Aippasi Horoscope 2026: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன?

Aippasi Matha Rasi Palan 2026: தமிழ் மாதங்களில் மிகவும் முக்கியமான மற்றும் புனிதமான மாதங்களில் ஒன்றான புரட்டாசி மாதம் இப்போது முடிவுக்கு வரப்போகிறது. பண்டிகைகளின் மாதமான ஐப்பசி மாதம் தொடங்கப்போகிறது. இந்து மதத்தின் முக்கியப் பண்டிகைகளான நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகைகள் இந்த மாதத்தில் வருவதால் இது மிகவும் முக்கியமான மாதமாகக் கருதப்படுகிறது.

Aippasi Matha Rasi Palan 2026 List of Lucky Zodiac Signs

ஐப்பசி மாதம் ஆன்மீகரீதியாக மட்டுமின்றி ஜோதிடரீதியாகவும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் பல முக்கியமான ராஜயோகங்களும், கிரக மாற்றங்களும் நிகழப்போகிறது. இதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும். இருப்பினும், சில ராசிக்காரர்களுக்கு ஐப்பசி மாதம் மிகவும் சிறப்பான மாதமாக இருக்கப்போகிறது. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் இது முக்கியமான மாதமாக இருக்கப்போகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு ஐப்பசி மாதம் அற்புதமான மாதமாக இருக்கப்போகிறது. இந்த மாதத்தில் அவர்கள் வாழ்க்கையில் பல நன்மை பயக்கும் விஷயங்கள் நடக்கும். நீண்டகாலமாக அவர்கள் மனதில் இருந்த ஒரு ஆசைகள் நிறைவேறும். இது அவர்களுக்கு மன அமைதியையும், மகிழ்ச்சியையும் தரும். நீங்கள் சமூகத்தில் அதிக மரியாதையைப் பெறுவீர்கள், மேலும் வணிகத்தில் பெரிய வெற்றியைப் பெறுவார்கள்.

அவர்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை அனுபவிக்கப் போகிறார்கள். அவர்களின் அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் துணையாக இருக்கும். இந்த காலகட்டத்தில் அவர்களின் சேமிப்பு அதிகரிக்கும். இது முதலீட்டிற்கு சிறந்த மாதமாகும். எனவே துணிந்து புதிய முயற்சிகளில் இறங்கலாம். ஐப்பசி மாதம் அவர்கள் வாழ்க்கையில் சகல நமைகளும் தேடிவரும்.

சிம்மம்

ஐப்பசி மாதம் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான மாதமாக இருக்கப்போகிறது. இந்த மாத கிரக மாற்றங்களால் அதிக நிதி நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் தேடிவரும். உங்கள் வீடு தொடர்பான பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். மேலும், இந்தப் பெயர்ச்சியின் போது உங்கள் குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகளிடமிருந்து முழுமையான ஆதரவைப் பெறலாம்.

தொழில்ரீதியாக, இந்த மாதத்தில் புதிய வாய்ப்புகளைப் பெறலாம். வேலை தொடர்பாக வெளிநாட்டிற்கு செல்ல வாய்ப்புகள் உருவாகும், மேலும் அவர்களுக்கு கிடைக்கும் புதிய வாய்ப்புகளால் அவர்கள் வாழ்க்கையில் தன்னிறைவும் நிறைந்திருக்கும். இது அவர்களை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்லும் மாதமாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஐப்பசி மாதம் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கப்போகிறது. அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக கிரக மாற்றங்கள் அவர்களுக்கு துணையாக இருக்கும். ஐப்பசி மாதம் மற்றவர்களை மன்னிக்கவும், அவர்களை நேசிக்கவும் வாய்ப்பு கிடைக்கும். அவர்களின் வாழ்க்கையில் நீண்ட காலம் மகிழ்ச்சியைக் கொடுக்கும் மாற்றங்கள் ஏற்படும். மே மாதத்தில் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும், அவர்களின் திறமை மீது தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

அவர்கள் சில புதிய உத்திகளை செயல்படுத்துவதன் மூலம் பெரிய வெற்றியை அடைவார்கள். சமூகத்தில் அவர்களின் நற்பெயரும், அதிகாரமும் அதிகரிக்கும். இது அவர்களுக்கு அதிக பலத்தைத் தரும். ஐப்பசி மாதம் ஆசீர்வாதங்கள் மற்றும் சிறந்த வாய்ப்புகள் அவர்கள் வாழ்க்கையில் வரப்போகிறது.

கும்பம்

ஐப்பசி மாதத்தில் கும்ப ராசிக்காரர்கள் பல விஷயங்களை சாதிக்கப் போகிறார்கள். அவர்களின் வாழ்க்கையில் நிலவி வந்த நிதி சிக்கல்கள் முடிவுக்கு வரும். அவர்கள் வாழ்க்கையின் நீண்டகால ஆசைகளில் பல இந்த காலகட்டத்தில் நிறைவேறும். நிதிப் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் தேடிவரும். திருமண வாழ்க்கையில் அன்பும் பரஸ்பர பாசமும் அதிகரிக்கும்.

அவர்களின் வாழ்க்கைத் துணைக்காக சில ஆச்சரியப் பரிசுகளை வழங்கலாம். இந்த காலகட்டம் அவர்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். நண்பர்களுடன் சேர்ந்து வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரிகள் இந்த மாதத்தில் பெரிய லாபத்தை அடைவார்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Saturday, October 17, 2026, 23:03 [IST]
Desktop Bottom Promotion