Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 செப்டம்பர் 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்! -
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
பாபா வாங்கா கணிப்புகளின் படி 2025-ல் நடக்கப்போகும் பேரழிவுகள் என்னென்ன தெரியுமா? இது நடந்தா அவ்வளவுதான்...!
2024 முடிவுக்கு வரப்போகிறது, 2025 நெருங்கி வருவதால், வரப்போகும் ஆண்டிற்கான பாபா வாங்காவின் கணிப்புகளை நோக்கி அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது, ஏனெனில் கடந்த காலங்களில் பாபா வாங்காவின் பல ஆபத்தான கணிப்புகள் பலித்துள்ளது.
"பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்" என்று அழைக்கப்படும் பாபா வங்கா, தொடர்ந்து சர்ச்சையான மற்றும் அமைதியற்ற தீர்க்கதரிசனங்களை கணித்துள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான அவரது கணிப்புகள் சாத்தியமான மோதல்கள், சுற்றுச்சூழல் நெருக்கடிகள் மற்றும் உலகை மறுவடிவமைக்கக்கூடிய மருத்துவ முன்னேற்றங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக உள்ளது. 2025 ஆம் ஆண்டு நடக்கப்போவதாக பாபா வாங்கா கனிந்துள்ள ஆபத்தான கணிப்புகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஐரோப்பாவில் மோதல்
2025 ஆம் ஆண்டில் நடக்கப்போவதாக பாபா வாங்கா கணித்துள்ள மிகவும் அச்சுறுத்தலான சம்பவம் ஐரோப்பாவில் ஒரு பெரிய அளவிலான நடக்கும் என்பதுதான். இது தற்போதைய போர்கள், குறிப்பாக ரஷ்யா-உக்ரைன் மோதலைச் சுற்றி, பேரழிவுகரமான விளைவுகள் அதிகரிக்கும் என்று சிலர் நம்புகின்றனர். இது மட்டுமின்றி இன்றைய புவிசார் அரசியல் ஆய்வாளர்கள் கதிரியக்க அல்லது அணுஆயுத மோதல்கள் ஏற்படலாம் என்று கணித்துள்ளது பாபா வாங்காவின் அறிவிப்புடன் ஒத்துப்போகிறது.
சைபர் தாக்குதல்
நீர், ஆற்றல் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் உள்ளிட்ட அத்தியாவசிய உலகளாவிய உள்கட்டமைப்பைக் குறிவைத்து ஒரு ஒருங்கிணைந்த சைபர் தாக்குதல் ஏற்படும் என்று பாபா வாங்கா கணித்துள்ளார். இணையத்தால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வரும் காலகட்டத்தில், இந்த கணிப்பு இணையப் போர் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பின் பலவீனம் போன்வற்றால் இது நடைபெறலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பேரழிவுகள்
காலநிலை மாற்றங்களுடன் தொடர்புடைய சுற்றுச்சூழல் பேரழிவுகளும் வாங்காவின் 2025 முன்னறிவிப்பின் ஒரு பகுதியாக உள்ளது. காலநிலையில் ஏற்படப்போகும் தீவிர மாற்றங்களை அவர் கணித்துள்ளார், இது பூமியின் சுற்றுப்பாதையில் ஏற்படும் மாற்றங்களால் உந்தப்பட்டு, பேரழிவு தரும் வறட்சி, காட்டுத்தீ மற்றும் புயல்களுக்கு வழிவகுக்கலாம்.
ஏலியன்கள் வருகை
பாபா வங்கா 2025 ஆம் ஆண்டுக்குள் பூமியை சேராத உயிரினங்கள் பூமிக்கு வருகைத் தரலாம் என்று கணித்துள்ளார். அவரது கணிப்பின்படி, ஏலியன்கள் பூமிக்கு வருகைதந்து, தங்கள் இருப்பை மனிதகுலத்திற்கு உறுதிப்படுத்துவார்கள். இந்த கணிப்பு ஆர்வத்தையும், பயத்தையும் ஒருசேர தூண்டியுள்ளது. பாபா வங்காவின் இந்த தீர்க்கதரிசனம் உண்மையானால், அது பிரபஞ்சத்தைப் பற்றிய நமது புரிதலையே மாற்றிவிடும்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் மருத்துவ முன்னேற்றங்கள்
பாபா வாங்கா 2025 ஆம் ஆண்டுக்கு வழங்கியுள்ள ஒரே நேர்மறையான கணிப்பு மருத்துவத் துறையை பற்றியதுதான். 2025 ஆம் ஆண்டில் பல மருத்துவத் துறையில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்படும் என்று பாபா வாங்கா கணித்துள்ளார், குறிப்பாக ஆய்வகங்களில் முழுமையாக வளர்ச்சி அடைந்த மனித உறுப்புகள் உருவாக்கப்படலாம். இத்தகைய முன்னேற்றங்கள் ஆயுட்காலத்தை கணிசமாக மேம்படுத்தலாம் மற்றும் உறுப்பு மாற்றத்திற்கான காத்திருப்புக் காலத்தைக் குறைக்கலாம்.
பாபா வாங்காவின் 2025 கணிப்புகள் நம்பிக்கை மற்றும் எச்சரிக்கை ஆகிய இரண்டையும் பரப்புகின்றன, இது உலகம் ஏற்கனவே போராடிக்கொண்டிருக்கும் பிரச்சினைகளை பிரதிபலிக்கிறது. 2025 நெருங்குவதால், இந்த கணிப்புகள் உலகளவில் ஆர்வத்தையும், பயத்தையும் தூண்டுகின்றன. பாபா வாங்கா 1996-ல் இறந்திருந்தாலும் அவரது கணிப்புகள் இன்றும் நிறைவேறுவதாக பலரும் நம்புகின்றனர்.



Click it and Unblock the Notifications

