியுமா?
Budget 2024: இந்திய யூனியன் பட்ஜெட் பற்றி பலரும் அறியாத சில சுவாரஸ்யமான உண்மைகள்!
Budget 2024: 2024-2025 ஆம் ஆண்டிற்கான மத்திய யூனியன் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டை பாஜக தலைவரும், மத்திய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமன ஜூலை 23 ஆம் தேதி காலை 11 மணியளவில் தாக்கல்ல செய்யவுள்ளார். இது நிர்மலா சீதாராமனின் 7 ஆவது பட்ஜெட் தாக்கலாகும்.
2019 ஆம் ஆண்டில் நிதியமைச்சராக பொறுப்பேற்ற சீதாராமன் கடந்த பிப்ரவரி 01 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படுவதால் இந்த பட்ஜெட் குறித்த ஆவல் மக்களிடையே அதிகம் உள்ளது. இப்போது இந்தியாவின் யூனியன் பட்ஜெட் குறித்த சில சுவாரஸ்யமான விஷயங்களைக் காண்போம்.

முதல் பட்ஜெட்
இந்திய சுதந்திரம் பெற்ற பின் முதன் முதலாக பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் நாட்டின் முதல் நிதியமைச்சரான ஆர்.கே. சண்முகம் செட்டி ஆவார். இந்த பட்ஜெட் 1947 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்திய நாட்டின் முதல் பட்ஜெட்டை 1860 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி ஜேம்ஸ் வில்சன் என்பவர் தாக்கல் செய்தார்.
அதிகப்படியான பட்ஜெட் தாக்கல்
இந்தியாவில் அதிகமாக பட்ஜெட் தாக்கல் செய்தவர் முன்னாள் பிரதம மந்தியான மொரார்ஜி தேசாய் ஆவார். இவர் 1962 முதல் 1969 ஆம் ஆண்டுகளுக்கு இடையே 10 பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்தியாவில் இதுவரை அதிக பட்ஜெட் தாக்கல் செய்தவர் இவரேயாவார். தற்போது நிர்மலா சீதாராமன் இதை முறியடிக்கும் நிலையில் உள்ளார்.
பாஹி கட்டாவில் இருந்து காகிதம் இல்லாத பட்ஜெட்
இந்தியா சுதந்திரம் பெற்றது முதலாக பாஹி கட்டாவில் தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் நிர்மலா சீதாராமன் 2019 ஆம் ஆண்டில் இந்த பாரம்பரிய வழக்கத்தை மாற்றி காகிதம் இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது பட்ஜெட் தாக்கலில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய முக்கியமான மாற்றமாகும். தற்போது பட்ஜெட் டேப்லெட் மூலம் தாக்கல் செய்யப்படுகிறது.
பட்ஜெட் கசிவு
1950-ல் பட்ஜெட் ஆவணங்கள் ராஷ்ட்ரபதி பவனில் இருந்து அதிகம் கசிந்தன. எனவே 1980 முதலாக பட்ஜெட் ஆவணங்களை பிரிண்ட் செய்யும் இடமானது வடக்கு பகுதியின் அடித்தளத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு தான் பட்ஜெட் ஆவணங்கள் பாதுகாப்பாக பிரிண்ட்டிங் செய்யப்பட்டு வந்தன.
இரண்டாவது அதிக பட்ஜெட் தாக்கல்
இந்தியாவிலேயே இரண்டாவதாக அதிகமாக பட்ஜெட் தாக்கல் செய்தவர் முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் 9 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இவர் முதல் பட்ஜெட்டை 1996 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி அன்று செய்தார். கடைசியாக 2014 ஆம் ஆண்டில் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
நீண்ட பட்ஜெட் உரை
இந்தியாவில் நீண்ட பட்ஜெட் உரையை வழங்கியவர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவார். இவர் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 01 ஆம் தேதி அன்று 2 மணிநேரம் 40 நிமிடங்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதுவே இதுவரை இந்தியாவில் நடந்த நீண்ட பட்ஜெட் உரையாகும்.
குறுகிய பட்ஜெட் உரை
1977 ஆம் ஆண்டில் ஹிருபாய் முல்ஜிபாய் படேல் சுமார் 800 வார்த்தைகளில் பட்ஜெட் உரையை முடித்தார். இதுவே இந்தியாவில் நடந்த மிகக்குறுகிய பட்ஜெட் உரையாகும்.
பட்ஜெட் தாக்கல் செய்த பிரதம மந்திரிகள்
இதுவரை இந்தியாவில் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜிவ் காந்தி ஆகியோர் இந்தியாவின் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர்.
பட்ஜெட் தேதி மற்றும் நேரம்
1999 ஆம் ஆண்டில் முன்னாள் நிதியமைச்சல் யாஷ்வந்த் சின்ஹா பட்ஜெட் தாக்கல் செய்யும் நேரத்தை காலை 11 மணியளவில் இருந்து மாலை 5 மணிக்கு மாற்றினார். அதேப் போல் 2017-ல் அர்ஜுன் ஜெய்ட்லி பட்ஜெட் தாக்கல் செய்யும் தினத்தை பிப்ரவரி 01 முதல் பிப்ரவரி கடைசி நாளாக மாற்றினார்.
இன்று பிரதமர் நரேந்திர மோடியின் 3.0 ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11 மணியளவில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான யூனியன் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட் மக்களுக்கு சாதகமாக இருக்குமா, இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



Click it and Unblock the Notifications