Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
குருவால் உருவான அமலா ராஜயோகம்.. இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்ட கதவு திறந்து வாழ்க்கை பிரகாசிக்கப் போகுது..
Amla Rajyoga: ஜோதிடத்தில் குரு பகவான் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார். இந்த குரு பகவான் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அந்நபர் நல்ல செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ்வார். தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியான குரு தற்போது மேஷ ராசியில் பயணித்து வருகிறார்.
அதுவும் செப்டம்பர் 04 ஆம் தேதி முதலாக வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்த வக்ர நிலையில் குரு பகவான் டிசம்பர் 31 ஆம் தேதி வரை இருப்பார். குரு வக்ரமாக மாறியிருக்கும் காலத்தில் அமலா ராஜயோகம் உருவாகியுள்ளது.

அமலா ராஜயோகம் ஒரு மங்களகரமான ராஜயோகம். இந்த ராஜயோகத்தால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல சிறப்பான பலன்கள் கிடைக்கும். குருவினால் உருவான அமலா ராஜயோகத்தால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு அமலா ராஜயோகமானது சிறப்பான பலன்களைத் தரும். குறிப்பாக வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மேலும் முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெற வாய்ப்புள்ளது. பண வரவு சிறப்பாக இருக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு அமலா ராஜயோகமானது நற்பலனை வாரி வழங்கும். முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு சாதகமாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்கள் நல்ல நிதி ஆதாயத்தைத் தரும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு அமலா ராஜயோகமானது வேலையில் நல்ல வெற்றியைத் தரும். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வெற்றியும் லாபமும் கிடைக்கும். நிதி நிலை வலுபெறும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவால் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு அமலா ராஜயோகம் நல்ல நிதி நன்மைகளை அளிக்கும். பணிபுரிபவர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். இந்த ராசிக்காரர்களின் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். முக்கியமாக புதிய வீடு அல்லது கார் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
