Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
Budget 2024: 3 புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு அறிவிப்பு..!
Budget 2024: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2024-25 நிதியாண்டுக்கான தனது 7வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நிதியமைச்சர் சீதாராமன் பட்ஜெட்டை அறிவித்து பேசுகையில், " நோயாளிகள் மீதான நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில், மூன்று கூடுதல் புற்றுநோய் மருந்துகளுக்கான சுங்க வரிகளுக்கு விலக்கு அளிக்கிறேன்” என அறிவித்தார்.
"உள்நாட்டு உற்பத்தி திறனை அதிகரிக்க" கட்டம் கட்ட உற்பத்தி திட்டத்தின் கீழ் மருத்துவ எக்ஸ்ரே இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் எக்ஸ்ரே குழாய்கள் மற்றும் பிளாட் பேனல் டிடெக்டர்களில் அடிப்படை சுங்க வரியில் (பிசிடி) மாற்றங்களை சுகாதார அமைச்சர் கூடுதலாக விவரித்தார்.

இதற்கிடையில், மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு 2024-2025க்கான இடைக்கால பட்ஜெட்டில் ரூ.90,658.63 கோடி ஒதுக்கப்பட்டது, 2023-2024க்கான பட்ஜெட்டில் (திருத்தப்பட்ட மதிப்பீடுகள் 80,517.62 கோடியை விட 12.59 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கும் மருத்துவப் பாதுகாப்பு விரிவுபடுத்தப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, தற்போதுள்ள மருத்துவமனை உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி மேலும் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், சிக்கல்களை ஆராய்ந்து பொருத்தமான பரிந்துரைகளை வழங்க ஒரு குழுவை அமைக்கப்படும் என்றும் கூறியிருந்தார்..
மேலும், ”ரூ.90,658.63 கோடியில் ரூ.87,656.90 கோடி சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறைக்கும், ரூ.3001.73 கோடி சுகாதார ஆராய்ச்சித் துறைக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.. இந்த நடவடிக்கைகள், மருத்துவத் துறையில் உள்ளூர் உற்பத்தி மற்றும் புதுமைகளை ஆதரிக்கும் அதே வேளையில், சுகாதாரப் பராமரிப்புக்கான விலை குறைந்த மற்றும் அணுகல் தன்மையை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முன்னெடுப்பின் ஒரு பகுதியாகும்” என்றார்..
அதனைத் தொடர்ந்து , “பீகாரிலும் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பது குறித்து நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 2024 இடைக்கால பட்ஜெட்டின் போது, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களை உள்ளடக்கிய சுகாதார பாதுகாப்பு நீட்டிக்கப்படும் என சீதாராமன் அறிவித்தார். நோய்த்தடுப்பு மற்றும் இந்திரதனுஷ் திட்டத்தை நிர்வகிப்பதற்கான U-WIN தளம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறியிருந்தார்.. இந்தியாவில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு எதிராக 9 முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு தடுப்பூசி போடுவதையும் சீதாராமன் ஊக்குவித்தார்.
இந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22ஆம் தேதியான இன்று தொடங்கி, ஆகஸ்ட் 12ஆம் தேதி முடிவடைகிறது என்பது குரிப்பிடத்தக்கது...



Click it and Unblock the Notifications