2024-ல் நடக்கப் போவதாக கூறியிருக்கும் பாபா வாங்காவின் சில பீதியடைய வைக்கும் கணிப்புகள்!

Baba Vanga's Predictions For 2024 In Tamil: உலகில் பல தீர்க்கத்தரசிகள் உள்ளனர். அதில் மிகவும் பிரபலமான ஒருவர் தான் பல்கேரியாவைச் சேர்ந்த தீர்க்கத்தரசியான பாபா வாங்கா. இந்த பாபா வாங்கா 1911 ஆம் ஆண்டில் பல்கேரியாவில் பிறந்தார். இவருக்கு பிறவியில் இருந்தே பார்வை தெரியாது.

இவருக்கு பார்வை தெரியாவிட்டாலும், கடவுள் இவருக்கு ஒரு சக்தியை அளித்துள்ளார். அது தான் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளைக் கணிப்பது. இதுவரை இவர் கணித்த கணிப்புகளில் 85% நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக இரண்டாம் உலகப்போர் பற்றிய இவரது கணிப்பு முதலாக இவர் உலகளவில் பிரபலமானார்.

Baba Vangas Predictions For 2024 In Tamil

இப்படிப்பட்ட பாபா வாங்கா தனது 85 வயதில் காலமானார். இவர் காலமாவதற்கு முன் தனது குறிப்புகளில் 5079 ஆம் ஆண்டு வரை நடக்கவிருப்பதை தெளிவாக கணித்து குறிப்பிட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டில் கூட இவர் கணித்த 6 கணிப்புகளில் மூன்று நிகழ்ந்துவிட்டன.

இன்னும் ஒரு மாதத்தில் 2024 ஆம் ஆண்டில் நுழையவுள்ளோம். இந்த புதிய ஆண்டில் நிகழவிருக்கும் நிகழ்வுகளைப் பற்றியும் பாபா வாங்கா கணித்துள்ளார். இப்போது 2024 ஆம் ஆண்டில் என்னவெல்லாம் நடக்க போகிறது என பாபா வாங்கா கணித்துள்ள கணிப்புகள் என்னவென்பதைக் காண்போம்.

ரஷ்ய அதிபர் மரணம்

2024 ம் ஆண்டில் நடக்கப் போவதாக பாபா வாங்கா கணித்துள்ள முதல் கணிப்பு, ரஷ்ய அதிபர் புதின் மரணம். அதாவது, 2024 ஆம் ஆண்டில் ரஷ்ய அதிபர் புதின் படுகொலை செய்யப்படலாம். அதுவும் அந்நாட்டு மக்கள் சதி செய்து அவரை படுகொலை செய்யலாம் என்று கணித்து தனது குறிப்பில் தெரிவித்துள்ளார்.

புற்றுநோய்க்கான மருந்து

உலகில் நாள்தோறும் புற்றுநோயால் நிறைய பேர் மரணித்து வருகிறார்கள். அதோடு, பலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டும் வருகிறார்கள். இப்படிப்பட்ட கொடிய புற்றுநோய்க்கான மருந்து 2024 ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்படும் என்று பாபா வாங்கா கணித்துள்ளார். இந்த புற்றுநோய் மருந்தால் உலகில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி

பாபா வாங்காவின் மூன்றாவது கணிப்பு, நிதி நெருக்கடியுடன் தொடர்புடையது. அதாவது, 2024 ஆம் ஆண்டில் உலகம் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்கும். இது உலக பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

உயிரியல் ஆயுதம்

2024 ஆம் ஆண்டில் நடக்கப்போவதாக பாபா வாங்கா கணித்துள்ள மற்றொரு பயங்கரமான கணிப்பு, இந்த ஆண்டில் ஒரு உயிரியல் ஆயுதங்களை உலகின் மிகப்பெரிய நாடு சோதனை செய்யக்கூடும். இம்மாதிரியான சோதனை எங்கு மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிடவில்லை. இருப்பினும், இந்த விஷயம் நடக்க வாய்ப்புள்ளதாக பாபா வாங்கா குறிப்பிட்டுள்ளார்.

சைபர் தாக்குதல்

அடுத்ததாக, 2024 ஆம் ஆண்டில் உலகில் சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும் என்றும், ஹக்கர்கள் மிகவும் அதிநவீனமாகி, பல முக்கியமான உள்கட்டமைப்புகளை குறி வைத்து ஹேர் செய்வார்கள் என்றும் பாபா வாங்கா தனது கணிப்புகளின் மூலம் எச்சரித்துள்ளார். ​

பேரழிவு

பாபா வாங்காவின் மற்றொரு முக்கியமான கணிப்பு 2024 ஆம் ஆண்டில் புவி வெப்பமடைதல் பற்றியதாகும். இந்த ஆண்டில் உலகம் காலநிலை தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும் என்று கணித்துள்ளார். அதாவது, பூகம்பம், வெள்ளம் போன்ற பேரழிவுகள் ஏற்படும் என்றும் கணித்துள்ளார்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Friday, December 1, 2023, 13:49 [IST]
Desktop Bottom Promotion