Latest Updates
-
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம் -
மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.! -
ஜூலை 20-ல் சூரியன் நட்சத்திரத்தை மாற்றுவதால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இந்த 5 காலை பழக்கங்கள் இதய நோயின் அபாயத்தை அதிகரிக்குமாம்.. உஷார்.. -
400 ஆண்டுக்கு முன் தோன்றி இப்போதும் செயல்பாட்டில் உள்ள உலகின் முதல் வங்கி எது? அதன் முதலாளி யார் தெரியுமா? -
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 02 முதல் இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
மசாலா மினி இட்லி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க..
அஸ்பாரகஸை தூக்கிப் போட்டு எதிர்காலத்தைக் கணிக்கும் பெண் - 2024-ல் என்னலாம் நடக்கப் போகுதுன்னு சொல்றாங்க..
ஒரு கட்டு அஸ்பாரகஸை மேலே தூக்கிப் போட்டு, அது விழுவதைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைக் கணித்து கூற முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா? என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம், அது உண்மை தான். வெளிநாட்டில் ஒரு பெண்மணி அவ்வாறு கணித்து கூறி வருகிறார். அது தற்போது வைரலாக பேசப்பட்டும் வருகிறது.
67 வயதான ஜெமிமா பேக்கிங்டன் என்னும் பெண்மணி டாரட் கார்டுகள் அல்லது கிரிஸ்டல் பந்துகளைக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்காமல், ஒரு கட்டு அஸ்பாரகஸை மேலே தூக்கி எறிவதன் மூலமும், அது விழுவதைக் கொண்டும் எதிர்காலத்தைக் கணித்து கூறும் அசாதாரண சக்தி தனக்கு இருப்பதாக கூறுகிறார்.

இதுவரை இவர் கணித்த ப்ரெக்சிட்டின் பின்விளைவுகள், ராணியின் மரணம், கோவிட் அச்சுறுத்தல் மற்றும் ஹாரி மேகன் சர்ச்சையால் பிரிட்டிஷ் அரச குடும்பத்திற்குள் ஏற்பட்ட எழுச்சி போன்றவை நடந்ததால், இந்த 2024 ஆம் ஆண்டில் இவரது கணிப்புகளை தெரிந்து கொள்ள பலரும் ஆவலாக இருக்கிறார்கள். நீங்களும் பேக்கிங்டனின் 2024 ஆம் ஆண்டிற்கான கணிப்புகளை தெரிந்து கொள்ள விரும்பினால், தொடர்ந்து படியுங்கள்.
2024 ஆம் ஆண்டிற்கான இவரது கணிப்புகள்
ஜெமிமா பேக்கிங்டனின் 2024 ஆம் ஆண்டிற்கான கணிப்புகள் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. சோமர்செட்டில் உள்ள பாத்தைச் சேர்ந்தவர் தான் ஜெமிமா பேக்கிங்டன். இவர் 2024 ஆம் ஆண்டில் அரச குடும்பத்தில் பிரிவினைகள் அல்லது விவாகரத்து நடக்க வாய்ப்புள்ளது. உலகத் தலைவர்களிடையே மரணங்கள் நிகழும் மற்றும் ஒலிம்பிக்கில் ஜிபி குழு தோல்வியடையும் என்றும் கணித்துள்ளார்.
இது தவிர அமெரிக்கா தனது முதல் பெண் அதிபரை தேர்ந்தெடுக்கும் என்று பேக்கிங்டன் கூறுகிறார். அதாவது அதிபர் தேர்தலில் ஜோ பிடன் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் அதிபர் போட்டியில் வெற்றி பெறமாட்டார்கள் என்று கணித்துள்ளார். முன்னெப்போதும் இல்லாத அளவில் உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படாத இடத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
அதோடு, மத்திய கிழக்கின் நிகழ்வுகள் முறிவு நிலையை அடையும். பிரபலம் என்ற கலாச்சாரம் அழியும் மற்றும் நல்ல சம்பளம் வாங்கும் டிவி பிரமுகர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடும். இங்கிலாந்து கல்வி முறைக்குள் ஒரு பெரிய மாற்றம் ஏற்படும். இங்கிலாந்தில் உள்ள சுற்றுச்சூழல் போராளிகள் ஆதரவை இழப்பார்கள்.
இங்கிலாந்து எஃப்ஏ ஆண்கள் கொண்ட அனைத்து அணிக்கும் அதிக பெண் நடுவர்களை நியமித்து செயல்படும். இணையத்தில் செல்வாக்கு செலுத்துபவர்கள் தங்களுடைய ஆதிக்கத்தை இழக்க நேரிடும், ஏனெனில் மக்கள் தாங்கள் வாழும் உண்மையான உலகம் தான் முக்கியம் என்பதை உணருவார்கள்.
ஈட்டி வடிவிலான அஸ்பாரகஸை தூக்கி எறியும் போது, அது தரையில் விழும் போது கண்ணில் தெரியும் வடிவங்களைப் பொறுத்து 70-95 சதவிதம் வரை துல்லியமாக கணிக்க முடியும் என்றும் கூறுகிறார்.
இப்படி இவர் வெறும் அஸ்பாரகஸை தூக்கி எறிந்து கூறும் கணிப்புக்களைப் பார்க்கும் போது, மனதில் பலவிதமான சந்தேகங்கள் எழுந்தாலும், அவரது கணிப்புக்களுள் சில நடந்துள்ளதால், இவர் கூறுவதை அசால்ட்டாகவும் எடுத்துக் கொள்ள முடியாது என்று பலரும் நினைக்கின்றனர்.



Click it and Unblock the Notifications