Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
பாபா வாங்காவின் இந்த ஆபத்தான கணிப்பு விரைவில் பலிக்கப்போகிறதாம்... என்ன நடக்கப்போகுது தெரியுமா?
எதிர்காலத்தை கணிப்பவர்கள் எப்போதுமே பொதுமக்களால் வணங்கப்படுபவர்களாக இருப்பார்கள். அப்படி எதிர்காலத்தை கணித்த தீர்க்கதரிசிகளில் இப்போதும் வணங்கப்படுபவர்களில் முக்கியமான ஒருவர்தான் பாபா வாங்கா. 'பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்' என்று அழைக்கப்படும் பாபா வாங்கா, பல ஆண்டுகளாக தனது எதிர்காலத்தைப் பற்றிய கணிப்புகளுக்கு பெயர் பெற்றவர்.
பாபா வாங்கா 1996 இல் காலமானார். இருப்பினும், அவரது தீர்க்கதரிசனங்கள் இப்போதும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கின்றன. இளவரசி டயானாவின் மரணம் முதல் கோவிட்-19 தொற்றுநோய் வரை, அவர் அனைத்தையும் முன்கூட்டியே கணித்தார். இப்போது, 2026 க்கான அவரது கணிப்புகள் வைரலாகி வருகின்றன, அவை முன்னெப்போதையும் விட இப்போது மிகவும் பிரபலமானதாக உள்ளன.

2026 பற்றிய கணிப்புகள்
202-க்கான அவரது கணிப்புகளில், ஒரு அசாதாரண வால்மீன் நமது சூரிய மண்டலத்தின் வழியாகச் செல்வது குறித்து நாசா ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்ட பிறகு அவரது தீர்க்கதரிசனம் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. ஒரு பெரிய விண்கலம் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் போது, 2026 நவம்பரில் வேற்று கிரக வாசிகளுடன் முதல் தொடர்பு ஏற்படக்கூடும் என்று பாபா வாங்கா கணித்திருந்தார்.
பாபா வாங்காவின் கணிப்பை ஆதரிக்கும் வகையில், ஹார்வர்டின் அவி லோப் போன்ற முந்தைய ஆராய்ச்சியாளர்கள், செயற்கைப் பொருட்கள் பூமியை நெருங்கும் சாத்தியக்கூறுகளை பரிந்துரைத்தனர்.
நாசாவின் அறிக்கை
கடந்த ஜூலை 1 ஆம் தேதி நாசா வெளியிட்ட அறிக்கையில், "ஜூலை 1 ஆம் தேதி, சிலியின் ரியோ ஹர்டாடோவில் உள்ள நாசாவின் நிதியுதவி பெற்ற ATLAS (Asteroid Terrestrial-impact Last Alert System) கணக்கெடுப்பு தொலைநோக்கி, விண்மீன்களுக்கு இடையேயான விண்வெளியில் இருந்து தோன்றிய ஒரு வால்மீனைப் பற்றிய கணிப்புகளை முதன்முதலில் அறிவித்தது. Sagittarius விண்மீன் கூட்டத்தின் திசையிலிருந்து வந்த இந்த விண்மீன்களுக்கு இடையேயான வால்மீன் அதிகாரப்பூர்வமாக 3I/ATLAS என்று பெயரிடப்பட்டுள்ளது.
இது தற்போது இது சுமார் 420 மில்லியன் மைல்கள் (670 மில்லியன் கிலோமீட்டர்) தொலைவில் அமைந்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கூற்று, வேற்றுகிரகவாசிகளுடன் மனித தொடர்பு பற்றிய பாபா வாங்காவின் கணிப்போடு ஒத்துப்போகிறது. அது எவ்வளவு துல்லியமானது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும். 2026 பற்றிய பாபா வாங்காவின் பிற ஆபத்தான கணிப்புகளை மேற்கொண்டு பார்க்கலாம்.
இயற்கை பேரழிவுகள்
பாபா வாங்கா கணிப்பின்படி, உலகம் முழுவதையும் பாதிக்கக்கூடிய பேரழிவு தரும் இயற்கை பேரழிவுகள் தொடர்ச்சியாக இருக்கும். உலகின் சில பகுதிகளில் ஏற்படப்போகும் பாதிக்கும் பூகம்பங்கள், எரிமலைகள் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து அவர் கணித்திருந்தார். இந்த பேரழிவுகள் உயிர்களை மேலும் அச்சுறுத்தும் மற்றும் உலகின் உள்கட்டமைப்பை அழிக்கக்கூடும் என்று அந்த பாபா வாங்கா கணித்துள்ளார்.
மூன்றாம் உலகப் போர்
2026-ல் மிகப்பெரிய போர்கள் நடக்க வாய்ப்புள்ளது. பாபா வாங்கா 2026 இல் மூன்றாம் உலகப் போரை கனிந்துள்ளதாக நம்பப்படுகிறது. அவரது கணிப்புகளின்படி, தைவானை சீனா கைப்பற்றுவதும் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நேரடி மோதலும் போருக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணிகளாக இருக்கலாம். உலகளாவிய பதட்டங்களுக்கு மத்தியில் - ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போர், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம், உக்ரைன் படையெடுப்பு தொடர்பாக அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையிலான பதட்டங்களால் இந்த கணிப்பு நடந்து நிகழ வாய்ப்புள்ளதாக பெரும்பாலான மக்களால் நம்பப்படுகிறது.
AI ஆதிக்கம்
பாபா வாங்காவின் கூற்றுப்படி, 2026 செயற்கை நுண்ணறிவுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கலாம். இயந்திரங்கள் மிகப்பெரிய முக்கிய துறைகளில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும், இது அதிகளவிலான மக்களுக்கு வேலையின்மை, நெறிமுறை சிக்கல்கள் மற்றும் வாழ்வாதாரம் பற்றிய கவலைகளை எழுப்பும்.



Click it and Unblock the Notifications
