Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
ருத்ராட்சம் அணிவதால் கிடைக்கும் அதிசய நன்மைகள் என்ன தெரியுமா? எத்தனை முகம் ருத்ராட்சம் அணிவது நல்லது?
சிவபெருமானின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் ருத்ராட்சம் அணிவது பல நன்மைகளை உள்ளடக்கியது. ருத்ராட்சம் என்பது அடிப்படையில் ருத்ராட்ச மரத்தின் விதை மற்றும் உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பாக ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்கள் இதனை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ருத்ராட்சத்தின் மணிகள் ஒருவரின் மனதில் தீவிர அமைதியையும், மகிழ்ச்சியையும் கொண்டுவருகிறது.

ஒரு ருத்ராட்ச மாலை 108+1 என்ற மங்களகரமான எண்ணைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. விஞ்ஞானரீதியாக, ருத்ராட்ச மாலை உடலின் உணர்வுகளை அமைதிப்படுத்துகிறது. மேலும், இது உயிரியல்ரீதியாக உங்கள் உடலை உறுதிப்படுத்த உதவுகிறது. ருத்ராட்ச மாலையில் பல வகைகள் உள்ளன.ஒரு முகம், 5 முகம், 6 முகம், 8 முகம் என பல வகைகள் உள்ளன.
இந்த ருத்ராட்ச மாலை அணிவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பாதுகாப்பு அளிக்கிறது
ருத்ராட்சம் அனைத்து கெட்ட ஆற்றல் மற்றும் நச்சுத்தன்மைக்கு எதிராக பாதுகாக்கும் ஒரு கவசமாக உள்ளது. ருத்ராட்ச மாலை மற்றும் 5 முக ருத்ராட்சம் உங்கள் வாழ்க்கையில் இருந்து அனைத்து வகையான எதிர்மறை சக்திகளையும் நீக்குகிறது.
ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கிறது
ருத்ராட்ச மாலை அதிக சுறுசுறுப்பு மற்றும் பதற்றம் கொண்டவர்களுக்கு மிகவும் ஏற்றது. அவை உங்கள் வாழ்க்கையைச் சுற்றி நேர்மறை ஆற்றலை வழங்குவதுடன் ஸ்திரத்தன்மையும் உணர்வை வழங்குகின்றன.
உணவு மற்றும் தண்ணீரை சோதிக்க உதவும்
ருத்ராட்ச மாலையை உணவின் மேல் பிடித்துக் கொள்ளுங்கள். அது செழுமையாகவும் நேர்மறையாகவும் இருந்தால், மாலையானது கடிகார திசையில் நகரும். இருப்பினும், அது அதன் ஆற்றலில் எதிர்மறையாக இருந்தால், ருத்ராட்ச மணிகள் எதிரெதிர் திசையில் நகரும். அதே போல் ஒரு மலையின் மீது தண்ணீர் ஊற்றினால், அது தூய்மையானதாக இருந்தால், அது கடிகார திசையில் நகரும், இல்லையென்றால் எதிர் திசையில் நகரும்.
ஒரு முக ருத்ராட்சத்தின் நன்மைகள்
ஒரு முக ருத்ராட்சம் அதன் மிக சக்திவாய்ந்த ஆற்றலுடன் தனிநபர்களுக்கு உதவுகிறது. இது மனதிற்கு அமைதியை அளிக்கிறது மற்றும் செறிவு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மீன ராசிக்காரர்கள் இதை அணிவது மிகவும் நல்லது.
ஐந்து முக ருத்ராட்சத்தின் நன்மைகள்
ஐந்து முக ருத்ராட்சம் மக்களுக்கு மத, ஆன்மீக மற்றும் மன வளர்ச்சியை வழங்குவதன் மூலம் நன்மை அளிக்கிறது. ஐந்து முகங்கள் கொண்ட ருத்ராட்சம் அதிக தன்னம்பிக்கை மற்றும் அவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்த உதவுகிறது.
ஆறு முக ருத்ராட்சத்தின் நன்மைகள்
ஆறு முக ருத்ராட்ச மாலை அதனை அணிபவர்களுக்கு ஞானத்தையும், அறிவையும் அளிக்கிறது. இது அன்றாட வாழ்க்கையின் துயரங்களிலிருந்து மக்களைக் காப்பாற்றுகிறது. மேலும், தொந்தரவு மற்றும் மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையை பெறுவதை ஊக்குவிக்கிறது. இது சுக்கிர தோஷம் என்றும் அழைக்கப்படும் சுக்கிரனின் தீங்கான விளைவுகளை நீக்கி தடையில்லா வெற்றியை வழங்குகிறது.
எட்டு முக ருத்ராட்சத்தின் நன்மைகள்
எட்டு முக ருத்ராட்சம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது சில மர்மமான நோய்களைக் குணப்படுத்த உதவுவதாக கூறப்படுகிறது. இது கெட்ட கனவுகள், தீய ஆவிகள், தோல் மற்றும் நுரையீரல் நோய்களுக்கு எதிராக ஒரு கவசத்தை வழங்குகிறது. இது தவிர, இது நம் வாழ்வில் இருந்து மன அழுத்தம் மற்றும் கவலையை அகற்ற உதவுகிறது.



Click it and Unblock the Notifications



