Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சனிபிரதோஷம்.. நாளை கண்டிப்பாக இதை செய்யுங்கள்.!
ஜாதகத்தில் உள்ள தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் சிறப்பு. எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் தோஷங்கள் அனைத்தும் அகன்றுவிடும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வளர்பிறை சனிக்கிழமையில் வரக்கூடிய திரயோதசி திதிகள், சனி மஹாப்பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது.
அதே போலவே தேய்பிறையில் சனிக்கிழமியில் வரக்கூடிய பிரதோஷமும் சிறப்பு மிக்கது.. அந்த வகையில் நாளை ஆவணி மாதம் தேய்பிறைக்கான சனி பிரதோஷமாகும்.. இந்த சிரப்புமிக்க நாளில் விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் சனி மஹாப்பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4:30 முதல் 6:00 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷம், சிறப்பாக அனைத்து கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது.
இன்று விரதம் இருந்து சிவனை வழிப்பட்டால் சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த மஹா சனி பிரதோஷம். பிரதோஷ காலம் என்பது சிவனுக்கு உகந்த காலமாக இருக்கிறது. இந்த பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுபவர்களுக்கு சகல, சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கி, புண்ணியங்கள் சேரும்..
மேலும் தானம் செய்ய இந்த சனி பிரதோஷம் சிறந்த நாளாக கருதப்படுகிறது. இன்றைய நாளில் நீங்கள் செய்யும் சிறிய தானம் கூட பெருமளவு பலன்களைக் கொடுக்கக் கூடியது. அதனால் சனி பிரதோஷமான நாளை மறக்காமல் அன்னதானம் செய்யுங்கள்.. ரெட்டிப்பு பலன்களைக் கொடுக்கும் இந்த சனி பிரதோஷத்தை தவறவிடாமல் சிவ வழிபாடு மேற்கொண்டு பயனடையுங்கள். பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலுக்கு சென்று அங்கு நடக்கும் அபிஷேகத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
சனிக்கிழமை அன்று வருகிற பிரதோஷத்தை மகா பிரதோஷம் என்று கூறுவார்கள். இந்தநாளில், சிவனாருக்கும் நந்திதேவருக்கும் விசேஷமான பூஜைகள் நடைபெறும். அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அப்போது 16 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அந்த அபிஷேகத்திற்கு தேவவையான பொருட்களைக் கோவிலுக்கு வாங்கி கொடுத்தால் 108 பிரதோஷம் தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்..
மேலும், சனிக்கிழமையில் பிரதோஷம் வந்தால், சனி பகவானுடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டதாகும். அதனால் அன்றைய தினம் விரதம் இருந்தால் சனி தோஷம், ஜாதகத்தில் சனியின் பாதிப்பு காரணமாக பல விதமான துன்பங்களை அனுபவிப்பவர்கள் துன்பங்கள் நீங்கி அமைதி, செல்வம், மகிழ்ச்சி ஆகியவை கிடைக்கும். அத்துடன் இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கும் குழந்தை பாக்கிய இல்லாதவர்களுக்கும் உடனே வரம் கிடைக்கும்..



Click it and Unblock the Notifications