இப்ப தான் நாக சைதன்யா-சோபிதாவின் நிச்சயம் முடிஞ்சது.. அதுக்குள்ள அவர்களின் பிரிவை கணித்த ஜோதிடர்...

Naga Chaitanya And Sobhita Dhulipala Separation: தற்போது டோலிவுட்டின் ஹாட் நியூஸ் என்றால் அது நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம் தான். இவர்கள் இருவருக்கும் சமீபத்தில், அதாவது ஆகஸ்ட் 08 ஆம் தேதி ஐதராபாத்தில் ரகசியமாக நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களது நிச்சயதார்த்த செய்தியை நடிகர் நாகார்ஜுனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்தார்.

இவர்களுக்கு நிச்சயமாகிவிட்ட செய்தி வெளிவந்ததும், பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். அதே சமயம் இந்த நிச்சயதார்த்த தினம் குறித்த வதந்தி ஒன்றும் பரவின. அது நாக சைதன்யாவிற்கும், சோபிதாவிற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நாளில் தான் சமந்தா நாக சைதன்யாவிடம் காதலை தெரிவித்த நாள் என சிலர் ஒரு வதந்தியை பரப்பினர்.

Astrologer s Shocking Predictions About Naga Chaitanya And Sobhita Dhulipala Separation

இந்நிலையில் ஜோதிடர் வேணு சுவாமி நாக சைதன்யா மற்றும் சோபிதா குறித்து புதிதாக ஒன்றை கணித்துள்ளார். அது என்னவெனில், நாக சைதன்யாவும், சோபிதாவும் 2027 ஆம் ஆண்டில் பிரிந்து விடுவார்கள் என்பதாகும். ஏற்கனவே வேணு சுவாமி சமந்தாவும், நாக சைதன்யாவும் சமந்தாவும் விவாகரத்து செய்யப் போவதாக முன்பு கூறியிருந்தார். அதேப் போல் இருவரும் விவாகரத்து செய்துவிட்டனர். இந்நிலையில் ஜோதிடர் இப்படி கணித்து கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் இவர்களது பிரிவுக்கு ஒரு பெண் தான் காரணமாக இருப்பார் என்றும் ஜோதிடர் கூறியுள்ளார்.

டெய்லி கல்ச்சரால் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், ஜோதிடர் வேணு சுவாமி நாக சைதன்யா மற்றும் சோபிதாவின் ஜாதக கட்டத்தை வைத்து, அவர்கள் இருவரும் 2027 ஆம் ஆண்டு வரை ஒன்றாக இருப்பார்கள். ஆனால் ஒரு பெண்ணால் 2027 ஆம் ஆண்டில் பிரச்சனை ஏற்படும். இறுதியில் அது பிரிவை உண்டாக்கிவிடும் என்று கூறினார். அதோடு இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்த தேதி சரியில்லை என்றும் கூறியுள்ளர்.

முக்கியமாக ஜோதிடத்தின் படி, ஜோடி பொருத்தம் குறித்தும் கூறினார். அதில் நாக சைதன்யா மற்றும் சமந்தாவிற்கு 100-க்கு 50 சதவீதம் பொருத்தம் உள்ளது. ஆனால் நாக சைதன்யா மற்றும் சோபிதாவிற்கு 100-க்கு 10 சதவீதம் மட்டுமே பொருத்தம் உள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த சூழ்நிலையில் நாக சைதன்யாவின் பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவானது நாக சைதன்யா ஜாதகத்தை நம்புகிறாரா இல்லையா என்பது பற்றியது. இதில் ராணா டகுபதி ஜோதிடத்தை பற்றிய உங்களின் எண்ணம் என்ன என்று நாகாவிடம் கேட்கிறார். அதற்கு நாக சைதன்யா, நேர்மறையாக இருந்தால் நாம் நம்புவேன்; இல்லை என்றால் இல்லை என்று பதிலளித்தார். இனி என்ன நடக்கும் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

சமந்தாவும், நாக சைதன்யாவும் 2021 ஆம் ஆண்டில் பிரிந்துவிட்ட நிலையில், 2023 ஆம் ஆண்டில் இருந்து நாக சைதன்யாவும், சோபிதாவும் டேட்டிங்கில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தன. மேலும் இவர்கள் இருவரும் விடுமுறை நாட்களில் வெளிநாட்டில் ஒன்றாக சுற்றிக் கொண்டிருப்பதாகவும் வதந்திகள் பரவின.

அதோடு இவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பதற்கான பல போட்டோக்களும் இணையத்தில் வெளிவந்தன. இருப்பினும், இவர்கள் இருவரும் தங்களின் உறவு குறித்து எதுவும் பேசாமல் அமைதி காத்து வந்தனர். ஒருவழியாக 2024 ஆகஸ்ட் 08 ஆம் தேதி இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து, தற்போது அந்த கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர். இந்த ஆண்டின் இறுதியில் இவர்களுக்கு திருமணம் நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Desktop Bottom Promotion