Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா?
ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் முறைகள் வந்துவிட்டாலும் சில முக்கியமான விஷயங்களுக்காகவே வங்கிகளுக்கு நேரடியாக செல்ல வேண்டிய கட்டாயம் வந்துவிடுகிறது. அப்படி நாம் செல்லும் போது கரெக்டாக அன்றுதான் வங்கியின் விடுமுறையாக இருக்கும்.. அது தெரியாமலேயும் விடுமுறைகள் குறித்து அறியாமலும் வங்கிக்கு நேரடியாக சென்றுவிட்டு ஏமாந்துவிடுகிறோம்..
அதனால் வங்கியில் ஏதாவது வேலை இருந்தால் அதனை சீக்கிரம் செய்துவிடுங்கள். அல்லது வங்கியின் இந்த விடுமுறை தேதிகளை கணக்கில் கொண்டு உங்களின் வேலை செய்துக் கொள்ளுங்கள்.. வாங்க ஆகஸ்ட் மாதம் 2024 வங்கிக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பது குறித்த விவரங்களை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் ..

ஆகஸ்ட் மாதத்தில் பல்வேறு காரணங்களால் பல வங்கிகளுக்கு விடுமுறைகள் அளிக்கப்படுகின்றன.. பொதுவாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் மூடப்படும். ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தினம் மற்றும் ரக்ஷாபந்தன் ஆகிய நாட்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகின்றன. இது தவிர.. ஆகஸ்டில் பல திருவிழாக்கள் உள்ளன. அந்த தேதிகளில் வங்கிகளிலும் மூடப்படும்.
ஆகஸ்ட் 2024ல், ரக்ஷாபந்தன், கிருஷ்ண ஜெயந்தி மற்றும் சுதந்திர தினத்தில் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகள அனைத்தும் மூடப்படும். வங்கி தொடர்பான பணிகளை முடிக்க சரியான நாளில் வங்கிக்குச் செல்வது மிகவும் முக்கியம். 2024 ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. அதாவது ஆகஸ்ட் மாதம் 2024, 13 நாட்கள் வங்கியில் வேலை இருக்காது. அது தொடர்பான வங்கி விடுமுறைப் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் 2024க்கான தேசிய மற்றும் பிராந்திய விடுமுறைகளின் முழுமையான பட்டியல் இதோ
1. ஆகஸ்ட் 3 (சனிக்கிழமை) : கேரே பூஜையை முன்னிட்டு அகர்தலாவில் வங்கிகள் மூடப்படும். கேரே பூஜை திருவிழா என்பது திரிபுராவின் ஆண்டு விழா. இது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் கொண்டாடப்படுகிறது.
2. ஆகஸ்ட் 4 (ஞாயிற்றுக்கிழமை) : வார இறுதி காரணமாக அனைத்து மாநிலங்களிலும் வங்கிகள் மூடப்படும்.
3. ஆகஸ்ட் 8 (திங்கட்கிழமை) : டெண்டாங் லோ ரம் ஃபத்.. டெண்டாங் லோ ரம் ஃபத் என்பது ஆண்டுதோறும் நடைபெறும். சிக்கிம் திருவிழா லெப்சா மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
4. ஆகஸ்ட் 10 (சனிக்கிழமை) : 2வது சனிக்கிழமை காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்
5. ஆகஸ்ட் 11 (ஞாயிற்றுக்கிழமை) : வார இறுதி காரணமாக அனைத்து மாநிலங்களிலும் வங்கிகள் மூடப்படும்
6. ஆகஸ்ட் 13 (செவ்வாய்) : தேசபக்த தினம் - தேசபக்த தினம் மணிப்பூர். 1891 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்கு சவால் விட்டு தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் மணிப்பூரில் தேசபக்த தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.)
7. ஆகஸ்ட் 15 (வியாழன்) : சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் அன்று அனைத்து வங்கிகளும் மூடப்படும்
8. ஆகஸ்ட் 18 (ஞாயிறு) : வார இறுதி நாள் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் வங்கிகள் மூடப்படும்
9. ஆகஸ்ட் 19 (திங்கட்கிழமை) : ரக்ஷா பந்தனை முன்னிட்டு திரிபுரா, குஜராத், ஒடிசா, உத்தரகாண்ட், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
10. ஆகஸ்ட் 20 (செவ்வாய்கிழமை) : ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தியை முன்னிட்டு, கொச்சியில் வங்கிகள் மூடப்படும்.
11. ஆகஸ்ட் 24 (சனிக்கிழமை) : நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்
12. ஆகஸ்ட் 25 (ஞாயிறு) : வார இறுதி நாள் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் வங்கிகள் மூடப்படும்
13. ஆகஸ்ட் 26 (திங்கட்கிழமை) : அன்று கிருஷ்ண ஜெயந்தி குஜராத், ஒடிசா, சண்டிகர், தமிழ்நாடு, உத்தரகாண்ட், சிக்கிம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், ஜம்மு, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மேகாலயா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஸ்ரீநகர் ஆகிய அனைத்து மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும்..
ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 13 நாட்கள் வங்கி விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், நீங்கள் நெட் பேங்கிங் மற்றும் ஏடிஎம்களைப் பயன்படுத்தலாம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஆன்லைனில் பணம் செலுத்தலாம். மேலும் இந்த வங்கி விடுமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடலாம்..



Click it and Unblock the Notifications











