Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
இந்தியாவின் முதல் பட்ஜெட்டின் போது இந்தியாவின் மொத்த செலவு எவ்வளவு தெரியுமா? இவ்வளவு கம்மியா இருந்துச்சா?
Union Budget 2024: இன்று இந்தியாவே நேற்று ஒன்றிய நிதி அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டைப் பற்றிதான் பேசிக்கொண்டு இருக்கிறது. இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இடைக்கால பட்ஜெட் என்பதால் சற்று வித்தியாசமாக உள்ளது.
இதுவரை, இந்தியா 77 வழக்கமான பட்ஜெட்டுகளையும், 14 இடைக்கால பட்ஜெட்டுகளையும் கண்டுள்ளது. மொத்தத்தில், 91 யூனியன் பட்ஜெட்கள் இன்றுவரை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, இந்த ஆண்டு 92-வது யூனியன் பட்ஜெட் ஆகும்.

பட்ஜெட் என்ற சொல் மத்திய ஆங்கில வார்த்தையான போகெட்டிலிருந்து பெறப்பட்டது, இது மத்திய பிரெஞ்சு போகெட்டிலிருந்து வந்தது, அதன் அர்த்தம் தோல் பை என்பதாகும். குடியரசுத் தலைவரால் நிர்ணயிக்கப்பட்ட தேதியில் இந்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சரின் பட்ஜெட் உரை பொதுவாக இரண்டு பகுதிகளைக் கொண்டது. பகுதி A நாட்டின் பொதுப் பொருளாதார ஆய்வைக் கையாள்கிறது, பகுதி B வரிவிதிப்பு முன்மொழிவுகளுடன் தொடர்புடையது.
முதல் இந்திய பட்ஜெட்
இந்தியாவில் 1860 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி கிழக்கிந்திய கம்பெனியிலிருந்து பிரிட்டிஷ் அரசிடம் பட்ஜெட் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் இந்திய பட்ஜெட்டை ஜேம்ஸ் வில்சன் பிப்ரவரி 18, 1869 அன்று சமர்பித்தார். திரு வில்சன் இந்திய வைஸ்ராய்க்கு ஆலோசனை வழங்கிய இந்திய கவுன்சிலின் நிதி உறுப்பினராக இருந்தார். அவர் ஒரு ஸ்காட்டிஷ் தொழிலதிபர், பொருளாதார நிபுணர் மற்றும் அரசியல்வாதி ஆவார். அவர் தி எகனாமிஸ்ட் மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியை நிறுவினார்.
சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர்
சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் பதவியானது தொழிலதிபர், கொச்சி மாநிலத்தின் முன்னாள் திவானும், இளவரசர்கள் சபையின் அரசியலமைப்பு ஆலோசகருமான சர் ஆர்.கே.சண்முகம் செட்டிக்கு வழங்கப்பட்டது. அவர் பிரிட்டிஷ் சார்பு நீதிக்கட்சியில் உறுப்பினராக இருந்தார். சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட், பிரிவினை மற்றும் கலவரங்களின் பின்னணியில், நவம்பர் 26, 1947 அன்று திரு. சண்முகம் செட்டியால் தாக்கல் செய்யப்பட்டது.
இந்தியாவின் முதல் பட்ஜெட் ₹171.15 கோடி பட்ஜெட் வருவாயை இலக்காகக் கொண்டது. மேலும், அந்த ஆண்டுக்கான மொத்த செலவு ₹197.29 கோடி என மதிப்பிடப்பட்டது.
இந்திய குடியரசின் முதல் பட்ஜெட்
ஆர்.கே.சண்முகம் செட்டிக்குப் பிறகு ஜான் மத்தாய் பதவியேற்றார். 1949-50 இல் திரு மத்தாய் மிகத் தெளிவான பட்ஜெட் உரையை ஆற்றினார், ஏனெனில் அவர் அனைத்து விவரங்களையும் உறுப்பினர்களுக்குப் படிக்க வேண்டாம் என்று முடிவு செய்தார், அனைத்து விவரங்களுடன் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. பின்னர் பணவீக்கம் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து ஒரு சிறிய விரிவுரையை வழங்கினார்.
இது உண்மையில் ஒன்றுபட்ட இந்தியாவுக்கான முதல் பட்ஜெட் ஆகும், ஏனெனில் இது முன்னாள் சமஸ்தானங்களுக்கான நிதிநிலை அறிக்கைகளை உள்ளடக்கியது மற்றும் திட்டக் கமிஷன் உருவாக்கம் மற்றும் ஐந்தாண்டு திட்டங்களை உருவாக்குவது பற்றிய மிகப்பெரிய செய்தியாகும்.



Click it and Unblock the Notifications
