Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
தமிழ்நாட்டில்தான் உலகிலேயே ஏலியனுக்காக கட்டப்பட்ட முதல் கோவில் இருக்காம்...எந்த மாவட்டத்தில் இருக்கு தெரியுமா?
இந்தியாவில் லட்சக்கணக்கான கோவில்களும், வழிபாட்டுத்தலங்களும் உள்ளது, அதனால்தான் இந்தியா ஆன்மீக பூமி என்று அழைக்கப்படுகிறது. இந்து மதத்தில் ஆயிரக்கணக்கான கடவுள்களும், அவர்களுக்கு அதைவிட அதிகமாகக் கோவில்களும் உள்ளன. நம் நாட்டில் சில தனித்துவமான கோவில்கள் உள்ளது, அங்கு வித்தியாசமான பிரசாதங்களும் வழங்கப்படுகிறது. ஆனால் உலகிலேயே ஏலியனுக்காக ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளதும், அதுவும் தமிழ்நாட்டில் மட்டுமே இருப்பதும் உங்களுக்குத் தெரியுமா?
சமீபத்தில் ஒரு YouTube வீடியோஇணையத்தில் வைரலானது. அதற்கு முக்கியக் காரணம், மக்கள் சற்றும் எதிர்பாராத வகையில் அமைந்த ஒரு கோயில்தான். சேலம் மாவட்டத்தில் உள்ள ஒருவரால் 'ஏலியன் கடவுள்' என்று விவரிக்கப்படும் ஒரு வித்தியாசமான தெய்வத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயில் அந்தக் காணொளியில் காட்டப்படுகிறது.

இந்த அசாதாரணமான யோசனையும், கட்டுமானமும் பார்வையாளர்களிடையே பல வாக்குவாதங்களைத் தூண்டியுள்ளது. இந்த காணொளியை பலரும் பகிரத் தொடங்கினார்கள், இந்த கோயில் நம்பிக்கை, பக்தி மற்றும் புதிய விஷயங்கள் எப்படி மக்களின் வாழ்க்கையில் நுழைகின்றன என்பது குறித்த விவாதங்களைத் தூண்டியது.
சேலத்தின் ஏலியன் கோவில்
சேலத்தின் மல்லமுப்பம்பட்டி பகுதியில் சித்தர்பாகியா என்பவரால் இந்தக் கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தின் தனித்துவமான அம்சம், தரைக்குக் கீழே 11 அடி ஆழத்தில் உள்ள ஒரு பாதாள அறையில் வைக்கப்பட்டுள்ள தனித்துவமான சிலையாகும். அங்கு மற்ற கோவில்களில் இருப்பது போன்ற சிவன், பார்வதி, முருகன் மற்றும் காளி ஆகியோரின் சிலைகள் இருந்தாலும், இந்த கோவிலின் புகழுக்கு காரணம் அங்குள்ள 'ஏலியன் கடவுள்' சிலைதான். இதன் அமைப்பு ஒரு வழக்கமான கோயிலைப் போல இல்லாதது, இந்த கோவிலைப் பற்றிய ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இதுபற்றி சித்தர்பாகியா கூறுகையில், "அவர் தன்னை ஒரு தொலைநோக்குப் பார்வையாளர் என்று கூறிக்கொள்கிறார். மேலும், அந்த வேற்றுக்கிரக உயிரினத்திடமிருந்து அனுமதி பெற்ற பின்னரே சிலை நிலவறையில் வைக்கப்பட்டதாக அவர் கூறுகிறார். மனிதர்களுக்குப் பல காலத்திற்கு முன்பே வேற்றுக்கிரகவாசிகள் தோன்றியதாக அவர் நம்புகிறார். மேலும், அரசாங்கங்களால் இது வெளிப்படையாக விவாதிக்கப்படாவிட்டாலும், பூமியில் ஏலியன்கள் இருப்பு அதிகரித்து வருவதாகவும் அவர் கூறுகிறார். மேலும் "வேற்றுக்கிரகவாசிகள் இந்த உலகத்திற்குத் தீங்கு செய்ய மாட்டார்கள். அவர்கள் மக்களுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்க மாட்டார்கள். அவர்கள் நன்மை செய்வதற்காகவே நம்மைத் தேடி வருகிறார்கள். அதனால்தான் நான் இந்தக் கோயிலைக் கட்டியுள்ளேன்," என்று அவர் கூறினார்.
"பிரபஞ்சத்தில் சிவனால் படைக்கப்பட்ட முதல் அண்ட தெய்வங்கள் வேற்றுக்கிரகவாசிகளே. அவர்களை வணங்குவது ஒருவரின் வாழ்க்கை, தோற்றம் மற்றும் தொழிலை மேம்படுத்தும். நான் தனிப்பட்ட முறையில் மனோசக்தி வடிவில் வேற்றுக்கிரகவாசிகளைச் சந்தித்துள்ளேன்; அவர்கள் இரண்டு முறை வந்து என்னிடம் பேசியுள்ளனர். இது நிஜம், இதை உலகம் நம்ப வேண்டும்." என்று கூறியுள்ளார். மேலும் எதிர்காலத்தில் இந்த உயிரினங்கள் தங்களை இன்னும் தெளிவாக வெளிப்படுத்துவார்கள் என்றும், மக்கள் இறுதியில் அவர்களின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வார்கள் என்றும் அவர் நம்புகிறார்.
கோயில் பூசாரியின் கூற்றுப்படி, வேற்றுகிரகவாசிகள் திரைப்படங்களில் காட்டப்படுவது போல் இருப்பதில்லை. "திரைப்படங்களில் காட்டுவது போல் வேற்றுகிரகவாசிகளுக்குக் கொம்புகள் இருக்காது. அவர்கள் தோற்றத்தில் மனிதர்களைப் போலவே சாதாரணமாக இருப்பார்கள். அவர்கள் ஆண் மற்றும் பெண் வடிவங்களில் இருக்கும் மனிதர்களைப் போன்றவர்கள்," என்று அவர் கூறினார்.
வீடியோவின் எதிர்வினைகள்
இந்த வீடியோவிற்கான ஆன்லைன் எதிர்வினைகள் நகைச்சுவை, ஆர்வம் மற்றும் குழப்பம் போன்ற அனைத்து உணர்ச்சிகளும் கலந்ததாக இருந்தது. பல பார்வையாளர்கள் இந்த கோயிலைப் பற்றிய தங்களின் ஆர்ச்சரியத்தை கமெண்ட் மூலம் வெளிப்படுத்தினர். ஒருசிலர் இதைப்பற்றி நகைச்சுவையான கருத்துக்களைக் கூறினாலும், சிலர் தங்களின் அவநம்பிக்கையை வெளிப்படுத்தினர். ஒருவர் இதை, "நாம் பின்னோக்கி ஓடுகிறோம்" என்று கருத்து தெரிவித்தார், மற்றொருவர், "இது பைத்தியக்காரத்தனம். வேறு என்ன சொல்வது?" என்று கூறினார்.



Click it and Unblock the Notifications
